பனீர் –150கிராம்
மைதா –1கரண்டி(மூன்று ஸ்பூன்)
வெண்ணெய் –100கிராம்
ரீபைண்ட் ஆயில் –4கரண்டி
பால் –1கப்
பெங்களூர் தக்காளி –3
வெங்காயம் –3
மிளகாய்த்தூள் –1டாஸ்பூன்
சீரகத்தூள் –1டாஸ்பூன்
மிளகுத்தூள் –1டாஸ்பூன்
கரம் மசாலா –1/4டாஸ்பூன்
உப்பு –தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது –3டாஸ்பூன்
வெங்காயம், தக்காளியைத் தண்ணீர் போடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயைக் காயவைத்து அதில் அரைத்த வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்க வேண்டும்.
பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி கரம் மசாலா, கொத்துமல்லியும் போட்டு வதக்கி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே மசாலா.
பின் தனியாக ஒரு கடாயில் 100கிராம் வெண்ணெய் சுடசெய்து ஒரு கரண்டி மைதா போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொண்டு ஒரு டம்ளர் பால் ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு சிறிய தீயில் வைத்து சாஸ் கெட்டியாகும் வரை கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த சாஸை ஏற்கனவே செய்து வைத்துள்ள மசாலாவில் போட்டு அடுப்பில் சிறிய தீயில் வைத்துச் சிறிது நேரம் கிண்ட வேண்டும்.
இரண்டும் நன்கு கலந்ததும் இறக்கும் தருணத்தில் பனீரை சிறு சிறுசதுரத் துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து கிளறி 2நிமிடம் வைத்து இறக்கவும்.
இந்த பட்டர் பனீர் மசாலா பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
- இயலாமை
- யாரோ சொன்ன புன்னகைமொழிகள்
- உரத்த சிந்தனைகள்
- கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி (இறுதிப்பகுதி)
- வெந்தயப் பொங்கல்
- பட்டர் பனீர் மசாலா
- நுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள்
- ஊர்ந்து போகும் வாழ்க்கை
- மரணம்
- சிதம்பர ரகசியம்
- பிரும்மம்
- கவரிங் புன்னகைகள்
- இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 25, 2001
- காய் கவர்ந்தற்று
- இரணியன் – திரைப்பட விமர்சனம்
- அபிராமி முதல் கண்ணகி வரை (ஒரு பயணக்கட்டுரை)
- சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்
- கறுப்பு அணில்
- …ப்பா