நெஞ்சே பகை என்றாலும்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

தேவமைந்தன்


தலைகுனிந்தாலும் என் கால்களைப் பரப்பினேன்.
பாதங்கள் ஊன்றினேன்… நெஞ்சத்தில் வைத்தேன்,
பெற்ற என் தெய்வங்கள் இணையடி தம்மை.
தந்தை சொன்னசொல் –
“பிரச்சினையின் மையத்துக்கே செல். அஞ்சாதே.
தன்னந்தனியனாய் நில். கேள்,உரத்த குரலில்.
என்ன காரணம் இதற்கு? பதில்வரும்.
காரணத்தை அகற்று; காரியம் சரிப்படும்.”

பதினாறே வயதுக்குள் பகவத் கீதைக்கு
இணையற்ற உவமைகள் ஏராளமாய்க்கோத்து
பாவதீபார்த்தம் வகுத்த ஞானதேவன்
மராத்தியில் சொன்னதைத் தமிழுள் வாங்குவோம்:
“யானையை வைத்து யானையைப் பிடித்தல்போல்,
நிலாமுழுவதையும் ஓடைநீரில் பற்றுதல்போல்,
கூசுமொளிச் சூரியனைஈரத் துண்டுவழிப் பார்த்தல்போல்
ஓர்மையில் நிற்பாய்; உண்மையைக் காண்பாய்.”

கடல்அலைபோல் பகைவந்தபோதும் ஒடிவந்து உதவும்
உடல்-உயிர்த் தந்தையர் சொன்னசொல் – தாயால்
உணவிட்டு வளர்ந்த தனக்கு.

Karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்