தாகூரின் கீதங்கள் – 27 புல்லாங்குழலை ஏன் கொடுத்தாய் ?

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



கீழ்வான வெளுப்பு அந்திமப் பொழுது
இரவு வேளை மூன்றும்
மணமகளாய் எண்ணிக் கொண்டு
வித விதப் பூமணக்கும்
பன்னிறத் தேன் துளிகளை
என்னிடம் கொண்டு வந்தன !
தெளிவில்லா அக்குழப்ப உணர்வு
ஒழிந்தது
உண்மையாக இன்று !
மயக்கும் இயற்கைப் பண்பாடு
என்னை அகன்று
ஓய்வெடுத்துக் கொண்டால்,
கவலைப் பட மாட்டேன் நான் !
சந்திலிருந்து அரண்மனை
வாசலுக்கு நான்
வந்திடச் செய்துள்ளாய் நீ ! எனக்கு
வலுவுள்ள நெஞ்சைத் தா
கடின மெய் நெறி
வடிவைக் காட்டு எனக்கு
முடிவாக !

அன்னையே ! நானிந்த அவனியில்
அவதரித்தை உணர்ந்த போது,
பொழுது போக்க
எனக்கொரு புல்லாங் குழலை
ஏன் அளித்தாய் ?
இரவும் பகலும்
நாளும் பொழுதும்
நீண்ட நேரம் அதைத்தான்
ஊதினேன் ஊதினேன்
ஊதியே பூரித்தேன்
இன்னிசை வசப்பட்டு !
கண்காணாப்
பூதள எல்லைக்கு அப்பால்
ஓரிடத்தை
அடைந்துள்ள தாகக் கண்டேன்
முடிவாக !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா