தகவல்: ரெ.கார்த்திகேசு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும்
அஸ்ட்ரோ தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய
தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
(தகவல்: ரெ.கார்த்திகேசு)
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலேசியத் துணைக்கோள தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோவின் வானவில் ஒளியலையும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டி இரண்டின் முடிவுகளின் அறிவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் ஏப்ரல் 12ஆம் தேதி, மலேசியத் தலைநகர் குவால லும்பூரில் விமரிசையாக நடைபெற்றன.
இந்த வரிசையிலான முதல் நாவல் போட்டி 2005ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது முதன்மைப் பரிசாக பிரபல மலேசியத் தொழிற்சங்கவாதி ப்பி.ப்பி.நாராயணன் பெயரில் விருது வழங்கப்பட்டது. 2007இல் தொடங்கி 2008இல் முடிவுற்ற இந்த இரண்டாம் நாவல் போட்டிக்கு மறைந்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள தலைவருமான ஆதி குமணன் பேரில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான பரிசுத் தொகையையும் பிற பரிசுகளின் தொகையையும் பிரபல தொழில் அதிபர் ஓம்ஸ் தியாகராஜன் வழங்கியிருந்தார். அதற்கு மேல் முதன்மைப் பரிசு பெற்றவர்களுக்கு எஸ்.ஜி. பயண நிறுவனத்தினர் சென்னை சென்றுவரும் விமானச் சீட்டும் வழங்கினார்கள்.
இந்த இரண்டாம் நாவல் போட்டிக்கு 21 நாவல்கள் வந்திருந்தன. இந்த நாவல்களை மூன்று உள்ளூர் நீதிபதிகளான டாக்டர் ரெ.கார்த்திகேசு, முனைவர் வே.சபாபதி, முனைவர் திலகவதி ஆகியோர் பரீசிலித்தனர். கதையின் கரு, கதைப்பின்னல், நடை, உத்திகள் என்று பிரித்து எண்கள் போடப்பட்டு பின்னர் கூடிப்பேசி இணக்க அடிப்படையில் இவை வரிசைப்படுத்தப்பட்டன.
இந்த வரிசையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நான்கு நாவல்கள் தமிழக நீதிபதிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. தமிழக ¸ பிரபல இலக்கியவாதிகளான திரு மாலன் மற்றும் திருமதி வாசந்தி இருவரும் நீதிபதிகளாக இருந்தார்கள். இவர்கள் நான்கு நாவல்களையும் தரவரிசைப்படுத்திக் கொடுத்தார்கள். அதன்படியான இறுதி முடிவுகள் வருமாறு:
முதன்மைப் பரிசு: ஆதி குமணன் விருது (மலேசிய ரிங்கிட் 10,000): “மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை” – எழுதியவர் திருமதி மங்களகெளரி. அதிகம் அறியப்படாத மங்களகெளரியின் வெற்றி வந்திருந்தோரை அதிசயிக்க வைத்தது. முதிர்ந்த எழுத்தாளர்கள் பலரின் படைப்புக்களைப் பின்னுக்குத் தள்ளி மேல் வந்த இது அவரின் முதல் நாவலும் கூட. ஒரு தனித்து வாழும் தாய் மல்லிகைத் தோட்டம் போட்டுத் தன் வாழ்வோடு போராடுகின்ற கதையை அழகிய பின்னலாகக் கொடுத்திருந்தார்.
முதல் பரிசு: “நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்” – எழுதியவர் கே.பாலமுருகன். (மலேசிய ரிங்கிட் 5,000.) மலேசியத் தமிழ்க் குடும்பம் ஒன்றின் சிதைவைக் கொஞ்சம் இருண்மைப் பாணியில் சொல்லுகின்ற நாவல். அண்மையில் அதிகமாகச் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வரும் இளைஞரான பலமுருகனின் முதல் நாவல் இது.
இரண்டாம் பரிசு: “பிரிவு நிரந்தரமில்லை” – எழுதியவர் கே.சுப்பிரமணியம். (மலேசிய ரிங்கிட் 3,000.) மலேசியாவில் அறியப்பட்ட எழுத்தாளர். மலேசியாவின் கம்யூனிச கீழறுப்புப் போர் நடந்த 50களில் அந்தச் சித்தாந்தத்தினால் கவரப்பட்ட ஓர் இளைஞனின் வாழ்க்கையைச் சொல்லும் கதை.
மூன்றாம் பரிசு: “அரிக்கேன் விளக்கு” – எழுதியவர் ப.சந்திரகாந்தம்.(மலேசிய ரிங்கிட் 2,000.) நாடறிந்த நாவலாசிரியர், பத்திரிக்கையாளர். காலனித்துவ காலத்தில் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களின் மிகச் சுவையான கதை.
மற்ற 17 நாவல்களுக்கும் ஆறுதல் பரிசாக தலா 500 ரிங்கிட் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா தலைநகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான ஹோட்டல் இஸ்த்தானாவில் பிரமுகர்கள் முன்னால் நடை பெற்றது. முன்னாள் துணையமைச்சர் டத்தோ சி.சுப்பிரமணியம் பரிசுகளை எடுத்து வழங்கினார். எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும் அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகள் பிரிவின் தலைவர் முனைவர் செ. இராஜாமணியும் உரையாற்றினார்கள். தமிழக நடுவர்களில் ஒருவரான மாலன் சிறப்புரை ஆற்றினார். மற்றொரு நடுவரான வாசந்தி வெளிநாடு செல்வதனால் கலந்து கொள்ள முடியவில்லை என அறிவித்திருந்தார். மாலன் ஓர் எழுத்தாளர் சங்கமும் ஒரு தனியார் தொலைக்காட்சியும் இணைந்து தமிழ் நாவல் போட்டி நடத்துவது உலகத்திலேயே தனித்துவம் உடைய நிகழ்ச்சி என்றார். மேலும் அவர் பேச்சின் சாரம்:
“வெற்றி பெற்ற மலேசிய நாவல்கள் பெரும்பாலும் தோட்டப்புற வாழ்க்கையை மையமாக வைத்தே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. அது தவறில்லை. ஆனால் இன்றைய வாழ்க்கையையும் எழுத வேண்டும் என்பதும் முக்கியம். நகர்ப்புற வாழ்க்கை, பல இன மக்களோடு வாழும்போது ஏற்படும் கலாசாரப் பாதிப்பு, அண்மைய அரசியல், இளைஞர்களிடையே நிலவும் வன்முறைக் கலாசாரம், காதல் அணுகுமுறைகள், கணினியால் விளைந்துள்ள பலன்கள் என எவ்வளவோ விஷயங்கள் உண்டு. இவற்றைக் கதைகளில் கொண்டு வருவதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்ய முடியும்.”
- பத்து கவிதைகள்
- அன்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !
- தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு
- கிணத்தினுள் இறங்கிய கிராமம்
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)
- தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !
- மன மோகன சிங்கம்!
- இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
- பெயரிலி!
- நாசமத்துப் போ !
- ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்
- உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”
- கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்
- ஹெண்டர்சன் பட்டி மன்றம்
- பிறந்த நாள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!
- நூல் வெளியீட்டு விழா
- குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’
- பெயர் முக்கியம்!
- ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்
- “Aalumai Valarchi” book release function
- FILCA Film festival schedule
- பெயர்வு: புலமும்! புலனும்?
- Last Kilo byt – 13 : ஆடை..
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9
- கடல் மீன்
- அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
- காதலும் காமமும்
- நாய்கள்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
- சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- நம் பையில் சில ஓட்டைகள்
- எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !
- ஒப்பனை உறவுகள்
- ’புத்தகங்கள்’
- கவிதைகள்
- இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா
- தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி