தாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு !

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உலகத்து நாயகியே ! ஒருநாள்
வெற்றி வந்திடும் !
வெல்வதற்கு உள்ளன இன்னும் !
அஞ்சுவ தில்லை நான் !
என் மகாராணியே !
நின் அழைப்பை ஏற்றுக் கொண்டு
நிறைவேற்றி வைப்பேன் !
நடுக்கம் காணாது
களைத்த என் உறுப்புகளில் !
தடுமாற்றம் தோன்றாது
என் குரலில் !
விழிப்புடன் இருக்கிறேன்
இருள் சூழ்ந்திடும் இரவு
முழுவதும் !
பொழுது விடிந்து
புதிய நாள் புலரும் போது
உன் வேலைப் பளுவை
நின் புதுச் சீடர் பொறுப்பிலே
ஒப்படைத்து விடுவேன் !
என் இறுதி வாசகம்
ஓங்கி முழக்கும்
உன் உன்னத அழைப்பின்
மகத்துவத்தை !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா