ந. முத்துசாமி
சில வருஷங்களுக்கு முன்பு, டில்லியில் பிரகதிமைதானம் பொருட்காட்சிக்கு தெருக்கூத்தை அழைத்திருந்தார்கள். இந்த ஏற்பாடு பன்ஸிகெளலுடையது. அவர்தான் இந்தியக் கூத்தில் விதூஷகன் என்ற தலைப்பை பொருட்காட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறியது. இதுபற்றி அவர் என்னிடம் ஏற்கனவே பேசியிருந்தார். இந்தியக்கூத்தில் விதூஷகன் அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அவர் அதில் வேலை செய்துகொண்டு வருகிறார். கட்டியக்காரனைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். கட்டியக்காரனைப் பற்றிய விஷயங்களைத் தொகுத்து அவனை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு (எனக்கும் காசிக்கும்) இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. கண்ணப்பத்தம்பிரான் குழுவோடு நானும் போனேன்.
நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம். அப்போது கண்ணப்பத்தம்பிரான் ‘இந்திரஜித் ‘ தெருக்கூத்து எழுதும் முயற்சியில் இருந்து கொண்டிருந்தார். அவரிடம் கம்பராமாயணம் யுத்தகாண்டம் இருந்தது. அதை நான் வண்டியில் படித்துக் கொண்டு போனேன். அவரோடு பேசிக்கொண்டு போனேன். யுத்தகாண்டம் முழுதையும் தெருக்கூத்தைப் போல இரவு முழுதும் நவீன நாடகமாக நடத்தவேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. கம்பன் பெறிய அதிசயத்தைக் கொடுத்தான். அவனிடம் காணப்படும் நாடகத்தன்மை பிரமிப்பூட்டியது. எனக்கு வண்டியில் இருப்புக் கொள்ளவில்லை. காலத்தில் இருப்புக் கொள்ளவில்லை. வண்டியில் இருந்து குதித்து காலத்தை தாண்டி ஓடி நிகழ்ச்சிக்கு வந்துவிட வேண்டும் போல் இருந்தது.
முன்பு பிரமித்து இருப்புக்கொள்ளாமல் காலம் தாண்டிக் குதித்தவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே நாடகாசிரியர்கள் இராமாயணத்தைக் கண்டு குதித்திருக்கிறார்கள். கம்பனைக் கண்டு. கம்பச்சித்திரத்தைக் கண்டு. காட்டும் காட்சிகளை மனதில் கண்டு குதித்திருக்கிறார்கள். இப்போது காட்சிகளை நாடகமாகக் கண்முன் கொண்டுவந்து அனைவரையும் குதிக்கச் செய்யவேண்டும். யுத்தகாண்டம் முழுதையும் அவ்வளவு விரைவில் நாடகமாக்கி விட முடியுமா ? கண்ணப்பத்தம்பிரான் இந்திரஜித்தை மேடையேற்றியது என்னையும் சிறிய அளவில் யோசிக்கத் தூண்டியது. காலத்தில் சிறிய அளவு. அதன் விளைவுதான் தலை.
இது இந்திரஜித்தின் தலை. பிரம்மாஸ்திரத்திலிருந்து மீண்டுவந்த பிறகு நிகும்பலையில் யாகம் செய்யப்போன இந்திரஜித்தின் யாகத்தைக் கலைத்து அவனுடைய தலையைக் கொண்டுவந்து விடுகிறேன் என்று இராமனிடம் சொல்லி விட்டுப் போகிறான் இலக்குவன். அப்படியே போர்களத்தில் வீழ்ந்த தலையை அங்கதன் கைகளில் சுமந்து கொண்டு போக அனுமன் தோளின் மீது இலக்குவன் போகிறான். தலையைக் கொண்டுபோய் ராமன் பாதத்தில் வைக்கிறார்கள். போர்களத்திற்கு வந்த இராவணன் இந்திரஜித்தின் உடல் உறுப்புகளை எல்லாம் தேடி எடுக்கிறான். தலையைக் காணவில்லை. உடலை மட்டும் அரண்மனைக்குத் தோளில் சுமந்துக் கொண்டு வருகிறான். அந்த உடலை தைலத் தோணியில் இட்டு வைக்கும்படியும் இழந்த அவன் தலையை மீட்டுக் கொண்டு வருவதோடு தலையைக் கொண்டு போனவன் தலையையும் கொண்டு வருவேன் என்று சொல்கிறான். இதுவரை தான் நாடகம்.
