தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

வினோத்


சமீபத்தில் கனாக் கண்டேன் படம் பார்த்தேன்.

வழக்கம் போல் கமர்சியல் படங்களுக்கான குத்தாட்டமும், ஜட்டி – பிரா நடனங்களுமாக காட்சிகள் இருந்தன.

இந்த இண்டெர்நெட் லோகத்தில் ஆபாசமாக காட்சிகள் வைத்தால் மக்கள் கூட்டம் அலைமோதும் என கதாசிரியரும், இயக்குனரும் நினைத்தார்கள் போல….

ஆனால், அவர்கள் நினைப்புக்கும் ஆப்பு அடிக்கும் விதமாக சென்னை உட்லன்ட்ஸ் காத்தாடியது.

சரி, அவர்களின் இந்த பாழாய்ப்போன நினைப்பைக் கூட சீ தூ என தூக்கியெறிந்து விடலாம்.

ஆனால், ஒரு ஆராய்ச்சி மாணவனின் கல்லூரி காட்சி இருக்கிறதே அது மாதிரி ஒரு மூன்றாந்தர கற்பனை இந்த லோகத்தில் XXX படத்தில் கூட இருக்காது.

கதாநாயகன் கடல் நீரை குடிநீராக மாற்ற ஆராய்ச்சி செய்கிறார். அவர் அண்ணா பல்கலை கழகத்தில் வேதியியல் துறையில் படிப்பவர்.

அண்ணா பல்கலை கழக போர்டைக் காண்பிக்கிறார்கள்.

உள்ளே வேதியியல் லேப்பில், இவரை உரசி ‘ரசவந்தி ‘ வேலைகளை இவரின் புராஜக்ட் கைடாக வரும் பெண்மணி கீழ்த்தரமான காம இச்சை வேலைகளை பண்ணுவாரம்.

இப்படி ஒரு சிந்தனையோட்டமுடன் கதை போகிறது.

இவர்கள் சினிமாகதையை ரூம் போட்டு தண்ணி குட்டிகளுடன் பண்ணுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எனக்கென்னவோ இது மாதிரி கதாசிரியர்கள் ‘ரெட் லைட் ‘ ஏரியாவில் லைட்டை அணைத்து விட்டுதான் கதை பண்ணுகிறார்கள் போல் தோன்றுகிறது.

இப்படி காட்சி மூலம் பண்ணுவது கூட ‘Voyeurism ‘ வகை சார்ந்த விபச்சாரம் தான். இவர்கள் புதுவகையான விபாச்சார முறைகள் கற்றவர்கள்.

அது கிடக்கட்டும்.

இது தாண்டி ஒரு விஷயத்திற்கு போராட வேண்டியது உள்ளது.

ஒரு கல்லூரியில் நடப்பதாக காட்சியமைத்து அதில் கேவலமாக அக் கல்லூரி பொறுப்பாளர்களை கற்பனையாக காட்டுவது தண்டனைக்கு உரிய குற்றமாக்கப்பட வேண்டும்.

இப்படித்தான் இஷ்டத்திற்கு ‘காதல் ‘ படத்தில் மதுரை ‘St. Joseph ‘ பள்ளியைக் காண்பித்தது தொடர்பான வழக்கில், அது வேண்டுமென்றே செய்ததில்லை என ‘சங்கர் ‘ கூறியதால் வழக்குத் தள்ளுபடியானது. என்ன சட்டமோ என்ன இழவோ…

ஆனால், மகாநடிகன் படத்தில் சினிமாத்துறை பற்றி சத்யராஜ் காண்பித்ததற்கு சினிமாக்காரர்களுக்கு பொங்கிக் கொண்டு வந்தது….

இப்படியொரு கற்பனையாக அமெரிக்கப் பல்கலைகழக்த்தின் பெயரை மூன்றாந்தர கற்பனைக்கு உபயோகித்து அமெரிக்காவில் ஒருவர் படம் எடுத்திருந்தால் அமெரிக்கச் சட்டம் மிகப்பெரிய அபராதம் விதித்திருக்கும்.

ஆனால் இந்தியாவில் பொறுப்பில்லாமல் எதுவும் செய்யலாம்.

அமெரிக்காவில் உள்ளது போல், திரைப்படத் தொடர்பான சட்டம் வர வேண்டும்.

இல்லையென்றால், திரை கதாசிரியர்களின் கேவலமான மூன்றாந்தர விபச்சார சிந்தனைகளுக்கு உலகம் முழுதும் பெயர் பெற்ற, ‘அண்ணப் பல்கலைக் கழகம் ‘ கனாக் கண்டேன் படத்தில் கேவலப்படுத்தப்பட்டது போல் நிலை வரும்….

வினோத்

பி.கு: அண்ணா பல்கலைக் கழகமோ இல்லை அதன் மாணவர்களோ இது கண்டு பொங்காதது புரியவில்லை.

vinod_29_2004@yahoo.com

Series Navigation

வினோத்

வினோத்