தாகூரின் கீதங்கள் – 57 தொப்புள் கொடி அறுப்பு !

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



தாயின் தொப்புள் கொடி
அறுத்ததும்
சேய் தொடுவது
மண்தளத்தை.
அதற்குப் பிறகு தான்
மதலை
அடையாளம் காணும்
அன்னையை !
அதைப் போலவே இதுவும் :
தொப்புள் கொடியுடன்
சுற்றிக் கொண்டுன்
அன்புக் கனிவிலே
கண்காணிக்கக் படும் நாங்கள்
உன்னைக்
காணாமலே இருப்போம்
குழந்தைகள் போல் !

அந்த நாளிலே
ஒரே வெட்டுக் கோடரியால்
நங்கூரப்
படகு வடத்தை
வெட்டி
விலக்கிய பின்
விழிப்புண்டாகும் எமக்கு !
அதற்குப் பிறகுதான்
நேருக்கு நேராக
உன்னைப்
பார்ப்போம் நாம் !

ஒளிமய ரூபனே ! நீயிங்கு
வந்திருக்கிறாய் !
கதவினை
உடைத்து வந்த
உனக்குத்தான் வெற்றி !
இருள் குவிந்த
இந்தக் குவலயத்தை
ஊடுருவி
உன்னதக் காட்சி
அளிக்கும்
உனக்குத்தான் வெற்றி !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 24, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா