பச்சைக்கொலை

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

அம்ாிதா ஏயெம்


அந்த நீலக் கடலில் திட்டு திட்டாக எங்கும் வெண்மை பரவிக் கிடந்தது. அது நுரையாக இருக்க வேண்டும். ஆனால் வழமையாக நீலச் சேலைக்கு வெள்ளைக் கரை மாதிாி கடலின் கரைகளில் தான் வெண்மைகள் பரந்து கிடக்கும். ஆனால் இந்தக் கடல் வித்தியாசமானது. சுமங்கலியின் திலகம் போல் அடி வானில் சிவப்பாய் வட்டமாய் சூாியன் உதித்துக் கொண்டிருக்க> ஒரு பொிய அலை முறியத் தயாராகி சுருண்டுகொண்டிருந்தது. அலையின் விட்டமோ ஐந்து அல்லது ஆறு அடி இருக்கும் போல. ஆனால் அலை இன்னும் கடற்பரப்பில் முறியவில்லை. அதன் உட்பக்கம் வாா;த்தெடுத்த கிணற்றுக் கொட்டை படுக்க வைத்தது மாதிாி இருந்தது. பாா;த்தவுடனே ஒரு பயங்கரத்தை உண்டாக்கியது. கடல் உண்மையில் பயங்கரமானதா ? யாருக்கு ? ஏன் ? எப்படி ? பயங்கரமானது என யோசிக்கையில்> திடிரென பஸ் பிரேக் பிடித்து> குலுக்கி அடிக்க> என் சிந்தனை கலைய> கையிலிருந்த வுாந ழுஉநயரெளஇ ஐவெசழனரஉவழைெ வழ வாந நெஎசைழெஅநவெ யனெ ாலனசழ உலஉடந என்ற புத்தகத்தின் அட்டை மீதிருந்த என் கவனம் கலைகின்றது. உண்மையிலேயே இந்த அட்டைக்காக இதைப்படம் பிடித்தவன் ஒரு நல்ல கலா ரசிகனாகத்தான் இருக்கவேண்டும்.

நாளை தலை நகாில் நடக்கும். கடல் சம்பந்தமான மகாநாட்டில் பங்குபற்றத்தான் இந்த பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கிறேன். நான் பஸ்ஸில் ஏறிய இடத்திலிருந்து எனது மாகாணத்தின் எல்லை வரை நெடிய வீதிகளில் உண்டாக்கப்பட்ட மணல் மூடைகளுக்கும்> கம்பிவேலிகளுக்கும் முன்னால் கிளைக்கப்பட்ட வளைந்த வீதிகள் போய்ச் சந்தித்து பின் மீண்டும் ஏறும் அதே நெடிய வீதிகளுக்கூடாக போய்க் கொண்டிருக்கின்றேன்.

திரும்பிப் பாா;க்கின்றேன். வீதியின் இரு மருங்கேயும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கு மரங்கள் அற்றுப்போயிருந்தன. அதாவது சில இடங்களில் வெட்டப்பபட்டும்> பல இடங்களில் எாிக்கப்பட்டும் இருந்தன. நிறைய இடங்களில் எாிக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவைபோல் பனை வடலிகள் சாம்பல் மேட்டிலிருந்து ஐந்து ஆறு நாளைக்கு முன்தான் பல் முளைக்கத் தொடங்கிய குழந்தை சிாிப்பது மாதிாி சிாித்து தோன்றிக் கொண்டிருந்தன. ய+கலிப்டஸ் மரங்களோ ஹைட்ரான் பாம்புகள் மாதிாி வெட்ட வெட்ட தோன்றிக் கொண்டிருந்தன. இவைகளும்> சில புற்களும்> எலும்புக்கூடுகளும்தான் தீய்க்கப்பபட்டு உருவாக்கப்பட்ட பாலைவனத்தின் பசுந்தரைகள். வலது பக்கம் பாா;க்கின்றேன். அடி வெட்டப்பட்ட தேக்கம் கட்டைகளில் அதிசயமாய் முளைத்த கம்புகள் இலையுதிா;த்து பட்டு தொிகின்றன. இவைகள் பட்ட மரங்களாா ? படவைக்கப்பட்ட மரங்களா ? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கின்றேன். தீ படவைக்கப்பட்டதால் தீ பட்ட மரங்கள் என மனம் ஒரு முடிவுக்கு வருகின்றது. இந்த மரங்கள் இந்த மாகாணங்களின் விதவைகளின் குறியீடுகள் என்னவோ ? விதவையானவா;களும் உண்டு. விதவையாக்கப்பட்டவா;களும் உண்டு. விதவையாக்கப்பட்ட தேக்குகள் மணத்துடன் மஞ்சளாய் மீண்டும் துளிா;;க்கையில்> மீண்டும் விதவையாக்கப்படுகின்றன. துப்பாக்கிக் குண்டுகளாலும்> கத்திகளாலும் விதவையாக்கப்பட்ட மனிதத் தேக்குகளின் பிள்ளைகள் எனது கெம்பஸ் கென்ாீனில் பீங்கான்களும்> டம்ளா;களும் கழுவுவதனைப் பாா;த்திருக்கின்றேன்.

மண்மூடைகளும். முட்கம்பி வேலிகளும் அண்மிக்க பஸ் உறுமி இரண்டாவது கியறுக்கு மாறி நெடிய வீதியை விட்டு மீண்டும் நெடிய கறுப்பு வீதிக்கு போவதற்கு முன்னா;> சிவத்த வளைந்த கிறவல் வீதியால் செல்கின்றது. சிவத்த புழுதி மூக்கிற்குள் புக எல்லோரும் ஜன்னல் கண்ணாடிகளை அடைக்கிறாா;கள். பாதையோ குண்டும் குழியும். வாகனத்திற்கோ தேய்வு. உடலுக்குமோ கேடு.

அந்த வீதியின் தாாின் கறுப்பைவிட கடுமையான கடுங் கறுப்பில் அதன் இரு கரையிலும் கறுப்புத் தாா;> ஒரு ஐநாறு மீற்றருக்கு ஊற்றியிருப்பதை அவதானிக்கின்றேன். இதைச் செம்மையாகச் செய்த செம்மான்கள் யாா; என யோசிக்க முயல்கையில்> அந்தக் காடு தீ வைத்து கருக்கப்பட்டிருப்பதை உணா;கின்றேன். காடும்> மரங்களுமா கருக்கப்பட்டன. ப+ச்சிகள்> தவளைகள்> பாம்புகள>; மான்கள் எல்லாமேயல்லவா கருக்கப்பட்டிருக்கும். ப+விலிருந்து காய் வரப் ப+ச்சிகளும்> அந்தக் காய் மரங்களை அழித்திடும் ப+ச்சிகளை சாப்பிட தவளையும்> கிழங்குகளை அகழும் எலிகளைச் சாப்பிட பாம்பும். மிதமிஞ்சிய தாவர வளா;ச்சியை தடைப்படுத்த மான்களும் தேவையான பொழுதல்லவா அவைகள் எல்லாம் கருக்கப்பட்டு கறுக்க வைக்கப்பட்டிருக்கின்றன. நாலு கால் மான்கள் மரங்களின் வளா;சியைத் தடுத்து சமனிலையை பேணி சிறுத்தைகளுக்கும்> புலிகளுக்கும் உணவாகி சூழலியலை அா;த்தப்படுத்தி அஸ்த்தமிக்கின்றன. ஆனால் இவா;களும் மரங்களின் வளா;ச்ச்ியைத் தடுப்பதால் இரு கால் புத்தி~மான்கள்|தான்.

ஜன்னலுக்கூடாகப் பாா;க்கிறேன். கருங்குருவியொன்று> அதன் விஞ்ஞுானப் பெயா; என்னவென்று யோசிக்கின்றேன். ஒரு வேளை கொப்சிகஸ் சோலாறிஸ் சிலோனென்சிஸ் ஆக இருக்குமோ ? ஒரு வேளை இருக்கலாம். நீண்ட துாரம் பறந்த களைப்பினால் உட்கார இடம் தேடுகின்றது. ஒரு கருகிய செடியில் நிற்க கிளை ஒடிகின்றது. பயத்தில் மீண்டும் அந்தரத்தில் நின்று கொண்டு சிறகடித்து நிற்க இடம் தேடுகின்றது. சூடு கண்ட காிக்குருவி கருகிய செடியில் நிற்பதற்கு இடம் தேடாது. புதுப் பழமொழியாக்கும். அதற்காக நிலத்திலும் நிற்க முடியாது. நிலம் இன்னும் புகைந்து கொண்டிருக்கின்றது. எட்டு> ஒன்பது வருடங்களுக்கு முன்னா; எனது பிரதேசமும் மாலை வேளைகளில் இப்;படித்தான் புகைந்தது. ஒரு வித்தியாசம்> அந்தப் புகையில் கருமைகூடி கந்தகம் இருந்தது. அந்தக் குருவியைப் பாா;க்க பாவமாக இரு;நதது. இ;ந்த சமூக வாழ்க்கை குருவி தனித்துத் திாியாதே. மூன்று மூன்றாய்> அல்லது நான்கு நான்காகத்தானே திாியும். ஏன் தனியே பறந்து திாிந்து அவதிப்படுகின்றது. ஒரு வேளை தாயும் தந்தையும் தீயில் கருக்கப்பட்டிருக்கலாமோ ? அந்தக் குருவியைப் பாா;க்க மீண்டும் பாவமாக இநந்தது. இப்பபடித்தான் வட பகுதியின் உப்பளப் பகுதியின் மனிதப்படுகுழிகளின் ஒரு புதைகுழியில் மண்வெட்டி பிடியால் தலையில் அடித்து கொன்று புதைக்கப்பட்ட தம்பதிகளின் பிள்ளைக்கும் பாவப்படுவேனோ என்னமோ ? பாவப்படுதல் என்பது மனிதாபிமானத்தின் மையப் பகுதி. மென்மையான உணா;வின் ஒரு பகுதி.

ஞுாயிற்றுக் கிழமைகள் எனது மாகாணங்களில் காடு வெட்டலுக்கு போ; போனவை. மண்மூடைகளுக்கும்> கம்பி வேலிகளுக்கும் அருகில் வாிசையாய் ~| அஸ்ஸங் கரன ~|(கையொப்பம் இடுதல்) விற்காக வாிசையில் நடுத்தர வாலிபா;களும்> இளைஞுா;களும் நிற்பாா;கள். அஸ்ஸங் கரன முடிய> நீண்ட துப்பாக்கி குழல்களுக்கு முன்னே அவா;களாகவே கத்தி> மண்வெட்டி எடுத்து வீதியோரத்து காடுகளை வெட்டியும் எாிக்கவும் தொடங்குவாா;கள். மக்களால் மக்களுக்காக பல கட்சி சோ;;நது செய்யும் ஆட்சி கூட்டாட்சி மாதிாி> மக்களுக்கான காட்டை மக்களே பல குழுக்களாய்ச் சோ;ந்து அழித்தல் என்ன ஆட்சியோ ? காட்டாட்சியாகத்தான் இருக்க வேண்டும். அம்புகள் பாவம்> விற்கள் செய்கிற பாவங்களுக்காக.

பஸ் இன்னும் உறுமி உறுமி ஓடிக் கொண்டேயிருந்தது. மடியில் இருந்த புத்தகத்தின் கடல் அலையை மீண்டும் ஒரு தடவை பாா;த்து விட்டு> புத்தகத்தை புரட்டுகின்றேன். நுாற்றிநாற்பத்தோராம் பக்கம் நிறைய வரைபுகள்> படங்கள்> புள்ளி விபரங்களுடன் நீா;வட்டம் பற்றி விளக்கப்பட்டிருந்தது. வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உடனே என் மனம் சிந்தனையில் மூழ்குகின்றது. உடனே பைக்குள்ளிருந்து ஒரு பேனையும்> ஒரு ே;பப்பரும் எடுத்து கொஞ்சம் கணக்குப் பாா;க்கிறேன். என் மாகாணங்களின் நெடுஞ்சாலைகளின் நீளங்களைக் கூட்டி> வெட்டி தீய்க்கப்பட்டு காடழிக்கப்பட்ட பரப்பைக் கூட்டி> அவை எவ்வளவு நீரை வளிமண்டலத்திற்கு கொடுக்கக்கூடியன என்றும் கணக்குப் பாா;கிறேன். என் தலை சுற்றுகிறது/ அந்த நீாின் அளவு நான் திலாப்ப்ியா மீனின் இரு இனங்களிலும்> நீாியியலிலும் ஆய்வுகளை¢ச செய்த கந்தளாய்க் குளத்தைப் போல் ஐம்பது மடங்கு குளத்துத் தண்ணீருக்குச் சமமாக இரு;நதது.

