சுந்தர், மஸ்கட்
1991. பெப்ஸியில் வேலைசெய்து கொண்டிருந்த ஒரு நாள், திடாரென்று டை கட்டிக்கொண்டால் என்ன என்று ஆசை வந்துவிட்டது.
‘டை போட்டே ஆவணும் சார். நம்ம கம்பெனி எப்படிப்பட்ட மல்ட்டி நேஷனல் கம்பெனி! ‘ என்று நிறுவன எக்ஸிக்யூட்டிவ் டைரக்டரிடம் சொன்னபோது ‘மதுரைல எதுக்குடா டை கிய் எல்லாம் ? ‘ என்று சொல்லிப் பாத்தார். அவர் எங்களுடைய நலம்விரும்பி. ஆதலால் நாங்கள் அவருக்குச் கொஞ்சம் செல்லமும் கூட. நாங்களென்றால் நானும் ரா ?ாங்கமும்.
அவரை மேலும் படுத்தி எடுத்து ‘அனைத்து ஆபிஸ் மக்களும் நாளைல இருந்து டை கட்டணும் ‘ என்று அவசரச் சட்டம் இயற்ற வைத்து, அன்று மாலையே மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் இருக்கும் ரேமண்ட்ஸ் கடையில் பார்க் அவென்யூ டை சிலவற்றையும், அதை சட்டையுடன் நிறுத்தி வைக்க க்ளிப்புகளையும் வாங்கிக்கொண்டு, அலுவலகத்தில் உடனடி வினியோகம் செய்து முடித்தோம்.
நான் அதுவரை பார்த்ததெல்லாம் இங்கிலீ ? மீடியம் படிக்கும் பொடிசுகள் ஒரு எலாஸ்டிக் வளையத்தில் முன்கூட்டியே கட்டப்பட்ட டையை கழுத்தில் அப்படியே மாட்டிக்கொண்டு போவதைத்தான். பார்க் அவென்யூ டை பாம்புபோல் நீளமாக இருந்ததைப் பார்த்ததும் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. அப்படியே ஒரு கல்லு முடிச்சு போட்டுவிடலாமா என்று முயற்சித்ததில் அது அபாயகரமாகச் சேதாரம் ஆவதுபோல் இருந்ததால் அதைக் கைவிட்டுவிட்டு, என்ன செய்வதென்று பேய் முழி முழித்துக் கொண்டிருந்தோம்.
கணக்காளர் கணே ? உள்ளே வந்து ‘தம்பி.. ஏதோ டை கட்டச்சொல்லி இ.டி.யைச் சொல்ல வச்சீட்டாங்க..நா முன்ன பின்ன இத தொட்டுக்கூட பாத்ததில்லை. அப்படியே கொஞ்சம் ஒரு முடிச்சு போட்டுக் கொடுத்திட்டாங்கன்னா சவுகரியமா இருக்கும். ஆயுசுக்கும் பிரிக்காம போட்டுக்கிடுதேன் ‘ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.
‘அடக்கடவுளே ‘ என்று மனதுக்குள் அலறிவிட்டு ‘வச்சுட்டுப் போங்க.. எல்லாருக்கும் போட்டுக் கொடுப்போம் ‘ என்று தெனாவெட்டாக பதில் சொல்லிவிட்டு, அவர் போனதும் தலையில் கை வைத்துக் கொண்டோம்.
ஆபத்பாந்தவனாக சூசை வந்தார். சூசை அட்மின் மேனே ?ர். எக் ?-ஏர்மென். ஏற்கெனவே ஆதிகாலத்தில் டைகட்டிய அனுபவம் அவருக்கு இருந்தபடியால், அவரைச் சரணடைந்தோம். ‘ஒங்களுக்கு இது தேவையா ? ‘ என்ற ரீதியில் பார்த்துவிட்டு, டை கட்டும் டெமோ காட்டினார்.
‘சிங்கிள் நாட்டா ? டபுள் நாட்டா ? ‘
‘அப்டின்னா ? ‘ என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டோம். அப்படியே ஒரு அவசரக்கணக்கு போட்டு, எப்படியும் டபுள் நாட் சிங்கிள் நாட்டைவிடக் க ?டமாக இருக்கும் என்று லா ?ிக்கல் அண்ட் ரீ ?னிங்கில் முடிவுசெய்து கொண்டு ‘சிங்கிள் நாட் ‘ என்றோம்.
என்னதான் பொறுமையாக அவர் டை கட்டிக் காண்பித்தாலும், எங்களுக்கு ஏதோ மா ?ிக் நிபுணர் கயிறு வித்தை காட்டியது போல் இருந்தது. முதல் ?டெப் தவிர வேறு எதுவும் நினைவில் நிற்கவில்லை. போதாதற்கு எங்கள் எதிரில் நின்று கொண்டு அவர் செய்து காண்பித்ததால் இடவலக் குழப்பம் வேறு. அவருடைய தோளோடு ஒட்டி நின்றுகொண்டு ‘சார். மறுபடியும் ஒரு தடவ செஞ்சு காமிங்க. ஸ்டெப் பை ஸ்டெப்பா ‘ என்று கேட்டுக்கொண்டு, அவரைத் தொடர்ந்து ஒருவழியாக டை கட்டி முடித்தோம். கணேஷ்உக்கும் ஒன்று கட்டி எடுத்துக்கொண்டு அவரிடம் நன்றிகூறி வெளியேறினோம்.
அன்று மாலை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், டையை முழுதும் அவிழ்க்காமல் கழுத்து வளையத்தைச் சற்று நெகிழ்த்திப் பெரிதாக்கி கழற்றிவைத்துவிட்டு, மறுநாள் மாட்டிக்கொண்டு அலுவலகம் சென்றேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு சூசை போட்ட முடிச்சு தாலி முடிச்சு கணக்காய் கழற்றப்படவேயில்லை.
நானும் ராஜாங்கமும் அலுவலகத்திற்கு அலுவலக டிவிஎஸ் சுசூகியில் வந்து செல்வோம். பாத்திமா கல்லூரி தாண்டிதான் பேக்டரிக்குச் செல்லவேண்டும் என்பதால் காற்றில் முடியும், டையும் பறக்க, குளிர்கண்ணாடி அணிந்துகொண்டு பைக்கில் பறந்து செல்வோம். எங்கு சென்றாலும் டை! சமத் தையலகத்தில் சட்டை தைக்கக் கொடுக்கும்போது ‘டை காலர் ‘ என்று சொன்னோம். அநேகமாக அச்சமயத்தில் மதுரையில் டை கட்டித் திரிந்த கோ ?ட நாங்கள் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
பாண்டியன் பஸ்ஸில் அலுவலகம் வரும் ஆத்மாக்கள் எங்களை மனதாரத் திட்டித் தீர்த்தார்கள். சிவக்குமார் வந்து ‘பாவிங்களா, பழிவாங்கிட்டாங்களே ‘ என்றான்.
‘என்னடா ஆச்சு ‘
‘டவுன் பஸ்ல வந்தா ஒரேயடியா கேலி பண்றாங்கடா.. அவனவன் வேட்டியும் சட்டையும், லுங்கியுமா இருக்க கோமாளி மாதிரி டை கட்டிக்கிட்டு கம்பியப் புடிச்சு நின்னுக்கிட்டு வர்றது எனக்கே கேவலமா இருக்குடா ‘
‘அப்படியா ? ‘
‘என்ன நொப்படியா ? அதும் சாயங்காலம் கூட்டம் அடைச்சுக்கிட்டு வரும்போது சும்மாவே மூச்சு திணறும்.. அதுல டை வேற கழுத்தை இறுக்குது ‘
‘அடடா.. ‘
‘நேத்திக்குச் சாயங்காலம் கூட்டத்துல ரொம்ப கழுத்து இறுக்குதேன்னு பாத்தா, ஒரு பொடியன் பிடிக்கறதுக்கு வாகா எதும் இல்லாம என் டையப் பிடிச்சுக்கிட்டு நிக்கறான் ‘
அதற்கு மேல் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அவர்களைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. ஆனால் ஒருவருக்கும் இ.டி.யிடம் போய்ச் சொல்ல தைரியம் இல்லை.
அன்று மதியம் சூசை அவரது மொபட்டை நிறுத்திவிட்டு, டையைத் தளர்த்திக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க வந்து ‘தம்பிங்களா.. இந்த வெயில்ல டை போட்டுக்கறது க ?டமா இருக்குப்பா.. கொஞ்சம் சொல்லக்கூடாதா ‘ என்று கேட்க நாங்கள் ‘சொல்றோம் சார் ‘ என்றோம்.
கணே ? டையுடன் சண்டை போடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அளவு தெரியாமல் முடிச்சுப் போட்டுவிட, ஒன்றா வால் நீளமாகத் தொங்கும். அல்லது டை நீளமாக அவர் பேண்ட்டின் ஜிப்பைக் கடந்து தொங்கும். அப்போதெல்லாம் பேண்ட் பெல்ட்டுக்கு மேலே இன் செய்திருக்கும் சட்டை பட்டனை கழட்டி அதில் டையை நுழைத்து வைத்துக் கொள்வார். ஒருமாதிரி தராசில் சரி செய்து கட்டி வந்தாரென்றால், அவர் தொப்பையில் படிந்து, பார்ப்பதற்கு அசப்பில் தும்பிக்கை போன்றிருக்கும். சட்டை தைக்கும்போது டை என்ற ஒன்றை நினைத்தே பார்த்திராததால், சட்டை கழுத்துப் பட்டியில் டை சரியாகப் பொருந்தாமல், வெளியே தெரியும். இல்லாவிட்டால் காலர், நாய் காதுகளை லேசாக நிமிர்த்து அழைப்பவரை நோக்குவது போல், தூக்கிக் கொண்டிருக்கும்.
