நிலப்பரப்பு

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

முத்துக்குமார் நாகராஜ்


நீண்ட நிலப்பரப்பு

காலைபனியில் நனைந்து போய்
ஊச்சி ஆதவன் -வெப்பத்தில் குளிர் காய்ந்து
கிடக்கும் பசும் புற்கள்!

நீண்ட பயணத்தில் களைத்து போய்
வெண் மேக மேத்தையில் ஒளிந்து
உறங்கி கொண்டிருந்தான் ஆதவன்!

நிலப்பரப்பின் ஒர் ஓரத்தில்
காத்து கொண்டிருந்த கதிரவக் காதலன்
களைத்து மறைந்து போக – வேதனையில்
வாடிக் கொண்டிருந்த சூாியகாந்திகள்
இல்லை இவை சூாியகாதலிகள்

மற்றொரு ஓரத்தில்
தன் நீண்ட பயணத்தில் களைத்து போய்
சில குருவிகள் கிடைத்த குளிர் நிழலில்
மாலை உணவை தேடி கொண்டிருந்தன…

மற்றொரு ஓரத்தில்
விட்டு விட்டு வந்த தன் வாாிசுகளை
மனத்தில் கொண்டு யாாிடமும்
கவலை -கொள்ளாமல் இரை தேடி
ஓடி கொண்டிருந்தன முயல் கூட்டங்கள்

மற்றொரு புறத்தில்
மலைச்சாிவில் ஓடிய வளைவு
பாதைகளை போல் மின்னல் என
ஓடி-கொண்டிருந்தது ஓர் நல்ல ாநல்லா பாம்பு — நல்லவைகள் தான் இவைகள்

வாடிய காதலிகளில்… சூாியக்காதலிகளில்
தேன் தேடி பாய்ந்து வந்தன
சூாியனின் காதலியின் கள்ள காதலர்கள்… வண்டுகள்

சிகப்பு ஒன்று! மஞ்சள் ஒன்று!
நீலம் ஒன்று! ஊதா ஒன்று!
வெள்ளை ஒன்று!
என வண்ணத்தில் ஓர் ஊர்வலம் போல்
பூத்து -கொண்டிருந்தன மலர்கள்…

ஆழ் கடலின் அமைதி அங்கு
குடி -கொண்டிருந்தது…
சின்ன சிலுங்குகள் மட்டுமே
அடர்திருந்த இந்த அமைதி ஓர் அதிசயம்…
அது வரை மட்டுமே!!!!!!! ஆனால்…

ஐய்யகோ! திடார் மாற்றம்!!
‘கூக்குரல்கள்!!! போர்! போர்! ‘
‘விடாதே.. கொல்! -கொல்! ‘

எங்கிருந்தோ வந்த இரு மனித ஓநாய்
கூட்டங்கள் மோதி கொண்டன…
அவர்கள் நின்ற அந்த பூமிகாகவே…

ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு ஓர் போர்களம் ஆனது!

குதிரையின் குளம்புகள், யானையின் பிளிறல்கள்,
விழும் உயிர்களின் இறுதி மூச்சுக்கள்,
பூக்களின் சினுங்கல்கள், பிணங்களின் மெளனங்கள்,
உரசும் வாள்களின் தீப்-பொறிகள்,
வண்டுகளின் ாிங்காரங்கள், புற்களின் அசைவுகள்,
என இவைகளையும் சேர்த்து கொன்று கொண்டு
பாய்ந்தனர் இரு மனித கொலைக்கூட்டங்களின் முந்திகள்
ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு ஓர் கொலைக்கூடம் ஆனதே!

போன முழு நிலவு நாளில் தான் திருமணம்!
முதல் முறையாக அன்று முழு நிலவு என் பக்கத்தில்…
சத்தியம் செய்தோம் இறுதிவரை இணைந்திருக்க!
மடிகளை மெத்தைகளாக்கி பேச்சுகளை விசுறிகளாக்கி களித்திருந்தோம்.
வானமே நாம் தொடும் தூரத்தில் …
பறந்து கொண்டிருந்தோம்… என்று யோசித்தவாறு
முதல் நாளில் முத்தங்கள் வாங்கிய மோட்ச விரல்களின்
கைகளை தூரத்தில் -வெட்டப்பட்டு தூரத்தில்
பார்த்தவாரே ஓர் வீரனின் இறுதி துடிப்பு….
நின்றது அவன் துடிப்பு மட்டும் அல்ல!!!
ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு ஓர் நரப்பலி பீடம் ஆனதே!

முந்தியவர்கள் என்னை உலகில் முந்தியவர்கள்
என் மூத்தவர்கள் மடித்து போக…
நேற்று ஆடிய ஆட்டங்கள் இன்னும் நினைவில் இருக்க
படித்த முதல் பாடங்கள் மறந்து போக
மாங்காய்காக போட்ட சண்டைகள் அகன்று போக
வாழ்க்கை தேனில் திளைத்து கொண்டிருந்த என்னை அன்னை
அரவணைப்பில் இருந்து அகற்றி போர்க்களம் அனுப்ப
வாடி கொண்டிருந்த என்னை நோக்கி ஓர் ஈட்டி…
சதக்…வெளி வந்தது சிகப்பு நிற குருதியல்ல.. வெள்ளை நிற பால்…
ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு ஓர் சிசுப்பலி பீடம் ஆனதே!

முதல் முதலாளி மடிந்து போக திக்கியின்றி ஓடிய
குதிரையை ஓர் வாள் பதம் பார்க்க..
ஏற்றி வந்த ஒருவன் காலடியில் நசுங்கி போக
எதிர் வந்த அனைவரையும் குழாக்கி ஒடிய
மதயானையை ஓர் அம்பு வீழ்த்த..
இரைதேடி இணைந்தோடி கொண்டிருந்த நம் முயல்கூட்டங்கள்
மனித கால்களில் மாவாக… படையையே அஞ்ச வைக்கும்
நல்ல பாம்பு படையிடையே-மனித ஓநாய் படையிடையே
மறைந்து போக… மலர்களின் வண்ண ஊர்வலம் களைந்து போக…
ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு ஓர் சவப்பீடம் ஆனதே!!!

ஐய்யகோ! மருதம் முல்லை-யாகி இருந்த இந்த
அதிசய அமைதி அழகு நிலப்பரப்பு
பிணங்களின் குறிஞ்சியாகி உயிர்களே அண்டா
பாலையாகி குருதி நெய்தலாகி
மனிதகூட்டத்தின் வெறிக்கு இலக்கணமாகி
ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு ஓர் வெறிப்பீடம் ஆனதே!!!

வெட்டுண்ட கைகள் ஓர்புறம்!
துடிகின்ற முண்டங்கள் ஓர்புறம்!
உயிர் குடித்த வாள்கள் ஓர்புறம்!
இலக்கை இழந்த ஈட்டிகள் ஓர்புறம்!
ஆனால் குருதி மட்டுமே எல்லா புறமும்…
இது என்ன ? ஓரு வண்ண ஊர்வலமோ! இறுதி குருதி ஊர்வலமோ!
ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு ஓர் நரகம் ஆனதே!!!

ஆனால் … இன்னமும் விழுந்து கிடந்த
சூாியகாந்தி பிணப்பூக்களில் தேன் தேடி
கொண்டிருந்தன ஈன வண்டுகள்!
ஈன வண்டுகள்!! ஈன வண்டுகள்!!!
ஆனாலும்…பாவமில்லை…
ஓர் அமைதி பூங்காவை சமாதியாக்கி
அத்தன் மீது வெற்றி கொண்டாடும்
உயர்ந்த உயர்ந்த உயர்ந்த( ? ? ? ? ? ?) மனித ஓநாய் கூட்டங்களின்
பாவ முட்டைகளுக்கு முன் அவைகள் தேவலாம்…
எட்டி பார்த்த ஆதவன் சிவந்து போனான்…
குருதி பட்டு விட்டதோ!!!!!

எதற்காக மோதி கொண்டார்களோ
அதையே அழித்துவிட்டனர்…

இங்கே கொல்லப்பட்டது இன்னமும் ஒன்று கூட
‘மனிதாபிமானம் ‘
என் கண்ணீர் அஞ்சலி…
ஐய்யகோ! இந்த நிலப்பரப்பு புதைந்து விட்டதே!!!
என் கவிதை அஞ்சலி…

***

Series Navigation

முத்துக்குமார் நாகராஜ்

முத்துக்குமார் நாகராஜ்