திருமாவளவன்
இந்த வேடிக்கை தொடங்கி
இரண்டு நாட்கள் தான் ஆகிறது
முதல் நாள் காலை
தக்கத் திமிக்கிட
என்றொரு கவிதை தாளம் மீட்டி
தத்தித் திரிய
குந்தியிருந்து மெல்லப்பதுக்கி
குறித்துக் கொள்ள
பால்கனி ஓரம் ஒதுங்கிய போதில்
தற்செயலாக கண்ணில் வீழ்ந்தது
செரி மரக்கிளைகளில் அங்கும் இங்கும்
தத்தியபடியே இருந்தன
இரண்டும்
தொலைந்த பொருளொன்றைதேடுதல்
அன்றில்
இழந்த சோகத்தில் மாளுதல்
கூடும் என்றுணர்ந்தேன்
நேற்றுக்காலை
நேரத்தோடு வந்தன மீள
மெல்ல மிக ஆறுதலாக
தாவும் ஒவ்வொரு கொம்பரிலும்
ஓய்ந்து இளைப்பாறி
இணையோடு அலகோடு அலகையிணைத்து
கோதிப் பிணைக்து
காதல் பேசி
மாலை வரையிலும் மகிழ்வோடிருந்தன
இன்று காலை
குதூகலக் கூச்சல் குலந்ததென்
தூக்கம்
அடிக்கடி போவதும் மீள்வதுமாக
புல்லுக் கீற்றை ஒவ்வொன்றாக
மூக்கில் சுமந்து கொணர்ந்து
சமைக்கத் தொடங்கிற்று
வல்லன பரப்பி
இடையிடை இடையினம் சொருகி
உள்ளே மெல்லனெ தூவ
நேர்த்தியாய் இழைந்தது கூடு
கைதேர் தச்சனின் லாவகந் தோற்க
எத்தனை நுணுக்கம்
இத்தனை அநுபவம் வாய்க்க
எத்தனை காலத் தலைமுறை முயற்சி
இப்பொதெனக்கு
பறவைகளோடு காலங்கழிப்பது
இனிதாயிருக்கிறது
- காதல் புனிதமென்று
- மூன்று பேர் – 3 (தொடர் நிலைச் செய்யு:ள்)
- துணை
- கருப்புச் செவ்வாய்
- புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள்
- முட்டை — ரவாப்பணியாரம்
- சிக்கன் பெப்பர் மசாலாக்குழம்பு
- உலகத்தின் வரலாறு
- வாடகை வாழ்க்கை…
- விடிவெள்ளி
- சேவல் கூவிய நாட்கள் – 3 (குறுநாவல்)
- சித்ர(தே)வதை
- எங்கிருந்தாலும் வாழ்க
- இயற்கையைச் சுகித்தல்
- டி.எஸ் எலியட்டும் கள்ளிக்காட்டுக் கனவுகளும்………(5)
- நட்பை நாகரீகமாக்குவோம்…
- மலேசியப்பாவாணர் ஐ. உலகனாதனின் கவிதைகள்
- இந்த வாரம் இப்படி — செப்டம்பர் 16, 2001
- உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்
- இன்னொரு மனசு.
- சலனம்
- பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.