நாடகம் கம்பன் கவிதையின் இன்றைய தமிழ் வடிவத்தில் இருக்கும், காலம் காட்டும் இலக்கணச் சுத்தம் இருக்கும் – பாவங்கள் எல்லாம் கம்பன் சொல்லும் பாவங்கள். காட்சிகளாகப் பிரிக்கப்பட்ட இடைவெளி இராது நடனத்தோற்றங்களால் இணைக்கப்பட்டு விடும். இதற்கான தகவல்கள் கம்பனுடையவை. இராமன் தங்கியுள்ள பாடி வீடு, போர்களம், இராவணனின் அரண்மனை கோட்டை மதில் சுவர்கள், நிகும்பலை ஆகிய இடங்களை உண்டாக்குவதற்கு மேடை அமைப்பு பல தாளங்களோடும் ஓட்டங்களோடும் இருக்கும். இது திறந்த வெளியில் அமைக்கப்பட்டு காட்சிகள் கம்பசித்திரமாக ஒளியூட்டப்படும். மேடை அமைப்பைச் செய்ய பான்ஸி கெளல் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே, பிரஸன்னா ராமசாமியுடன் சேர்ந்து சில வேலைகள் தொடங்கி நடத்தப்பட்டிருக்கின்றன. நாடகத்தை கம்பனிலிருந்து தொகுத்து எழுதி முடித்து விட்டேன். நாடகத்தின் இசையை அமைக்க உதவும்படி அவன் சொல்லும் சப்தங்களையும் சேர்த்தே எழுதியிருக்கிறேன். வரும் சித்திரைக்கு அடுத்த சித்திரையில் மேடையேற்றிவிட வேண்டும். இது இந்தியா முழுதும் தெரிவதாக இருக்க வேண்டும். எனவே பல இந்தியர்கள் இதில் ஈடுபடுவார்கள்.
திண்ணை
நாடக அறிமுகம் – தலைந. முத்துசாமி சில வருஷங்களுக்கு முன்பு, டில்லியில் பிரகதிமைதானம் பொருட்காட்சிக்கு தெருக்கூத்தை அழைத்திருந்தார்கள். இந்த ஏற்பாடு பன்ஸிகெளலுடையது. அவர்தான் இந்தியக் கூத்தில் விதூஷகன் என்ற தலைப்பை பொருட்காட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறியது. இதுபற்றி அவர் என்னிடம் ஏற்கனவே பேசியிருந்தார். இந்தியக்கூத்தில் விதூஷகன் அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அவர் அதில் வேலை செய்துகொண்டு வருகிறார். கட்டியக்காரனைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். கட்டியக்காரனைப் பற்றிய விஷயங்களைத் தொகுத்து அவனை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு (எனக்கும் காசிக்கும்) இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. கண்ணப்பத்தம்பிரான் குழுவோடு நானும் போனேன். நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம். அப்போது கண்ணப்பத்தம்பிரான் ‘இந்திரஜித் ‘ தெருக்கூத்து எழுதும் முயற்சியில் இருந்து கொண்டிருந்தார். அவரிடம் கம்பராமாயணம் யுத்தகாண்டம் இருந்தது. அதை நான் வண்டியில் படித்துக் கொண்டு போனேன். அவரோடு பேசிக்கொண்டு போனேன். யுத்தகாண்டம் முழுதையும் தெருக்கூத்தைப் போல இரவு முழுதும் நவீன நாடகமாக நடத்தவேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. கம்பன் பெறிய அதிசயத்தைக் கொடுத்தான். அவனிடம் காணப்படும் நாடகத்தன்மை பிரமிப்பூட்டியது. எனக்கு வண்டியில் இருப்புக் கொள்ளவில்லை. காலத்தில் இருப்புக் கொள்ளவில்லை. வண்டியில் இருந்து குதித்து காலத்தை தாண்டி ஓடி நிகழ்ச்சிக்கு வந்துவிட வேண்டும் போல் இருந்தது. முன்பு பிரமித்து இருப்புக்கொள்ளாமல் காலம் தாண்டிக் குதித்தவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே நாடகாசிரியர்கள் இராமாயணத்தைக் கண்டு குதித்திருக்கிறார்கள். கம்பனைக் கண்டு. கம்பச்சித்திரத்தைக் கண்டு. காட்டும் காட்சிகளை மனதில் கண்டு குதித்திருக்கிறார்கள். இப்போது காட்சிகளை நாடகமாகக் கண்முன் கொண்டுவந்து அனைவரையும் குதிக்கச் செய்யவேண்டும். யுத்தகாண்டம் முழுதையும் அவ்வளவு விரைவில் நாடகமாக்கி விட முடியுமா ? கண்ணப்பத்தம்பிரான் இந்திரஜித்தை மேடையேற்றியது என்னையும் சிறிய அளவில் யோசிக்கத் தூண்டியது. காலத்தில் சிறிய அளவு. அதன் விளைவுதான் தலை. இது இந்திரஜித்தின் தலை. பிரம்மாஸ்திரத்திலிருந்து மீண்டுவந்த பிறகு நிகும்பலையில் யாகம் செய்யப்போன இந்திரஜித்தின் யாகத்தைக் கலைத்து அவனுடைய தலையைக் கொண்டுவந்து விடுகிறேன் என்று இராமனிடம் சொல்லி விட்டுப் போகிறான் இலக்குவன். அப்படியே போர்களத்தில் வீழ்ந்த தலையை அங்கதன் கைகளில் சுமந்து கொண்டு போக அனுமன் தோளின் மீது இலக்குவன் போகிறான். தலையைக் கொண்டுபோய் ராமன் பாதத்தில் வைக்கிறார்கள். போர்களத்திற்கு வந்த இராவணன் இந்திரஜித்தின் உடல் உறுப்புகளை எல்லாம் தேடி எடுக்கிறான். தலையைக் காணவில்லை. உடலை மட்டும் அரண்மனைக்குத் தோளில் சுமந்துக் கொண்டு வருகிறான். அந்த உடலை தைலத் தோணியில் இட்டு வைக்கும்படியும் இழந்த அவன் தலையை மீட்டுக் கொண்டு வருவதோடு தலையைக் கொண்டு போனவன் தலையையும் கொண்டு வருவேன் என்று சொல்கிறான். இதுவரை தான் நாடகம். நாடகம் கம்பன் கவிதையின் இன்றைய தமிழ் வடிவத்தில் இருக்கும், காலம் காட்டும் இலக்கணச் சுத்தம் இருக்கும் – பாவங்கள் எல்லாம் கம்பன் சொல்லும் பாவங்கள். காட்சிகளாகப் பிரிக்கப்பட்ட இடைவெளி இராது நடனத்தோற்றங்களால் இணைக்கப்பட்டு விடும். இதற்கான தகவல்கள் கம்பனுடையவை. இராமன் தங்கியுள்ள பாடி வீடு, போர்களம், இராவணனின் அரண்மனை கோட்டை மதில் சுவர்கள், நிகும்பலை ஆகிய இடங்களை உண்டாக்குவதற்கு மேடை அமைப்பு பல தாளங்களோடும் ஓட்டங்களோடும் இருக்கும். இது திறந்த வெளியில் அமைக்கப்பட்டு காட்சிகள் கம்பசித்திரமாக ஒளியூட்டப்படும். மேடை அமைப்பைச் செய்ய பான்ஸி கெளல் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே, பிரஸன்னா ராமசாமியுடன் சேர்ந்து சில வேலைகள் தொடங்கி நடத்தப்பட்டிருக்கின்றன. நாடகத்தை கம்பனிலிருந்து தொகுத்து எழுதி முடித்து விட்டேன். நாடகத்தின் இசையை அமைக்க உதவும்படி அவன் சொல்லும் சப்தங்களையும் சேர்த்தே எழுதியிருக்கிறேன். வரும் சித்திரைக்கு அடுத்த சித்திரையில் மேடையேற்றிவிட வேண்டும். இது இந்தியா முழுதும் தெரிவதாக இருக்க வேண்டும். எனவே பல இந்தியர்கள் இதில் ஈடுபடுவார்கள்.
|
|
Thinnai 2000 July 02 |
திண்ணை
|