நட்பாராய்தல்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

பாஷா


என் சில
தோழமைகளே
கடலலை ஒதுக்கிய
கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து
உங்கள் தடங்களை பார்த்து
ஒரு சில கேள்விகள்….

தகுதியென்னும் தராசிலே
என்னையேன் நிறுத்தீர் ?
மிகுதியாய் தோன்றினேனோ ?
முகமூடி தரித்திருந்தேனோ ?

ஒரு மனம் ஒரு உடல்
ஒட்டிப்பிறந்த இரட்டையிரிலும் பார்த்ததுண்டோ ?
வேறுபாடுகள் வெளிப்பட்டபோதும்
அது மதிக்கப்படும்போதே
நட்பு பலப்படுவதை
நீர் அறியவில்லையா ?

துயரத்தில் தோள்கொடுக்கும்
தூரத்தில் நானில்லையானால்
நான் நண்பனில்லையா ?

என் செயலொன்றே
நட்பு சொல்லுமெனில்
நட்பின் இலக்கணம் வாலாட்டும்
நாயொன்றே அறியுமில்லையா ?

எதிர்பார்ப்புகள் பூர்த்திசெய்யும்
அமுதசுரபி எதிர்பார்த்தீரொ
என்னிடம் ?
எப்பொழுதும் உங்கள் உள்ளங்களை
ஏந்தும் பிச்சை பாத்திரம்மட்டுமே
என்னிடம் உள்ளதை உணரவில்லையோ ?

ஆகவே தோழமைகளே
புறக்கணிப்பு மலம் புசிப்பதிலும்
நிபந்தனை நெருப்பில் நெஞ்சம் கருகுவதிலும்
உயர பறந்தாலும்
உதைத்தெழும்பபட்ட கால்பந்தாய் வாழ்வதிலும்
உடன்பாடில்லையெனக்கு!
ஒருசில சந்தர்ப்பங்களில்
உயிர்தொட்ட உங்கள்
உள்ளங்களோடு போகிறேன்!
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா