தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மடிந்து போகும்
மண் பிறவிகளுக்குத்
தொல்லுலகில்
எல்லாமே நீ வாரி
வழங்கி யிருந்தாலும்
இன்னும் அவர்
ஏழைகளாய் இருக்கிறார் !
இறுதியில் உனைத் தேடிச்
செல்வார் !
எப்போதும் ஓடும் பாதையில்
நதி செல்கிறது தன்
கடமைகளை
முடித்துக் கொண்டு !
நில்லாமல் விரைவாய்
நின் பாதங்களில் பொழிகிறது
ஆற்று வெள்ளம்
இறுதிச் சங்கமத்தில் !

தரணி பூராவும் நறுமணத்தைப்
பரப்பும் பணி இன்னும்
பூர்த்தியாக வில்லை
பூவிற்கு !
உன்னை வழிபடும்
முறையில் தான் தெரியும்
முடிவாக மலரின்
அங்கீகரிப்பு !
உலக வாழ்வைப் புறக்கணிப்பது
உண்மை வழிபா டாகாது !
கவிஞன் ஆக்கும் பாக்களின்
வாக்கிய மெல்லாம்
வெவ்வேறு பொருள் அளிக்கும்
ஒவ்வொரு வருக்கும் !
எழுதப் பட்டதின்
முக்கிய நோக்கம் முடிவாகத்
தன்னடி வைக்க
நின்வழி நோக்கி !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா