‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

ஜெயக்குமார்


தமிழகத்தில் இப்போது ஒரு கூட்டம் ‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ என்ற பெயரில் தமிழை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு சில

போராட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறது. அவை என்ன போராட்டங்கள் என்று பார்த்தால் தமிழ் சினிமாவிற்கு ஆங்கிலப்பெயர் எதிர்ப்பு,இந்தி எழுத்துக்களை தார்கொண்டு அழிப்பது, மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள எதிர்ப்பு, கற்பு பற்றி குஷ்பு கூறியதற்கு எதிர்ப்பு மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த சுகாஸினிக்கு எதிர்ப்பு போன்றவைதான்.இப்படிப்பட்ட போராட்டங்களால் தமிழ் வளர்ந்து விடுமா ? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

உங்கள் வெற்றி என்பது மற்றவர்களின் தோல்வி மட்டும் அல்ல. ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓடி வெற்றிபெறவேண்டிமேயன்றி முன்னால் ஓடுபவர்களின் கால்களுக்கு இடையில் கம்பை விட்டு அவர்களை கீழெ விழச்செய்து நீங்கள் வெற்றிபெறக்கூடது. நம் அழகு தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்து திட்டங்களை வகுத்து செயல்படவேண்டுமே தவிர மற்றவர்களை குறைகூறிக்கொண்டும் மற்ற மொழிகளை குறைகூறிக்கொண்டும் இருக்கக்கூடாது.

தமிழ் இவர்கள் அறியாத இணையதளங்கள் வாயிலாக நன்றாக வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. மேலும் தமிழக அரசு நினைத்தால் எளிதாக தமிழை வளர்க்க முடியும். அப்படி அவர்கள் வளர்க்க தவறினால் சில போராட்டங்களை நடத்தி அரசிடம் கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

1. பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு மொழியாக படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று ஒரு அரசு

ஆணை பிறப்பிக்கச்சொல்லலாம்.

2. பொறியியல் மற்றும் மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இப்பொது எடுத்துக்கொள்ளும் கனிதம்,இயற்பியல்,வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் தமிழையும் சேர்த்துக்கொள்ள அரசை வலியுறுத்தலாம். இதனால் மாணவர்கள் தமிழிலும் அதிக ம்திப்பெண்கள் எடுக்க முயற்சி செய்வார்கள். அப்படி படிக்கும் போது தமிழின் சுவை அறிந்து அதில் அவர்களுக்கு ஆர்வமும் ஏற்படும்.

காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஆடு,மாடு மற்றும் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த சிறுவர்கள் ஒரு வேளை உணவுக்காகவாவது ப்ள்ளிக்கு வந்து பாடம் கற்க மாட்டார்களா என்ற் எண்ணத்தில் தான் மதிய உணவு திட்டத்தை துவங்கினார். அதேபோல் அரசு வேலை வாய்ப்பு, பொறியியல் மற்றும் மருத்துவ பட்ட படிப்புகளுக்காகவாவது நம் இளைய தலைமுறை தமிழ் படிக்கட்டும் அதன் சுவை அறியட்டும்.

மேற்கூறிய யோசனைகள் தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் உயிர் மற்றும் தான் ஒரு தமிழினத்தலைவர் என்று கூறிக்கொள்ளும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தெரியவில்லையா, அல்லது அப்படி செய்தால் ஆங்கில மொழி வழி கல்வி பயிலும் தன் பேரன்,பேத்திகளுக்கு மருத்தவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற சுயநலத்தில் செய்யாமல் விட்டிருப்பாரா ?. இவருடைய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள்தான் இன்று தமிழ் பாதுகாப்புக்குழுவின் தூண்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள். இதே தலைவர்கள் கூட நாளை நம் நாட்டின் முதல்வராக வந்தாலும் தங்களின் வாரிசுகள் நலம் கருதி இதை செய்யமாட்டார்கள்.

3. ஊட்டி, கொடைக்கானல் ஏன் சென்னையில் கூட சில பள்ளிகளில் தமிழ் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் தமிழில் பேசினால் அபராதமும் விதிக்கப்படுகிறது (தமிழக இளைஞர்கள் தங்கள் தலைவராக எண்ணிக்கொண்டிருக்கும் ரஜினியின் மனைவி நடத்தும் பள்ளியிலும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்). இப்பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய போராட்டம் நடத்தலாம்.

4. தினம், தினம் நம் அழகு தமிழை கொலை செய்து கொண்டிருப்பது இங்கே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு

தொலைக்காட்சிகள்தான். இலங்கைத்தமிழர்களால் ஜ்ரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் சில தொலைக்காட்சிகள் அணைத்து

நிகழ்ச்சிகைளையும் அழகு தமிழில் தொகுத்து வழங்குகின்றன. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் நமக்கு அவர்களுக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாதா என்ற சந்தேகம் கூட எழும்.அந்த அளவுக்கு சிறப்பாக வழங்கிகொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கு தொடர்ச்சியாக 4 வார்த்தைகள் தமிழ் பேசத்தெரியாதவர்கள்தான் நிகழ்ச்சித்தொகுப்பாளர்களாக உள்ளனர்.பகுத்தறிவு பேசும் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சியில்கூட முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளை வளர்க்கும் தொடர்கள்தான் வலம் வருகின்றன. நம் மொழியை அழிக்க நினைக்கும் இவர்களுக்கு எதிராக போரிடுங்கள்.

தமிழ் பாதுகாப்பு போராட்டம் என்பது நம் மொழியை கற்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அதை அழிக்கும் சக்திகளிடம் இருந்து

காப்பாற்றுவதாக மட்டுமே அமையவேண்டும்.

ஜெயக்குமார்

mjai_kumar_hotmail.com

Series Navigation

ஜெயக்குமார்

ஜெயக்குமார்