திருக்குறள் விழாவில் விளம்பரமோகம்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

நீ “தீ”


கடந்த 08.04.2007 அன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வளர் தமிழ் இயக்கம் இணைந்து நடத்திய விழா இனிதே நடைபெற்றது.

விழாவின் சில சுவாரஸ்யமான தகவல்கள்

இவிஎஸ் குழுமத்தினரால் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கற்க கசடறக் குறள் பதித்த குறள் ஓவயிம் வழங்கப்பட்டது. அதில் எழுத்துப்பிழை இருப்பதை கவனித்த சில தமிழ் ஆர்வளர்கள் விநியோகித்தவரிடம் தெரிவத்தனர். அவரோ தெரிந்தே விநியோகிப்பதாக கூறினார். சரி ஜயா பிழையை திருத்தியாவது குடுக்கலாமல்லவா என்று வருத்தப்பட்டனர். விநியோகிப்பவரோ இட்ட பணியை (அதாங்க விநியோகிப்பதை) செய்ய தொடங்க தமிழ் ஆர்வளர்கள் அந்த குறள் ஓவிய அட்டையை வாங்கி பிழையை திருத்தினா.; ஆனால் அதன் பின் வாங்கி விநியோகிக்க தான் அந்த விநியோகிப்பவர் வரவில்லை. ஆக இவிஎஸ் குழுமத்தினருக்கும் இவ்விழா ஏற்பாட்டாளர்களுக்கும் விளம்பரமே முக்கியதாகிவிட்டது.

அரங்கம் நிறைந்திருந்தது
குறிப்பிடதக்கது பலர் நின்று கொண்டு பார்த்தது.

டாக்டர் அப்துல்கலாமின் உரை அதிசய மாணவி தீபாவின் உரையை திரையிட்டது பாராட்டதக்கது வரவேற்க தக்கது.

செல்வி குமுதா முருகடியான் இனிய குரலில் தமித்தாய் வாழ்துப்பாடினார். பின் நாட்டியம் நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்துவிழாவை துவக்கிவைத்தது மிகவும் சிறப்பான அம்சம்.

சிறப்புரை

டாக்டர் ஹிமானா சையத் தமிழகத்தில் இருந்து வந்திருந்தார். “நிற்க அதற்கு தக” எனும் தலைப்பு கொடுக்கப்பட்டது. அவரு பாவமா இல்ல கேட்ட நாங்க பாவமானு தெரியலை “நிற்க அதற்கு தக” உண்ட மயக்கத்தில் மறந்திட்டார் போல (இல்லைனா உண்ட வீட்டிற்கு ரெண்டகம் பண்ணகூடாதுனு ஏதும் பேசினாரா?) உண்டதற்கு தக பேசினாருதான் என்று சொல்ல வேண்டும். கொஞ்ச நேரம் அசந்து தூங்கிட்டனா பார்த்துக்குங்களே.

அடுத்து மலேசிய வழக்குரைஞர் பாண்டித்துரை பலத்த கைத்தட்டலுக்கிடையே திருக்குறள் விருந்து என்னும் தலைப்பில் பேசினார்.

“ மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”

என்னும் குறள் பற்றி விவரித்து பேசினார். பார்த்தவர்கள் எல்லோரும் கெக்க பிக்கனு சிரிச்சாங்க. அது என்னானே தெரியலைங்க சிங்கப்பூர்க்கு வந்து பேச ஆரம்பிச்சா எல்லோருக்கும் அம்னீசியா நோய் வந்திரும் போல.

ஒரு வருடத்துக்கு முன்னாடி சிங்கப்பூர் வந்த தமிழக விருந்தினர் பா.விஜய் பற்றி அவ்மேடையில் பாண்டித்துரை என்ன பேசினார் என்று மனசாட்சியுடன் கேட்டவர்களுக்கு நல்லா தெரியும்க.

சென்னையில மணிவச்சா காணாம போகுதாம். ஏம்பா கோலாலாம்பூரில் மணி வச்சா மணியோட சேர்த்து கோலாலாம்பூரும்ல காணமா போகுது. தமிழ்நாட்டு ஓட்டலில் பாராம் . மலேசியாவில் இல்லையா? அங்க தண்ணியடிக்கமா வேற என்ன……………………..?

பாண்டித்துரை வீட்டை விட்டு வெளியே வந்த கண்ணை மூடிக்கிட்டு காதைபொத்திகிட்டுதான் போவிகளோ!

தமிழ் வாழும் மொழி அதை இவரு வளர்கிறாராம். ஏம்பா எம்புட்டு பொட்டாசியம் போட்ட ……
அதான் சிங்கப்பூரில் பேச்சு தமிழ் வேணும் பேச்சு தமிழ் வேணும்ணு தமிழில் பேசுங்கனு குய்யோ முறையோனு கத்துறாங்களோ. ஏதோ வளர்கிறேனு சொன்னிகலே மலேசியா போறதுக்கு முன்னாடி கொஞ்சம் இங்கயும் போட்டுட்டுப் போங்க.

பாண்டித்துரையின் பேச்சை கேட்டப்ப எனக்கு கிரிக்கெட் ஞாபகம் தான் வந்தது.

11 முட்டாள் விளையாடும் விளையாட்டை 11000 ஆயிரம் முட்டாள்கள் பார்பதாக மேதை பெர்னாட்சா சொன்னார்

ஒரு பைத்தியத்தை இன்னொரு பைத்தியம் பார்த்த என்னங்க பண்ணும். கேக்க பிக்கனு சிரிக்கும் கை தட்டும் . அதாங்க நடந்தது மேடையில் ஒரு பைத்தியம் தைய தக்கனு குதிக்க அதபார்த்துகிட்டு இருந்த பலநூறு பைத்தியம் கெக்க பிக்கனு சிரிச்சுச்சு. அதுல எனக்கு பின்னாடி ஒன்று இருந்திச்சுங்க வெண்கல மணியில குரலை செஞ்சிருப்பாங்க போல.

விழாவில் சிப்புரை மட்டும் இல்லையெனில் இனிதாக இருந்திருக்கும்.

எமுத்து: நீ “தீ”


hsnlife@yahoo.com

Series Navigation

நீ “தீ”

நீ “தீ”