பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

மார்வின் ஹாரிஸ்

பன்றி மீது யூதர்களும், முஸ்லீம்களும் கொள்ளும் வெறுப்புக்கு நேர்மாறானது, பன்றி மீது கொள்ளும் அன்பு. பன்றிக்கறியின் ருசியால் வரும் ஆர்வத்தால் மட்டும் வந்ததல்ல இந்த அன்பு. பெரும்பான்மையான சமையல் பாரம்பரியங்களில், முக்கியமாக ஐரோப்பிய, சீன சமையல்களில் பன்றிக்கறி அதன் கறிக்காகவும், அதில் இருக்கும் கொழுப்புக்காகவும், மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பன்றி அன்பு என்பது வேறுவிதமானது. இது மனிதனும் பன்றியும் ஒரே சமூகமாகும் நிலை. பன்றிகளின் இருத்தல் எப்படி ஒரு யூதருக்கும், முஸ்லீமுக்கும் ஒரு மனிதனின் நிலைக்கே பாதகமாக இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக, ஒரு மனிதன், அவன் பன்றி மீது கொள்ளும் அன்பு இல்லாமல், தான் மனிதனாக இருப்பதே அவலம் என்று உணரும் நிலை.

பன்றி அன்பு என்பது, பன்றிகளை தன் குடும்பத்தில் ஒருவராக வளர்ப்பதும், அவைகளோடு அருகில் படுத்து உறங்குவதும், அவைகளோடு பேசுவது, அவைகளைத் தட்டிக்கொடுப்பதும், தடவிக்கொடுப்பதும், அவைகளைப் பெயர் சொல்லி அழைப்பதும், அவைகளை கயிறு கட்டி தோட்டங்களில் அழைத்துச் செல்வதும், அவைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, காயம்பட்டாலோ அழுவதும், குடும்ப உணவிலிருந்து மிகவும் நல்ல உணவுப்பொருட்களை அவைகளுக்குக் கொடுத்து சந்தோஷப்படுவதும் ஆகியன. பசுவின் மீதான இந்துக்களின் அன்பு போல இல்லாமல், பன்றி அன்பில் அந்தப் பன்றிகளை இறுதியில் பலிகொடுத்து முக்கியமான தினங்களில் தின்பதும் சேர்ந்தது. மதச்சடங்கு ரீதியில் பன்றிகளைப் பலிகொடுப்பதும், புனித விருந்து சாப்பிடுவதும் இருப்பதால், பன்றி அன்பு என்பது, இன்னும் பரந்த பார்வையில் மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையேயான உறவுகளை (இந்து விவசாயியையும் பசுவையும் விட அதிகமாக) வலுப்படுத்துகிறது. பன்றி மாமிசத்தை தன் மாமிசமாக உட்கொள்வதும், பன்றியின் ஆத்மாவை, முன்னோர்களின் ஆத்மாவுக்குள் இணைப்பதும் பன்றி அன்பின் உச்சக்கட்டமாகிறது.

உங்களது இறந்த அப்பாவுக்கு மரியாதை தருவதற்காக, அவரது கல்லறையில், நீங்கள் ஆசையுடன் வளர்த்த பன்றியின் தலையில் குண்டாந்தடியால் அடித்து சாகடித்து அந்த இடத்திலேயே கட்டப்பட்ட மண்ணாலான அடுப்பில் சுட்டு விருந்து படைப்பதுதான் பன்றி அன்பு. உப்புப்போட்ட குளிர்ந்த பன்றி வயிற்றுக்கொழுப்பை கைநிறைய அள்ளி, உங்கள் மச்சானின் வாயில் அவன் சந்தோஷமாகவும், விசுவாசமாகவும் இருப்பதற்காக திணிப்பதுதான் பன்றி அன்பு. ஒரு தலைமுறைக்கு ஒரு முறையோ இருமுறையோ கொண்டாடப்படும் மாபெரும் பன்றி விருந்துதான் இந்த பன்றி அன்பு. அப்போது மூதாதையர்களின் பன்றிக்கறி ஆர்வத்தை தீர்ப்பதற்காகவும், சமூக ஆரோக்கியத்துக்காகவும், எதிர்கால போர்களில் வெற்றி கிட்டுவதற்காகவும் உயிரோடு இருக்கும் எல்லா பன்றிகளும் கொல்லப்பட்டு, வயிறு முட்ட முட்ட தின்று தீர்ப்பதுதான் பன்றி அன்பு.

மாரிங் என்ற இந்தப் பழங்குடியினர் வாழ்வது நியூ கினியா தீவில் இருக்கும் பிஸ்மார்க் மலைத்தொடர்களில். இவர்களுக்கும் இவர்கள் வளர்க்கும் பன்றிகளுக்கும் இடையேயான உறவுகளைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து நுணுக்கமான ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராய் ராப்பபோர்ட். அவரது ‘மூதாதையர்களுக்காகப் பன்றிகள்: நியூ கினியா மக்களின் சுற்றுச்சூழலில் சடங்குகள் ‘ (Pigs for the Ancestors: Ritual in the ecology of a New Guinea people) என்ற புத்தகத்தில் மனிதப் பிரச்னைகள் எவ்வாறு பன்றி அன்பால் தீர்க்கப்படுகின்றன என்பதைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். மாரிங் வாழ்க்கையில் இருக்கும் சுற்றுச்சூழலில் மிகக்குறைவாகவே வேறுவிதத் தீர்வுகள் இருக்கின்றன.

