நேற்றும், இன்றும்

This entry is part [part not set] of 9 in the series 20000528_Issue

பசுபதி


நேற்று

பனிசூழ் கனடாப் பகுதியிலே பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.

தனிமைத் துயரத் தழலதனைத் தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.

இனிமை எட்டும் வழியொன்றை ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.

‘மனித வருத்தம் மகிழ்வெல்லாம் மனதின் மாயம் ‘ எனவுணர்ந்தேன்.

இன்று:

கையிற் கணினி விசையுண்டு; கருத்திற் கன்னித் தமிழுண்டு ;

பையிற் பண்டை யாப்புண்டு; பாட்டுக் கோர்வா னொலியுண்டு;

வைய வலையில் நட்புண்டு; மலரும் மரபுக் கவியுண்டு;

ஐயன் முருகன் அருள்கிட்டின் அண்டர் உலகம் வேறுண்டோ ?

 

 

  Thinnai 2000 May 28

திண்ணை

Series Navigationழூங்ுவ்ுழூிழூக்ிஒஆந்ழூர்ி பூர்ுத் ச்ண்ுய்ி ஞ்ஆக்த்ுப்ி ழூங்ுவ்ு ண்ல்ிமண்ி டூஆங்த்ச்ிச்ுவ்ி டூத்ழூிழூச்ிஆச்ட்ிட்ல்ில்ு பூநச்ட >>

பசுபதி

பசுபதி