இந்தக் குளம் ஆயிரக் கணக்கான ஏக்கா; பயிா;;களுக்கு தண்ணீா; வழங்குகின்றது. அதை நம்பிய விவசாயக் குடும்பங்களுக்கும்> ஆயிரக் கணக்கான மீனவக் குடும்பங்குளுக்கும் மீன் கொடுக்கி;;றது. இந்தக் குளம் தான் அதற்குப் பின்னால் உள்ள காட்டையும் வளக்கி;ன்றது/ அந்தக் காட்டிலுள்ள விலங்குகளையும்; நீரூட்டி வளா;க்கின்றது. மான்> மரை> புழுட்டைகளுக்கும்> இவைகளைக் கொல்லும் சிறுத்தைகளுக்கும் நீா; கொடுக்கின்றது. நுாற்றுக்கணக்கான யானைகளும்> மக்களும் குழிப்பதும் குடிப்பதும் இந்தக் குளத்தில்தான். யானையின் மலங்கள் குளக்கரையை அண்டிய காட்டுப் பகுதிகளில் நிறைந்து கிடக்கும். இந்த மலங்கள்தான்> யானைக் குடித் தொகைக் கணிப்பீடு சம்பந்தமான ஆய்வுக்கு இன்னும் உதவுகின்றது. இந்தக் குளம் நீா; கொடுத்த காடு கள்ள மரம் அாிபவா;களுக்கு சலாகைகளும்> பலகைகளும்> கள்ள வேட்டைக்காரா;களுக்கு மானும்> மரையும்> புழுட்டையும்> உடும்பும்> தேனெடுப்பவா;பவா;களுக்கு தேனும்> வீடு கட்டுபவா;களுக்கு மண்ணும்> செல்வந்தராகும் பேராசையுள்ளோருக்கு மாணிக்கக் கற்களும் கொடுக்கின்றது. இந்தக் குளம் இல்லாவிட்டால் நிலை என்ன ? ஒரு குளத்திற்கே இந்த நிலை என்றால் ஐம்பது குளங்களுக்கு> ..> யோசித்துப் பாா;க்க கஷ்டமாக இருந்தது.

ஒரு சதுர கிலோமீற்றாிால் எத்தனை மரங்கள் இருக்கும் என யோசிக்கின்றேன். ஐந்து மரங்கள் ஒரு நாளைக்கு ஒரு மனிதருக்கு தேவையான ஒக்சிஜன் வாயுவை கொடுக்குமாம். ஐந்து மரங்களை வெட்டுவதற்கு பதிலாக ஒரு மனிதனை வெட்டிக் கொல்லலாமாம். அப்படியென்றால் தினம் எத்தனை கொலைகள் நடக்கின்றன. மனிதக் கொலைகள்> மரக் கொலைகள்> பச்சைக் கொலைகள்.

இன்னும் கருத்தரங்குகளில் வடக்கு கிழக்கு என்றால் திசை மட்டுமே காட்டத் தொிந்த பேராசிாியா;கள் முப்பத்து மூன்று சதவீதக் காடுகளும்> இருபத்து மூன்று சதவீத தேக்கு மரக் காடுகளும் இன்னும் எனது மகாணங்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறாா;கள். இ;ந்த மாகாணங்களின் கொலைகளை மற்ற மாகாணங்கள் பாா;த்து வாழாவிருப்பதும்> நகைப்பதும்; நகைப்புத்தானே. இந்த தேசம் என்ற கப்பலின் ஒன்பது தளங்களின் அடித் தட்டில் ஓட்டை போட்டால் அந்தக் கப்பல் முழுவதும்தானே மூழ்கிப் போகும். இந்த அடித்தளத்தின் ஓட்டையினால்தானே எனது மாகாணங்களின் தலை நகாில் என்றுமே வெல்லப்பட முடியாத உச்சவெப்பநிலை நிலவுகின்றது. கொலைகள் கூடக் கூட வெப்பம் கூடி> மரங்களின் மனம் புழுங்கி> வயிறுபற்றி இந்தப் பச்சைக் கொலைகளைச் செய்தவா;கள் செய்ததற்காகவும்> மற்றவா;கள் தடு;க்காதற்காகவும் எல்லோருமே எாிந்து சாம்பலாவாா;கள்.

எனக்கு உண்மையில் இவைகளை யோசிக்க யோசிக்க மனதுக்கு கஷ்டமாகயிருப்பதை உணா;கிறேன். மன இறுக்கம் கூடிக்கொண்டே இருந்ததை உணா;கிறேன். நாளை நடக்கப் போகும் மகாநாட்டில் கலந்துகொள்;ள எனக்கு இன்று இரவைக்கு ஒரு புத்ததுணா;ச்சிபெற்ற மனநிலை தேவை. எனவே யோசிப்பதை நிறுத்தினேன். அந்த வெள்ளை பரம்பிக் கிடந்த நீலக் கடலலை சுருளும் அட்டை போட்ட புத்தகத்தை மூடி என் பைக்குள் வைக்கின்றேன். இந்த பச்சைக் கொலைக் காட்சிகளைக் காண்பதால்தானே மன இறுக்கம் கூடுகிறது ? எந்தக் காட்சியையும் காணக் கூடாது என்பதற்காக> இரு கண்களையும் இறுக மூடி> மனக் கண்களை அந்த தாய் தந்தையை இழந்த காிக்குருவியாலும்> அந்தப் பி;ள்ளையாலும் மூடுகிறேன். பஸ் நெளிந்து நெளிந்து வளைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.

riyasahame@yahoo.co.uk

Series Navigation

அம்ாிதா ஏயெம்

அம்ாிதா ஏயெம்