தாகூரின் கீதங்கள் – 46 நமது நெருங்கிய நட்பு !

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


காவி வண்ணத்தில் உன் முகத்திரை என்
கண்களுக்குப் போதை ஊட்டும் !
எனக்கு நீ தொடுத்த
மல்லிகை மாலை
புல்லரிக்கச் செய்யும் இதயத்தை !
கொடுக்க மறுப்பதும்,
ஏங்க வைத்து
ஈதலும் நம்
காதல் ஊடலே !
மனதைத் திறப்பதும்
மறுபடி மூடி
மறைப்பதும் ஊடலின்பமே !
சிறிது நாணம் !
சிறிது புன்னகை ! அடுத்து
இதயங்களின் இனிய
பொருளற்ற
போராட் டங்கள் !
இறுதியில்
ஒரு கானமாய்ப் போனது
உனக்கும் எனக்கும்
இருந்த இந்த
நெருங்கிய பிணைப்பு !

நிகழ் கால நடப்பைத் தாண்டி
எதிர்பார்க்கும்
புதிர்கள் எதுவும் இல்லை !
முடியாத வற்றைச்
சாதிக்க நாம்
முயல வேண்டிய தில்லை !
உன் கவர்ச்சிக்குப் பின்னால்
வருகின்ற
ஒரு நிழலில்லை !
ஆழ்ந்த காரிருளில் உறுதியோடு
உளவ வேண்டிய
அவசிய மில்லை நமக்கு !
இறுதியில்
ஒரு கானமாய்ப் போனது
உனக்கும் எனக்கும்
இருந்த இந்த
நெருங்கிய பிணைப்பு !

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 25 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா