நெய்வேலியில் ஆனந்த மழை!( 25-6-06)

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

பா.சத்தியமோகன்


பொதுவாக எந்த ஒரு இலக்கியக்கூட்டத்திற்கும் சென்று,அதுவும் ஏழுமணிநேரக் கூட்டம் எனில், நிச்சயம் தலை பாரமாகி
விடும்.அது, இலக்கியம் சம்பந்தப்பட்ட கருத்துகளால் ஏற்பட்டவையாக இல்லாமல், சொந்த விஷயம் சார்ந்த காழ்ப்பாக அமைந்துவிடுவதே இதன் காரணம்.
ஆனல் பாருங்கள் – சிலசமயம் நல்லது திடீரென்று நடக்கிறது.
“கிழக்குபதிப்பகமும்,திசை எட்டும்- காலாண்டு இதழும்” இணைந்து நடத்திய நிகழ்ச்சி அது.ஒரு நல்ல முடிவாக, இந்த இலக்கியக்காரர்கள் மாணவர்களிடம் மாணவிகளிடம் கொண்டுசேர்ப்பது சிறந்தது எனக்கருதியதால் ஆனந்தம்
விளைந்தது.
எல்லா இலக்கியப்பேச்சாள்ர்களும் அழகாக யதார்த்தம் பேசியதே முதல் வெற்றியாகும்.”மாணவர் சிறப்பு ப்பயிற்சிமுகாம்” இரண்டு அமர்வாகப் பிரிக்கப்பட்டது.”மேனஜ்மெண்ட் குரு”சோம.வள்ளியப்பன் “டானிக் சாப்பிடுங்கள்” என்ற தலைப்பில் பாயும் குதிரையின் சவாரி போல பேச்சும்.கேள்வியும்,சாக்லெட்டுமாக உற்சாகப்படுத்தினார். நாகூர் ரூமியின் பாணியோ அன்னப்பறவைபோலவந்தார். நிதானமாக மூச்சுவிட்டாலே மாணவர்கள் மனிதனாகலாம் என்று ஆச்சரிய மூச்சை உதிரவைத்தார்.எல்லாம்
தியான முறைகள்!
கிழக்குப் பதிப்பகம் தனக்கென்று ஒரு முத்திரையை, பயணத்தைத் துவங்கியிருப்பது பத்ரிசேஷாத்ரியின் நிதானமான பேச்சில், அசரவைக்கும் ஸ்டாலில், விளம்பர யுக்திகளில் காணும் தெளிவான முயற்சிகளில் தெரிகிறது. கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன்,சத்யா, ரெங்கராஜன், முத்துராமன் என மணிமணியான ஆட்கள் விடாப்பிடியாக உழைக்கிறார்கள்.ஆட்கள் தப்பு.இவர்கள்
தூண்கள் பத்ரிக்கு.அவர்களுக்குப்பின்னால்;அசுர உழைப்பு புரியும் எழுத்தாளர் பா.ராகவன் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சிக்கு
வரவில்லையே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருந்தது.சோம.வள்ளியப்பன் அவர்களை அறி முகப்படுத்தி பேசியதற்கு எவ்வளவு பெரிய புத்ககம் – அழகிய – அசோகமித்திரன் தொகுப்பு பரிசளித்தார்கள் என்று நன்றிக்கடன் தீராமல் வடலூர் வந்து சேர்ந்தேன்.(என் வீடு அங்குதான்.)வெளியில் அப்போது பெய்த மழை நிச்சயம் ஆனந்த மழைதான். நிறைய மாணவ மாணவிகளுக்கு உற்சாகமான
தினம் அது.

பத்ரி நன்றி கூறிப் பேசும்போது கிழக்கின் பரிட்சார்த்த நிகழ்ச்சி இதுஎன்றார்.பரிசட்சையில் நூறு மார்க்.

பா.சத்தியமோகன்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்