பக்தி

This entry is part [part not set] of 2 in the series 20010911_Issue

வெங்கடரமணன்


மாலை கோவில் போக வேண்டும்;

மறக்காமல் அர்ச்சனை செய்ய.

அரளி இல்லாத கதம்பம் வேண்டும்;

அரளி பட்டால் அரிக்கும் இவளுக்கு.

கனிந்த வாழைப்பழம் வேண்டும்;

காலையில் இரண்டு நாளாய்க்

கழிவறை போகவில்லை.

முத்திய தேங்காய் நல்லது;

திரும்பும் ஒற்றைமூடி

தோசைக்குச் சட்டினியாகும்.

அய்யருக்குச் சில்லரை தேவை ‘

ஐந்தாய்த் தட்டில் போட்டால்

மீதி தரமாட்டார்.

உண்டியலுக்குத் தேவையில்லை;

போனமுறை சில்லரையின்றி

முழுரூபாய் போட்டான் உதாவாக்கரை.

செருப்பை மறக்காமல்

பிரித்து விடவேண்டும்.

 

 

  Thinnai 2000 September 11

திண்ணை

Series Navigation

வெங்கடரமணன்.

வெங்கடரமணன்.