தப்புக் கணக்கு

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சூபிமுகமது


எனது ஜனவரி4 2006 விடாது துரத்தும் ஜின் விவாதத்தில் கபாவழிபாடு பெண்குறிவழிபாடாகவும் இபுராகீம்நபி வழிபாடாகவும் கல்லெறிவழிபாடாகவும் பேணப்படுகின்ற நிலையில் வகாபிகளுக்கு தர்காவழிபாடு பற்றி விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை என கூறியிருந்தேன். இவைகுறித்து பதில் சொல்லாமல் நழுவிஓடியிருக்கும் வகாபி தனது சிறப்பு செய்திகள் ஐந்திற்கு பதில் கேட்டுள்ளார்.

அல்லாவிற்கு பிறகுதான் அவுலியா.எனவே முதலில் அகில உலக மக்களுக்கு வழிகாட்டும் அல்லாவின் திருக்குரானின் நிகழ்வுகளுக்கு வகாபியின் விஞ்ஞானபூர்வமான பதில் தேவை.

இது தெளிவுபடுத்தப்படாவிட்டால் உலகமுஸ்லிம்களின் ஈமானே கேள்விக்கு உள்ளாகிவிடும். இஸ்லாம் பகுத்தறிவுபூர்வமான மார்க்கமல்ல என்பது உறுதிபட்டுவிடும்.

1. வெட்டிப்போடப்பட்ட பறவையின் உடல் துண்டுகள் எப்படி திரும்பவும் ஒன்று சேர்ந்து உயிர் பெற்றது…

2.ஆண்துணயின்றி அன்னைமர்யத்தின் கர்ப்பம் எப்படி நிகழ்ந்தது

3.மனிதர்களை குரங்குகளாகவும்,பன்றிகளாகவும் ஆக்கிய அல்லாவின் மந்திரவாதம் எது…

4.அபுலஹபின் இரண்டு கரங்களை அழித்துவிடவும்,அவரது மனைவியை ஈச்சங்கயிறால் முறுக்கி கொலைக்கு வழிவகுத்ததுதான் அல்லாவின் கருணையா…

5.அப்ரஹாவின் யானைப்படையை அபாபீல் பறவைகள் கூட்டம் சிறுகற்கள் வீசி அழித்தது எப்படி

6. நூகுநபி வரலாற்றின்படி அல்லாவை வணங்காதவர்களை ஒழித்துக்கட்டுவதுதான் அல்லாவின் தெளகீதா..

7.கபாவின் ஹஸ்ருல் அஸ்வத் பதித்த பெண்குறி வடிவமைப்பை முத்தமிடும் வழிபாட்டிற்கும் தமிழக சுக்ராயி தெய்வ பெண்குறிவழிபாட்டிற்கும் எப்படி ஒப்புமை ஏற்பட்டது…

8.மீனின் வயிற்றில் யூனூஸ்நபி எப்படிவாழ்ந்தார்..

அல்லாவின் தப்புக்கணக்கு கதையாடல் 9

விஞ்ஞானத்திற்கு முரணான பல விசயங்கள் இருந்தபோதும் இரு கருத்தாக்கங்கள் குறித்து மட்டும் இப்போது கதைப்போம்.

அ)அத்தியாயம் 10 யூனூஸ் வசனம் 3

அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்…

ஆ)அத்தியாயம் 11 ஹீத் வசனம் 7

அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்..

இ)அத்தியாயம் 41 ஹாமீம் அஸ்ஸஜ்தா 9- 12

..பூமியை இரண்டுநாட்களில் படைத்த இறைவனை நிராகரீக்கிறீர்களா..பூமியை படைத்தப் பிறகு அதன்மேல்
மலைகளை அமைத்து பாக்கியங்களை அருளினான்.. உணவுப் பொருட்களை செய்து வைத்தான். நான்கு நாட்களில் இவை யாவும் நிறைவேறின.பிறகு அவன் இரண்டு நாட்களுக்குள் ஏழுவானங்களையும் அமைத்தான்…

1) அல்லா முதலிரண்டு வசனங்களில் வானங்களை முதலில் படைத்ததாகவும் மூன்றாவது வசனத்தில் பூமியை முதலில் படைத்ததாகவும் சொல்கிறான்…இந்த குளறுபடிக்கு என்ன காரணம்…

2)முதலிரண்டு வசனங்களில் வானங்கள் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாக சொன்ன அல்லா மூன்றாவது வசனத்தில் வானங்கள் பூமியை எட்டு நாட்களில் படைத்ததாக தப்புக் கணக்கு போட்டதேன்….

வகாபியின் விஞ்ஞான நாக்கு பதில் சொல்ல முயலட்டும்…

வகாபியவாதிகளுக்கு பதில் சொல்லமுடியாவிடில் குறைந்தபட்சம் இஸ்லாம் குறித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஹெச்.ஜி.ரசூலாவது பதில் சொல்லி இஸ்லாமிய அறிவுஜீவிகளின் மானத்தை காக்க முன்வருவாரா…


tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது