திரு ஜயபாரதன் கட்டுரைகள்

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

நந்திதா


பேரன்பு மிக்க ஐயா
வணக்கம்
பெருமதிப்புக்குரிய திரு ஜயபாரதன் அவர்களின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. பேறறிஞர் சாகரடீஸின் மரணம் பற்றிய அவரது கட்டுரை கண்ணீரை வரவழைத்து விட்டது, என் எதிரிலேயே சாக்ரடீஸ் மரணம் அடைந்தது போன்ற உணர்வு தோன்ற கட்டுரை வடிப்பது எவருக்கும் எளிதில் வராத ஒன்று, மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார், பாராட்ட எனக்குத் தகுதியில்லை. போற்றிப் புகழ்கிறேன், அவரை வணங்குகிறேன்,

காரல்சாகன் பற்றிய கட்டுரை, எல்லோராலும் படிக்கப் பட வேண்டிய ஒன்று.,
மேதை கார்ல் சாகன் அவர்கள் தஞ்சையிலுள்ள தாராசுரம் கோயிலுக்கு வந்து ஆண்டு உறையும் நடனப் பெருமான் திருவுருவத்தில் உடுககை (டமருகம்) மற்றொரு கையில் உள்ள தீ யையும் கண்டு இங்கல்லவோ உள்ளது சிருஷ்டியின் ரகசியம் என்று வியந்தார் என்ற செய்தியினைப் படித்திருக்கிறேன். கார்ல் சாகனின் வரலாற்றை எளிய முறையில் விளக்கிய திரு ஜயபாரதன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி
இவைகளை லாப நோக்கின்றிப் பதிப்பிக்கும் திண்ணைக்குக் காலமெல்லாம் நன்றி உள்ளவளாக இருப்பேன்
அன்புடன்
நந்திதா

Series Navigation

நந்திதா

நந்திதா