கொஞ்ச நாளில் எல்லாருக்கும் டை பழகிவிட்டது.
ஒருநாள் ஆபிஸ் பாய் ராஜ்உ டா கொடுக்கும்போது, ச்ிந்தியதில் டையில் ஒரு ரூபாய்க் காசு அளவிற்கு ஈரமாகி, உலர்ந்ததும் கறையாகிவிட்டது. அதைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று மாலையில் துவைத்துக் கொடியில் தொங்கவிட்டு, மறுநாள் பார்த்தபோது ‘திக் ‘கென்று இருந்தது. காய்ந்த டை பாம்பு உரித்துப் போட்ட சட்டைபோல் ஆகிவிட்டிருக்க, அயர்ன் செய்து பார்த்தும் முடியவில்லை. ஒருமாதிரி ஆங்காங்கே புடைத்துக்கொண்டு அசிங்கமாக இருக்க, வேறுவழியில்லாமல் தூக்கி எறியவேண்டியதாயிற்று. புது டை நூற்றியைம்பது ரூபாய் ஆகும். சம்பளமே முன்னூற்றைம்பது ரூபாய்தான் அப்போது. யோசிக்க வேண்டியிருந்தது.
***
ரா ?ு வந்து ‘சுந்தர் சார். இ.டி. கூப்பிடறாரு ‘ என்றான்.
உள்ளே போய் சலவைக் கதர் சட்டையில் அமர்ந்திருந்தவரிடம் ‘குட் மார்னிங் சார் ‘ என்றேன்.
‘எங்கேப்பா டை ? ‘
‘அது வந்து.. சார்… ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்.. ‘
‘என்ன ? ‘
‘ஒரு ஆர்வத்துல டை கட்டணும்னு ஒங்ககிட்ட சொல்லிப் போட்டுக்கிட்டேச்சு.. ரொம்ப நன்றி.. ஆனா கொஞ்ச நாளாவே மனசு உறுத்துது சார்.. ‘
‘ஏன்.. என்ன ஆச்சு.. மனசு உறுத்துதா ? கழுத்து உறுத்துதா ? ‘ என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.
‘இல்லை சார். பாரபட்சம் இருக்கக்கூடாதுங்கற ஒங்க கொள்கைப்படி பேக்டரில லோடு மேன்ல இருந்து மேனேஜர் வரைக்கும் எல்லாரும் ஒரே யூனிபார்ம்ல வராங்க. ஆபிஸ்ல இருக்கற எங்களுக்கும் அதே யூனிபார்ம் தான். ஆனா பாருங்க. யோசிக்காம டை வேணும்னு கேட்டுப் போட்டுக்கிட்டோம். அது எங்களை தொழிலாளர்ங்ககிட்ட இருந்து பிரிச்சிடுச்சுன்னு நெனக்கிறேன். பெரிய ஆபிசருங்க மாதிரி எங்களை அவங்க முன்னாடி காட்டிக்கற மாதிரி. மனசு ரொம்ப உறுத்துது சார் ‘
இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது.
***
மறுநாள் காலையில் சூசை வந்து ‘ரொம்ப தேங்க்ஸ் தம்பி ‘ என்று சொல்லிச் சென்றார்.
அவர் போனதும், நான் சட்டையின் மேல் பொத்தானைத் திறந்து காலரைப் பின் தள்ளி, ஏ சி குளிர் கழுத்தில் பரவ நாற்காலியில் சாய்ந்து கொண்டேன்.
——————————————————————————————————————————————————–
gitaravi@sancharnet.in
- ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்
- பத்தினிப் பாதுகை..
- குழந்தை.
- அப்பாவும் நீயே
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- EPR முரண்-1
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
- கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.
- குறும்பு
- நினைவலைகள் – *** டை ***
- தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்
- நூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்
- தமிழ் சினிமாவில் சண்டியர்…
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)
- நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- அமைதி
- பிதாமகன்
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- மஹேஸ்வரியின் பிள்ளை
- அமலா.. விமலா..கமலா
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- முகம்
- வாசம்
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- விடியும்!:நாவல் – (25)
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- இறங்கிய ஏற்றம் :
- வாழ்வே வரமா
- நடை முறை
- கவிதை
- கவிதைகள்