தேவமைந்தன்
பேருந்துக்கு நின்றிருந்தேன்.
காத்திருந்த கூட்டத்தில் ஒருவர்
தன் கடிகாரம் சரிசெய்யும்
நோக்கம் தெரியக் காட்டி,
நேரம் கேட்டார்.
ஆகப் பொறுப்பாயும் துல்லியமாயும்
சமயம் சொன்னேன்.
அடுத்து, புன்னகைத்துக் கொண்டே
அருகில் வந்தவர் பேச்சுக் கொடுத்தார்.
பேருந்து வரும்வரை பேசுவோம்என்று
பேசி நின்றேன். பையப்பைய நான்
இருக்கும் தெரு, இல்லத்தின் எண்
பேச்சின் ஊடே அவரிடம் சென்றன.
நாள்கள் சில காணாமல் போயின.
ஒரு நாள் மாலை ஆறு மணி இருக்கும்.
வந்தார். அகம்முகம் மலர்ந்து அவர்
வரவை ஏற்றேன்.
என்னைப் பேச விடாமல்
கோடை மழையாய்ப்
பொழியத் தொடங்கினார்:
‘சார்! நான் அன்னைக்கே
சொல்லணும் ‘னு நெனச்சேன்.
நீங்கள் ‘லாம் இப்படி டைம்வேஸ்ட் பண்ணி
இண்டர்நெட்டு, ஈஃஸைன் ‘ட்டு
எழுதறதும் ப்ரெளஸ் பண்ண்றதுமா ‘
நாள ‘யும் பொழுத ‘யும் கொல் ‘றது தேவ ‘யா ?
நா ‘ பாருங்க! சாதனையாளன்!
நா ‘ இல்லாம எங்க இண்டஸ்ட்ற்றி நடக்காது..
நாங்கள் ‘லாம் டெக்னிகல்! நீங்க ‘ள்லாம் ஜென்ரல்!
ஒங்க ஜென்ரல் விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது..
தெரிஞ்சுக்க எனக்கு டைமும் இல்லே
ஆனா என் டெக்னிகல் ஸ்கில் பக்கம் நீங்கள்ளாம்
மழைக்குக்கூட ஒதுங்க முடியாது… ‘
மேலும் பொறுக்க முடியாமல் மறித்தேன்.
‘இப்ப நீங்க என்ன விஷயமா வந்தீங்க ? ‘
முகங் கறுத்தவர் சொன்னார்:
‘ஒண்ணுமில்ல சார்! எங்க ‘ ப்ரெஷ்ஷர்
குக்கர் ப்ராடக்ட் பற்றி
டிஸ்கஸ் பண்ண டெல்லிவரை போகணும்;
கொஞ்சம் ஃபைனான்ஸ் பண்ணுங்க;
இம்போர்ட் ஆர்டர் கெடச்சதும்
ரீபே பண்ணிடுவேன்.. ‘
மறுமொழி உரைத்தேன்:
‘நீங்கள் ‘லாம் டெக்னிகல்; நாங்கள் ‘லாம் ஜென்ரல்;
ஒங்க ‘லெவ ‘லுக்கு என்னா ‘ல
ஒசர முடியற காலம் வந்தால்,
ஒதவி செய்யப் பாக்கிறேன் சார்!
இப்ப நீங்க போங்க!… ‘
‘போயிட்டு வாங்க! ‘ என்று சொல்லப்படவும்
கொடுப்பினை இல்லாதவர்,
முறைத்துக் கொண்டே போனார்.
இப்பொழுதெல்லாம் யாராவது எங்கேயாவது
நேரம் கேட்கப் போவதாகத் தெரிந்தாலே போதும்,
நான் மாயமனிதன்தான்.
****
karuppannan.pasupathy@gmail.com
- நால்வருடன் ஐவரானேன்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- “ஹால் டிக்கெட்”
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- பெரியாரும், சிறியாரும்
- நம்பமுடியாமல்…
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- வேம்பு
- ஒரு மயானத்தின் மரணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- புலம் பெயர் வாழ்வு (6)
- உயிரா வெறும் கறியா ?
- வாசிப்புக் கலாசாரம்
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கவிதை
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்
- முதலாம் பிசாசின் நடத்தை
- நினைவலையில் காற்றாலை
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)