தமிழவன் கவிதை-3

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

தமிழவன்


இவர்களை எனக்குப்
பிடிக்கவில்லை.

எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள்.

ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி
ஊருக்கு வரும் போதெல்லாம்
செருப்பு உள்ளதா எனக் காலைக்
கவனிப்பவர்கள்.

கால எடைவெளியை மறக்க
நேசம் காட்டலாமா எனயோசிப்பவர்கள்.

உறைந்த சித்திரம்போல்
ஒற்றைக் கால் சுவரிலூன்றி
பல்குத்தியபடி ஓரக்கண்ணால் பார்ப்பவர்கள்

என் படிப்பைக் கண்டு
கீழ்க்கண்ணால் பார்த்து
பஸ்ஸில் இடம் கொடுப்பவர்கள்

இவர்களைத் தாண்டியும்
ஒருவனை என் கண்கள்தேடும்

என்னைத் தெரியாத அவன் கேட்கிறான்
நலமா என்று
எப்போதும்.
—-
carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்