நிலவுகள் எப்போதும் கறுப்பு

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

சாம்


தேசத்தின்
தொப்புள் கொடி அறுத்து
காலத்தின் கொடுவிரல்
தூக்கி எறிந்தபோது
விழுந்த இம் மண்ணில்
நிலவுகள் எப்போதும் கறுப்பு.
சிங்காரத் தோட்டம்
விாியன் பாம்புகளின் கோட்டையாய்க் கிடந்தது.
கச்சையில் இருந்து கண்ணீர் வரை
மேல்நாட்டு ஒப்பீடுகள்.
தொடுகை முதல் தொடை தொிதல் வரை
விசித்திர நியாயங்கள.;
பசித்த போது ஆக்கிப் போடுதலும்
காமம் கசிந்த போது
அவிழ்த்துப் போடுதலும்
எங்கேயும் எவரோடும்
நியாயமாகக் கொள்ளலாம்
என்ற புதிய விஞ்ஞாபனம்.
ஓஸ மொழிக் குழப்பமற்ற
இந்த மனிதா;கள்
இன்னமும் ஏன்
பாபேல் கோபுர வேலையை
முடித்துவிடவில்லை என்பதற்கு
கடவுளே!
ஆபிரகாமின் மனச்சாட்சியை உறுத்திய
உனது ஒன்பதாவது கட்டளையை
மறு பாிசீலனை செய்யப்பார்.

—-
samprem@btinternet.com

Series Navigation

சாம்

சாம்