மாரிங் இனத்தின் ஒவ்வொரு உப குழுவும் (sub group or clan) 12 வருடங்களுக்கு ஒரு முறை பன்றி விழா வைக்கிறது. இந்தப் பன்றி விழாவுக்காக, பலவிதமான தயாரிப்புகளும், சிறு சிறு பலிகளும் செய்யப்படுகின்றன. இறுதியில் மாபெரும் பலியில் அனைத்து பன்றிகளும் கொல்லப்படுகின்றன. இது ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நடந்து முடிய ஒரு வருடம் ஆகிறது. இதற்கு மாரிங் மொழியில் ‘கைகோ ‘ (Kaiko) என்று அழைக்கப்படுகிறது. கைகோ முடிந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இந்த கைகோ நடத்திய குழு, எதிர் குழுக்களோடு போரில் ஈடுபட்டு, பலர் இறப்பதற்கும், பல நிலங்களைப் பெறுவற்கும் அல்லது இழப்பதற்கும் காரணமாகிறது. போரின் போது இன்னும் பல பன்றிகள் பலியிடப்படுகின்றன. இறுதியில் வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும், தங்களிடம் பன்றிகள் சுத்தமாக இல்லாமல் போய், பன்றிகளைக் கொண்டு மூதாதையர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியாமல் போய்விட்டதைப் பார்க்கிறார்கள். திடாரென போர் நின்றுவிடுகிறது. போரிட்டவர்கள் தங்கள் தங்கள் புனித இடங்களை செப்பனிட்டு அங்கு ரும்பிம் (Rumbim) எனப்படும் சிறிய மரங்களை நடுகிறார்கள். சிறு குழுமத்தில் இருக்கும் ஒவ்வொரு வயதுக்கு வந்த ஆணும், இந்தச் சடங்கில் கலந்து கொண்டு, இந்த ரும்பிம் நடும்போது அதனை கை கொண்டு தொட்டு அங்கு ஊன்றுகிறார்கள்.

தங்களிடம் பன்றிகளே இல்லாமல் போய்விட்டன என்றும் தாங்கள் உயிருடன் இருப்பதற்கே நன்றி சொல்ல வேண்டும் என்று போர் மந்திரவாதி மூதாதையர்களிடம் விளக்குகிறார். இப்போதைக்கு போர் நின்றுவிட்டது என்றும், ரும்பிம் தரையில் நின்று கொண்டிருக்கும் வரை இனி போர் நடக்காது என்றும் மூதாதையரிடம் உறுதி கூறுகிறார். இந்த தருணத்திலிருந்து, உயிரோடு இருப்பவர்களின் எண்ணமும், முயற்சியும், மீண்டும் பன்றிகளை வளர்ப்பதற்கே செலவிடப்படும். இன்னொரு மாபெரும் கைகோ விருந்து வைக்கும் அளவுக்கு, மூதாதையர்களுக்கு நல்ல முறையில் நன்றி சொல்லும் அளவுக்கு, பன்றிக்கூட்டம் பெருத்துவிடும் போது, போராளிகள் ரும்பிம் மரத்தை பிடுங்கிவிட்டு போரில் ஈடுபட நினைப்பார்கள்.

செம்பகா (Tsembaga) என்ற ஒரு குறிப்பிட்ட உபகுழு (clan) பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து, இந்த முழு சுழற்சியும், (கைகோ விருந்து, தொடரும் போர், ரும்பிம் மரம் நடுவது, சமாதானம், புதிய பன்றிக்கூட்டத்தை வளர்ப்பது, ரும்பிம் மரத்தை பிடுங்குவது, புது கைகோ விருந்து எல்லாமே) ஒரு பெரிய மனவியல் நாடகம் என்று தெளிவாக காட்டுகிறார். இந்த சுழற்சியின் ஒவ்வொரு அங்கமும், சிக்கலான, தானாக கட்டுப்படுத்திக்கொள்ளும் ஒரு சுற்றுச்சூழலில் இன்றியமையா அங்கமாக இருக்கிறது. இது செம்பகாவின் மக்கள் தொகையையும், மிருகங்கள் தொகையையும், காட்டில் இருக்கும் உணவுப்பொருட்கள் போன்ற வாழ்க்கை ஆதாரங்களுக்கும், உற்பத்திப் வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு கட்டுப்படுத்துகிறது.

பன்றி அன்பு பற்றி நன்றாகப் புரிந்து கொள்வதற்கு, ‘மூதாதையர்களை திருப்தி படுத்தும் அளவுக்கு பன்றிகள் இருக்கின்றன என்பதை எவ்வாறு மாரிங் பழங்குடியினர் நிர்ணயிக்கிறார்கள் ? ‘ என்ற முக்கியமான கேள்வியைக் கேட்கவேண்டும். சரியான ‘கைகோ ‘ வைப்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகவேண்டும் என்பதையோ, அல்லது எத்தனை பன்றிகள் உருவாக வேண்டும் என்பதையோ மாரிங் பழங்குடி மக்களால் சரியாகச் சொல்லமுடியவில்லை. மாரிங் மக்களிடம் எந்தவிதமான கணக்குகளைப் போடவும், அவர்களது மொழியில் முடியாது. அவர்களது மொழியில் மூன்றுக்கு மேல் எண்களைக் குறிக்க வார்த்தைகள் இல்லை. இதன் காரணமாக பன்றிகள் எண்ணிக்கையைக் கொண்டோ வருடங்களைக் கொண்டோ அவர்களால் எப்போது கைகோ வைப்பது என்பதை கணக்கிடவே முடியாது.

1963ஆம் வருட கைகோ ஆரம்பிக்கப்பட்டபோது, பேராசிரியர் ராப்பபோர்ட் செம்பகா உபகுழுவிடம் 169 பன்றிகளும், சுமார் 200 மனிதர்களும் இருந்தார்கள் என்று எண்ணினார். இந்த எண்களுக்கு பொருள், அவர்கள் செய்யும் வேலையிலும், அவர்கள் எந்த இடங்களில் குடியிருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது.

பன்றிகளை வளர்ப்பதும், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்குகளைப் பயிர் செய்வதும், மாரிங் பழங்குடியின் பெண்கள் மட்டுமே செய்யும் வேலை. பன்றிக்குட்டிகள் மனிதக்குழந்தைகளுடன் இந்தப்பெண்களால் தோட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அவைகள் பால் குடிப்பதை நிறுத்தியவுடன், அவைகள் செல்ல நாய்கள் போல இந்தப் பெண்களின் பின்னால் வரும்படிக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றன. நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இந்தப் பன்றிகள் காட்டுக்குள் ஓடி அங்கு கிடைக்கும் பொருட்களை தாங்களே தேடி தின்னும்படிக்கு அனுப்பப் பட்டு விடுகின்றன. சாயுங்காலம், இந்தப் பெண்கள் இந்தப்பன்றிகளை அழைக்கிறார்கள். இவை மீண்டும் வீடுகளுக்கு வந்து அங்கிருக்கும் மீதமான சர்க்கரைவள்ளிக்கிழங்குகளையும் மற்ற கிழங்குகளையும் தின்னும்படிக்குக் கொடுக்கிறார்கள் இந்தப் பெண்கள். ஒவ்வொரு பெண்ணின் பன்றிகளும் பெரியவைகளாகும்போதும், அந்தப்பன்றிகளின் எண்ணிக்கைகளும் அதிகமாகும்போதும், இந்தப் பெண் இன்னும் அதிகமாக அவைகளுக்கு சாயுங்காலச் சாப்பாடு கொடுப்பதற்கும், அவைகளைப் பராமரிப்பதற்கும் நேரத்தைச் செலவிட வேண்டும்.

ரும்பிம் மரம் தரையில் இருக்கும் வரைக்கும், ஒரு செம்பகா பெண், தோட்டத்தின் அளவைப் பெரிதாக்கவும், இன்னும் நிறைய சர்க்கரை வள்ளிக்கிழங்குகளைப் பயிரிடவும் கட்டாயப்படுத்தப்படுகிறாள் என்பதை ராப்பபோர்ட் கண்டார். அடுத்த கைகோ வரவழைக்க அவள் ஏராளமான பன்றிகளை கூடியவிரைவில் (எதிரிகள் அவர்களது கைகோ வைப்பதற்கு முன்னர்) வளர்க்கவேண்டுமென்ற கட்டாயத்தில் வேலை செய்கிறாள் என்பதையும் கண்டார். வளர்ந்த பன்றி ஒன்று சுமார் 135 பவுண்டு எடையுடன், அவைகள் காட்டில் தின்பது தாண்டியும், அவைகளுக்கு சாப்பாடு போடவும் பராமரிக்கவும், ஒரு செம்பகா பெண், ஒரு செம்பகா ஆணுக்குச் செய்யும் அளவுக்கு நேரத்தையும் வேலையையும், ஒவ்வொரு பன்றிக்கும் செய்யவேண்டும் என்பதைக் கண்டார். 1963இல் ரும்பிம் மரம் பிடுங்கப்பட்டபோது, மிக ஆர்வமான தெம்பான செம்பகா பெண், சுமார் 6 பெரிய பன்றிகளை பராமரிப்பதோடு, வீட்டையும் தோட்டத்தையும் பார்த்துக்கொண்டு, சமையலையும், குழந்தைகள் வளர்ப்பதையும், சிறிய வீட்டுப்பொருட்களான, பைகள், துண்டுகள் போன்றவற்றையும் உற்பத்திச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் தன் ஒரு நாள் இருக்கும் சக்தியில் 50 சதவீதம், இந்தப் பன்றிகளைப் பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே செலவிடுகிறாள் என்பதை கணக்கிட்டார் ராப்பபோர்ட்.

பன்றிகள் அதிகமாவதோடு, மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. முக்கியமாக சென்ற போரில் வெற்றியடைந்த உபகுழுவின் தொகை. பிஸ்மார்க் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இருக்கும் காடுகளின் பகுதிகளை வெட்டியும் எரித்து உருவாக்கும் இடங்களில் தோட்டங்கள் போட்டு அங்கு பயிர் செய்து மனிதர்களும் பன்றிகளும் உண்ணவேண்டும். மற்ற பூமத்தியரேகைக் இடங்களில் இருக்கும் தோட்டவேலை சமூகங்களைப் போலவே, இங்கும் அந்தத் தோட்டத்தின் வளமை மரங்களை எரித்த சாம்பல் தரும் நைட்ரஜன் சார்ந்தே இருக்கிறது. இந்தத் தோட்டங்கள், மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பயன் தராது. மரங்கள் இல்லாமல் போனதால், கொட்டும் மழையில் நிலத்தில் இருக்கும் நைட்ரஜனும், நிலத்தில் இருக்கும் மற்ற முக்கியதாதுக்களும் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன. இதனால், காட்டில், இன்னொரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் மரங்களை எரித்து அங்கு தோட்டம் போட்டே ஆகவேண்டும். ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னர், பழைய தோட்டம் இருந்த இடத்தில் மரங்கள் வளர்ந்து செழித்திருக்கும். இப்போது பழைய இடத்தை எரித்து அங்கு தோட்டம் போட ஆரம்பிக்கலாம். காட்டை விட, இந்த பழைய தோட்டங்களை எளிதாகவும் சுத்தப்படுத்தி தோட்டம் போடுவதும் எளிது. பன்றிகள் மனிதர்கள் எண்ணிக்கை அதிகமாகும்போது, பழைய தோட்ட இடத்தில் முழுமையாக மரங்கள் வளர்ந்திருக்காது. ஆகவே அவர்கள் சரியான காட்டையே தேர்ந்தெடுத்து எரித்து தோட்டம் போடவேண்டும். நிறைய காடு இருந்தாலும், சரியான காட்டை சுத்தம் செய்வதற்கு மனிதர்கள் (பழைய தோட்டத்தை சுத்தம் செய்வதை விட) அதிகமாக உழைக்க வேண்டும்.

புதிய தோட்டங்களை உருவாக்கவும், சுத்தம் செய்யவும், மரங்களை எரிக்கவும் கடமைப்பட்ட ஆண்கள், நன்றாக வளர்ந்த மரங்களை வெட்ட அதிகம் உழைக்க வேண்டும். ஆனால் இதில் பெண்களுக்குத்தான் இன்னும் கஷ்டம். ஏனெனில், புதிய தோட்டங்கள் ஊரை விட்டு தொலைவுக்கே சென்று கொண்டிருக்கும். பெண்கள், பெரிய தோட்டங்களை பராமரிக்கவும், நிறைய பயிர்களை நடவும் வேண்டியது ஒரு பக்கம் இருந்தாலும், நிறையக் குழந்தைகளையும், பன்றிக்குட்டிகளையும் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் நடப்பதிலேயே அதிக நேரம் செலவாகும். அதைவிட இன்னும் அதிகமான சர்க்கரைவள்ளிக்கிழங்குகளையும் பயிர்களையும் எடுத்துக்கொண்டு நெடுந்தூரம் நடந்து வீடு திரும்பி வரவேண்டும்.

வெளியே போய் தின்றுவிட்டு வரவேண்டி அனுப்பப்பட்ட பெரிய பன்றிகள், அவ்வப்போது, தோட்டங்களில் புகுந்து தின்பதை தடுப்பதற்கும், தோட்டங்களைக் காப்பாற்றவும் இந்தப்பெண்கள் நிறைய நேரம் செலவு செய்யவேண்டும். ஒவ்வொரு தோட்டத்தைச் சுற்றியும் நன்றாக உயர்ந்த வேலி போடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், பசி கொண்ட 150 பவுண்டு எடையுள்ள பெரிய பன்றி இந்தத் தோட்ட வேலிக்கு நல்ல போட்டி. பன்றிக்கூட்டம் அதிகமாகும்போது, தோட்டங்களுக்குள் உடைத்துக்கொண்டு பன்றிகள் நுழைவதும் பயிர்கள் அழிவதும் அடிக்கடி நடக்கிறது. வெறொரு விவசாயியால் பிடிக்கப்பட்ட பன்றி சில நேரங்களில் கொல்லவும்படலாம். இது பக்கத்து வீட்டுக்காரர்களிடையே பிரச்னையை உருவாக்கி, திருப்தி இன்மையை அதிகரிக்கிறது. பன்றிகள் அதிகமாவதை விட, பன்றிகளால் நடக்கும் பிரச்னைகள் இன்னும் அதிகவேகத்தில் அதிகமாகிறது என்பதை ராப்பபோர்ட் கண்டார்.

இது போன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கும், தோட்டங்களுக்கு அருகில் செல்வதற்கும், மாரிங் பழங்குடியினர் தாங்கள் வாழும் ஊரை விரிவு படுத்திக்கொண்டே போகிறார்கள். இவ்வாறு விரிவு படுத்துவது, சண்டை வரும்போது உபகுழுவின் பாதுகாப்பை குறைத்துவிடும் என்பதால், இன்னும் மக்களின் மனநடுக்கம் அதிகரிக்கிறது. பெண்கள் அதிகம் வேலை செய்ய வேண்டியிருப்பதாக குறைசொல்ல ஆரம்பிக்கிறார்கள். கணவனோடு சண்டைபோடுகிறார்கள். குழந்தைகளை அடிக்கிறார்கள். ஆண்கள் ‘போதுமான பன்றிகள் ‘ இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். ரும்பிம் எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது என்று போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். பெண்கள் இன்னும் சத்தமாக குறைகூற ஆரம்பிக்கிறார்கள். இறுதியாக ஆண்கள் கூடி, கைகோ பண்ணும் நேரம் வந்துவிட்டதாக (பன்றிகளை எண்ணாமலேயே) ஒருமனதாக முடிவுக்கு வருகிறார்கள்.

1963இல் நடந்த கைகோவில் செம்பகா உபகுழு, எண்ணிக்கைப்படி சுமார் மூன்றில் இரண்டு பங்கு பன்றிகளை (எடைக்கணக்கில் சுமார் எட்டில் ஏழுபங்கு பன்றிகளை) கொன்றார்கள். இந்தக் கறியில் பெரும்பான்மை, வருடம் முழுவதும் நடக்கும் கைகோவில் பங்குபெற அழைக்கப்பட்ட சொந்தக்காரர்களுக்கும், மச்சான்களுக்கும், ராணுவ தோழமை உபகுழுக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது. கைகோவின் உச்சகட்டத்தில், 1963 நவம்பர்7, 8 நாட்களில் மட்டும் சுமார் 96 பன்றிகள் கொல்லப்பட்டு அவைகளின் மாமிசமும், கொழுப்பும், சுமார் 2 அல்லது மூன்றாயிரம் மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வினியோகிக்கப்பட்டது. செம்பகா உபகுழு மக்கள் சுமார் 2500 பவுண்டு கறியையும் கொழுப்பையும் தங்களுக்காகவே வைத்துக்கொண்டார்கள். இது செம்பகா உபகுழு மக்களான ஆண், பெண் குழந்தைகளுக்கு ஆளுக்கு சுமார் 12 பவுண்டு கறி. இதை அவர்கள் அடுத்த 5 நாளும் தொடர்ந்தாற்போல கட்டுப்படுத்தாமல் தின்று கொண்டே இருந்தார்கள்.

மாரிங் பழங்குடியினர், இந்த கைக்கோ விழாவை, தங்கள் தோழமையாளர்களுக்கு பரிசளிக்கவும், முன்பு செய்த உதவிகளுக்கு நன்றியாகவும், இனி வரும் போர்களில் கொடுக்கப்போகிற உதவிகளுக்கு நம்பிக்கையாகவும் இந்த கறி வினியோக கொண்டாட்டத்தைச் செய்கிறார்கள். இந்த உபகுழுவின் தோழமை உபகுழுக்களும் இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம், இந்த உபகுழு வளமையாக இருக்கிறதா, தொடர்ந்து இந்த உபகுழுவுக்கு உதவி செய்வதில் ஏதும் பிரயோசனம் உண்டா என்பதைக் கண்டறியவும் பயன் படுத்திக்கொள்கிறார்கள். இந்த தோழமையாளர்களுக்கும் பன்றிக்கறி தின்ன ஆசையாகத்தான் இருக்கிறது. அதுவும் ஒரு காரணம்.

விருந்தினர்கள் நன்றாக உடை உடுத்தி அலங்கரித்து விழாவுக்கு வருகிறார்கள். சிப்பிகளும் சங்குகளும் சேர்ந்த கழுத்துமாலையும், சங்குகளால் செய்யப்பட்ட சிலம்பும், கை மணிக்கட்டுகளில் அலங்காரங்களும், கோடுபோட்ட இடுப்பு வேட்டியும், அழகாக இலைகளால் கட்டப்பட்ட இடுப்பு அலங்காரமும் அணிந்து வருகிறார்கள். கழுகு இறக்கைகளும், கிளியின் இறக்கைகளும் சேர்த்துக் கட்டப்பட்ட கிரீடமும், அதன் மேல் மயில் போன்ற ‘Bird of Paradise ‘ பறவையின் பஞ்சடைத்த உருவத்தை அணிந்தும் வருகிறார்கள். ஒவ்வொரு மனிதனும், தன் முகத்தை தனிப்பட்ட முறையில் வர்ணம் தீட்ட பல மணிநேரம் செலவு செய்கிறான். தன் மூக்கின் வழியே அழகான மயில் இறகு போன்ற மேற்கண்ட பறவை இறக்கையை அணிகிறான். நடனமாடவேண்டி சிறப்பாக கட்டப்பட்ட நடன இடத்தை அலங்கரிக்கிறார்கள். ஒருவரிடம் ஒருவர் தங்கள் அலங்காரத்தைக் காண்பித்துக் கொள்கிறார்கள். பாலுறவு ரீதியில் பெண்களைக் கவரவும், ஆண்களோடு ராணுவ ஒப்பந்தம் போடவும் இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

1963இல் ராப்பபோர்ட் பார்த்த கைகோவுக்கு சுமார் ஆயிரம் மக்கள் வந்திருந்தார்கள். நடன அரங்குக்கு அருகாமையில் கட்டப்பட்ட மூன்று பக்க கட்டடத்தின் ஜன்னல்களுக்குப் பின்னால் உப்புப்போட்ட பன்றிக்கொழுப்பு பரிசளிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

ராப்பபோர்ட் வரிகளில்..

‘பல ஆண்கள் அந்தக்கட்டிடத்தின் உச்சியில் ஏறி பெருமைப்படுத்தப்படும் ஒவ்வொருமனிதரின் பெயரையும், அவரது உபகுழுவின் பெயரையும் அறிவித்தார்கள். பெருமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களது பெயர் கூறப்படும்போது, தன்னுடைய கோடாலியை வீசிக்கொண்டு கத்திக்கொண்டு அந்த ஜன்னலின் முன் பாய்ந்தார்கள். அவரது ஆதரவாளர்கள் அவருக்குப்பின்னால், போர்முழக்கம் செய்து கொண்டும், போர் முரசங்களை அடித்துக்கொண்டும், வீரவாட்களை வீசிக்கொண்டும் அவருக்கு மிக நெருங்கி நடந்து வந்தார்கள். சென்ற போரில் இந்த நபர் உதவிய செம்பகா ஆள், தன்னுடைய கை நிறைய பன்றிக்கொழுப்பை எடுத்து பெருமைப்படுத்தப்பட்டவரது வாயில் திணித்தார். இன்னொரு பையில் நிறைய பன்றிக்கொழுப்பு எடுத்து அதனை அந்த நபர் கையில்கொடுத்து, பின்னால் வரும் அவரது ஆதரவாளர்களுக்கு கொடுக்க வேண்டி கொடுக்கிறார். தனது வாயில் பன்றிக்கொழுப்பு தொங்க, பெருமைப்படுத்தப்பட்டவர் பின் வாங்குகிறார். அவரோடு கூட அவரது ஆதரவாளர்களும் சத்தம்போட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும், போர் முழக்கம் செய்து கொண்டும், போர் முரசு அடித்துக்கொண்டும், ஆடிக்கொண்டும் செல்கிறார்கள். அடுத்தபடி கூப்பிடப்படும் ஆள் உடனே வருகிறார். சில சமயம் பின்வாங்குபவர்களும், பெருமைபெற்றுக்கொள்ள வருபவர்களும் இடித்துக்கொள்கிறார்கள் ‘

மாரிங் பழங்குடிகள் வாழும் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளுக்குள்ளே, இந்த அனைத்துக்கும் சரியான நடைமுறைக்காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக மாரிங் பழங்குடி மக்களிடையே தினசரி சாப்பாட்டில் கறிச்சாப்பாடு அதிகம் இல்லாததால், அவர்கள் பன்றிக்கறிக்கு ஆசைப்படுவது சரியாக எதிர்ப்பார்க்கக்கூடியதே. அவர்கள் தங்களது சாப்பாட்டில், காய்கறிகளுடன், சிலவேளைகளில், எலிகளையும், தவளைகளையும் சேர்த்துக்கொண்டாலும், வீட்டில் வளர்க்கப்படும் பன்றியே மிகச்சிறந்த உயர்தர கொழுப்பும் புரோட்டானும் தரவல்லது. அதனால் மாரிங் மக்கள் மிகவும் மோசமான புரோட்டான் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என எடுத்துக்கொள்ளக்கூடாது. கிழங்குகளிடமும், இன்னும் பல தாவர உணவுகளிடமும், அவர்களுக்குத் தேவையான புரோட்டான் நிச்சயம் கிடைக்கிறது. ஆனால் தேவைக்கு அதிகமாக் இந்த தாவர உணவு புரோட்டான் இல்லை. ஆனால், பன்றிக்கறியின் சிறப்பே வேறு. தாவர உணவை விட மாமிச உணவு மிகவும் குறைந்த பருமாணத்தில் அதிக புரோட்டான் தரவல்லது. இதனாலேயே, தாவர உணவிலேயே (பால், முட்டை மீன் போன்ற எதுவும் இல்லாத) வாழும் சமூகங்களிடையே மாமிச உணவு மிகவும் ஆசையும் ஆர்வமும் ஊட்டக்கூடியதாக இருக்கிறது.

இதைவிடவும், மாரிங் பழங்குடியினர் பன்றிகளை வளர்ப்பது சுற்றுச்சூழலின்படி மிகவும் சரியானது. தட்பவெப்பமும், ஈரப்பதமும் பன்றி வளர்க்க மிகச்சரியானவை. மலைச்சாரலில் இருக்கும் ஈரமான, நிழலான இடங்களில் வாழ்வதையும், காட்டில் பொறுக்கித்தின்று வாழ்வதையும் பன்றிகள் மிகவும் விரும்புகின்றன. பன்றியை தின்னக்கூடாது எனச்சொல்லும் மத்தியக்கிழக்கு பழக்கவழக்கம், இந்த இடத்தில் மிகவும் பொருளாதார நடைமுறைக்கு ஒத்துவராததாகவும், அறிவிலித்தனமாகவும் இந்த இடத்தில் இருக்கும்.

அதே நேரத்தில், பன்றிகளை அளவுக்கு மீறி வளர்ப்பது, மனிதனுக்கும் பன்றிக்கும் இடையேயான போட்டியை உருவாக்கி விடும். அளவுக்கு மீறி பன்றிகளை வளர்ப்பது பெண்களை அதிக வேலை செய்ய வைக்கும். அதிகமான பன்றிகள் தோட்டங்களை அழிப்பதால் தோட்டங்களைச் சார்ந்து வாழும் மாரிங் மக்களின் உணவுக்கே ஆபத்து. பன்றிகள் அதிகமாக அதிகமாக, எல்லோருக்கும் உணவு கொடுக்க, மாரிங் பெண்கள் அதிகமாக அதிகமாக வேலை செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர், மக்களுக்கு செலவிடுவதைவிட பன்றிகளுக்கு செலவிடுவதே அதிக நேரமாகும். எல்லா கன்னிநிலங்களும் உபயோகத்துக்குள் வருவதால், முழு விவசாய அமைப்புமே வீழ்ச்சியடைகிறது. இந்த நேரத்திலே கைக்கோ தனது இடத்தை எடுத்துக்கொள்கிறது. மூதாதையர்களின் ஆசி முன்னுக்குக்கொண்டுவரப்பட்டு, பன்றிகள் வளர்ப்பது முன்னுக்கு வந்தாலும், பன்றிகள் பெண்களையும், தோட்டங்களையும் அழித்துவிடாமல் அதிக முயற்சி எடுக்கிறார்கள். யாஹ்வாவின் வேலையையும் அல்லாவின் வேலையையும் விட இந்த மூதாதையர்களின் வேலை மிகவும் கடினமானது. ஏனெனில், அரைகுறைத்தடை முழுமையான தடையைவிட நடைமுறைக்குக் கொண்டுவருவது கடினமானது. இருப்பினும், எவ்வளவு சீக்கிரம் கைகோ நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கைகோ நடத்தவேண்டும் என்ற முறையும், மூதாதையர்களை அதிகநேரம் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற முறையும், மாரிங் பழங்குடி மக்களை சார்ந்து வாழும் பன்றிகள் கூட்டம் ‘அளவுக்கு மிஞ்சிய அமுதமாக ‘ போய்விடாமல் வைத்திருக்கின்றன.

மூதாதையர்கள் அவ்வளவு புத்திசாலியாக இருந்தால், ஏன் அவர்கள் ஒவ்வொரு மாரிங் பெண்ணும் வளர்க்கக்கூடிய பன்றிகளின் எண்ணிக்கையை முன்கூட்டியே நிர்ணயம் செய்துவைக்கக்கூடாது ? நிரந்தரமாக ஒரு குறிப்பிட்ட எண்ணை சொல்லி அதற்கு மேல் ஒரு பெண் பன்றிகளை வளர்க்கக்கூடாது என்று செய்தால், பன்றிக்கறியும் நிரந்தரமாக கிடைக்கலாம், அதே நேரம், பன்றிகளின் எண்ணிக்கையும் அளவுக்கு மீறிப் போகாது அல்லவா ? ஒரேயடியாக பன்றிக்கூட்டம் அதிகமாவதையும், பன்றிகளே இல்லாமல் போகும் நிலையும் எதிரெதிர் துருவங்களில் போவதை தடுக்கலாம் அல்லவா ?

மேல்க்கண்ட முறை, மாரிங் பழங்குடி மக்களிடையே மக்கள்தொகை வளர்ச்சியே இல்லாமல் இருந்தால்தான் சரியாக இருக்கும். அவர்களுக்கு எதிரிகளே இல்லாமல் இருந்தாலோ, மிகவும் வேறுவிதமான விவசாய முறையோ, உறுதியான ராஜாக்களோ, எழுதப்பட்ட சட்டங்களோ இருந்தால்தான் சரியாக இருக்கும். அதாவது அவர்கள் மாரிங் பழங்குடிகளாக இல்லாமல் இருந்தால் சரியாக இருக்கும். யாராலும், ஏன் மூதாதையர்களால் கூட, பன்றிக்கூட்டம் எப்போது ‘அளவுக்கு மிஞ்சிய அமுதமாகிறது ‘ என்று தீர்க்கதரிசனம் பண்ணமுடியாது. எப்போது பன்றிகள் சுமையாக மாறுகின்றன என்பது நிரந்தரமான விஷயங்களைப் பொறுத்து இல்லை. அவை வருடாவருடம் மாறும் விஷயங்களைப் பொறுத்து இருக்கின்றன. மாரிங் உபகுழுக்களில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பதையும், மாரிங் பழங்குடி மக்கள் எங்கெங்கே வாழ்கிறார்கள் என்பதையும், அவர்கள் இருக்கும் உடல்,மன ஆரோக்கியத்தையும், அவர்கள் வாழும் இடங்களின் பரப்பளவையும், அழிக்காத காடு எவ்வளவு இருக்கிறது என்பதையும், எதிரி உபகுழுக்களின் எண்ணம் என்ன என்பதையும் பொறுத்து இருக்கிறது. செம்பகாவின் மூதாதையர்கள் ‘நீ நான்கு பன்றிகள் மட்டுமே வளர்க்கலாம். அதற்கு மேல் வளர்க்கக்கூடாது ‘ என்று சொல்ல முடியாது. குந்துகை, திம்பகை, யிம்காகை, துகுமா, அவுந்தகை, கவ்வாசி, மொனாம்பந், போன்ற இன்னும் பல உபகுழுக்களின் மூதாதையர்களும் இந்த எண்ணிக்கையை ஒப்புக்கொள்வார்கள் என்பதற்கு எந்தவித நிச்சயமும் இல்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு உபகுழுவும், நிலத்தின் வளமை மீது தங்கள் உபகுழுவுக்கு இருக்கும் பாத்யதையை நிலைநாட்ட வேண்டிய போராட்டத்தில் இருக்கின்றன. போரும், போர் வருமென்ற பயமும் இந்த பாத்யதை உரிமைக்குரலையும் நோண்டி பரிசோதிக்கின்றன. மாரிங் உபகுழுக்களின் நோண்டுதலும், பரிசோதித்தலுமே, மூதாதையரின் பன்றிக்கறி ஆர்வமாக வெளிவருகிறது.

மூதாதையர்களை திருப்தி படுத்த, அதிகமான உணவை உற்பத்தி செய்வது மட்டுமல்ல, அதிகமாக பன்றிக்கூட்டத்தை உருவாக்கவும் வேண்டும். சுழற்சி ரீதியில் அளவுக்கு அதிகமான பன்றிக்கறியை உருவாக்குவதோடு, ஒவ்வொரு உபகுழுவும் உயிர்வாழவும், தன்னுடைய நிலத்தை பாதுகாத்துக்கொள்ளவும் அந்தத் திறமைகளை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

இது பலவிதங்களில் நடக்கிறது.

முதலில், ரும்பிம் சமாதான நேரத்தில், மூதாதையர்களின் பன்றிக்கறி மீது ஆர்வப்படுவதால், மக்கள் அனைவரும் கடினமாக வேலை செய்து, அதிகமாக உண்டு வலிமையான உயர்ந்த மக்களை உருவாக்குகிறது. சமாதானத்தின் முடிவில், கைகோவை வைப்பதால், அதை அடுத்து வரும், உபகுழுக்களிடையே வரும் போருக்கு வசதியாக, அதிக அளவு, அதிக கொழுப்பும் புரோட்டானும் உள்ள பன்றிக்கறியை சாப்பிடவைப்பதை மூதாதையர்கள் நிச்சயம் செய்கிறார்கள். அதிகமான அளவு பன்றிக்கறியை வினியோகம் செய்வதால், அடுத்து வரும் போருக்கு முன்னர், நண்பர்களை தக்கவைத்துக்கொள்வதையும், புது நண்பர்களை அழைக்கவும் முடிகிறது.

பன்றிகளை வெற்றிகரமாக வளர்ப்பதற்கும், ராணுவச்சக்திக்கும் இடையேயான உறவை செம்பகா உபகுழுவினர் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். கைகோவின் போது வெட்டப்படும் பன்றிகளின் எண்ணிக்கை, உபகுழுவின் ஆரோக்கியத்தையும், சக்தியையும், அவர்களது வைராக்கியத்தையும் எடை போட விருந்தினர்களுக்கு சரியான அளவுகோலாக இருக்கிறது. நல்ல அளவு பன்றிகளை வளர்க்காத ஒரு உபகுழு தன் நிலத்தை சரியாக பாதுகாத்துக்கொள்ள நன்றாக போராடாது. ஆகவே வலிமையான தோழர்களையும் அது வசீகரிக்காது. மூதாதையர்களுக்கு சரியாக பன்றிக்கறி கொடுக்காத கைகோவுக்குப் பின்னர், நடக்கும் போரில் தோல்வி வரும் என்று ஜோதிடம் சொல்லக்கூட அவசியமில்லை.

ராப்பபோர்ட் சரியாகவே கூறுகிறார். அதாவது, அடிப்படை சுற்றுச்சூழல் உணர்வில், ஒரு குழுவின் அளவுக்கு அதிகமான பன்றிகள், அந்த குழுவின் உற்பத்தித்திறனையும், அதன் ராணுவ வலிமையையும், அந்தக்குழு கோரும் நிலத்தின் பாத்யதையையும், பாத்யதை இன்மையையும் நிரூபிக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்த அமைப்பு முழுவதும், திறமையான முறையில் தாவரங்களும், மிருகங்களும், மனிதர்களும் சுற்றுசூழலில் இணைந்து அதன் வளமை திறமையான முறையில் வினியோகிக்கப்படுவதைக் காட்டுகிறது.

**

இதைப் படிக்கும் பலர், பன்றி அன்பு என்பது தவறானது என்றும், இது அடிக்கடி போரை உருவாக்குகிறது என்றும் முறையிடுவார்கள் என்று தெரியும். போர் என்பது பகுத்தறிவுக்கு முரணானது என்றால், கைகோவும் பகுத்தறிவுக்கு முரணானது என வாதிடலாம். ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் விளக்கத் தோன்றும் என் ஆர்வத்தை நான் தடுக்க என்னை அனுமதியுங்கள். அடுத்த அத்யாயத்தில், மாரிங் பழங்குடிகளின் போர்முறை பற்றி விளக்குகிறேன். இப்போதைக்கு, போர்கள் பன்றி அன்பால் வருவதல்ல என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன். பன்றியையே பார்க்காத பல கோடிக்கணக்கான மக்கள் போர் தொடுக்கிறார்கள். (பழங்காலத்திய, இன்றைய) பன்றி வெறுப்பும் எந்த விதத்திலும், சமாதானத்தையும், அமைதியையும், சேர்ந்து வாழும் சிந்தனையையும் இன்றைய மத்தியக்கிழக்குப் பிரதேசத்தில் இருப்பவர்களிடம் தோற்றுவித்துவிடவில்லை. மனித வரலாற்றில் போர்கள் இருக்கும் எண்ணிக்கையைப் பார்த்தால், நியூகினியா பிரதேசத்தில் இருக்கும் மாரிங் பழங்குடியினர் (காட்டுமிராண்டிகள்) தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட நெடுங்காலத்துக்கு சமாதானமாக வாழ வகைசெய்யும் அற்புதமான முறையை ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. பக்கத்து உபகுழுவின் ரும்பிம் மரம் தரையில் இருக்கும் வரை செம்பகா உபகுழு தன்னையாராவது தாக்குவார்களோ என்று அஞ்ச வேண்டிய அவசியமில்லை. இப்படி ரும்பிம் நடாமல், ராக்கெட்டுகளை நடும் நவீன தேச மக்கள் இப்படி பயப்படாமல் இருக்க முடியுமா என்று பார்க்கவேண்டும்.

Series Navigation