தனிமை வேண்டுகிறேன்

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

சோமசுந்தரம் பத்மனாபன்


தனிமையே!நீ
அமைதிப் பூ பூக்கும் அற்புத மரமோ-இல்லை
இன்பச்செடி வளர்க்கும் அதிசய உரமோ ?
பரவச மழை பொழியும் அபூர்வ வானம்,
நீ குளிர்ந்த சுகம் அளிக்கும் குளிர்ச்சி பானம்.
அமைதியைக் கொடுத்து இன்பத்தைக் வளர்த்து,
பரவசமூட்டி,குளிர்ந்த சுகத்தால் நீராட்டி,
நீ என்னை மகிழ்விப்பதால்தானோ-தனிமையே!
உன்னை என் மனம் நாடுகிறது.
ஆம்,தனிமையே நீ எனக்கு வேண்டும்.
நிம்மதியாய் நான் இருக்க,
இன்னல்களை நான் மறக்க,
துன்பங்களைத் துரத்திவிட்டு,
இன்புற்று நான் சிரிக்க -தனிமையே
நீ எனக்கு வேண்டும்.
கற்பனையில் நான் மிதந்து-உள்ளக்
கதவதனை தான் திறந்து,எந்தன்
எண்ணங்களை வெளிக் கொணர்ந்து
புதுக் கவிதை படைத்திட-தனிமையே
நீ எனக்கு வேண்டும்.
தோல்வி பல சந்தித்து,
சோர்வடையும் போதினிலே,
மனம் விட்டு நான் அழுது-எந்தன்
வேதனையை வெளிப்படுத்த- தனிமையே
நீ எனக்கு வேண்டும்.
பொல்லாத உலகை விட்டு,
பொறுப்பில்லா மனிதரை விட்டு,
விலகி இங்கு நானும் வாழ்ந்து,
விந்தை பல புரிந்திட-தனிமையே
நீ எனக்கு வேண்டும்.
எந்தன் தவறுகளை நான் உணர்ந்து,
உணர்ந்ததனைத் திருத்திக் கொண்டு
தரமான வாழ்வினை நான்,-என்றும்
வளமாக வாழ்ந்திட-தனிமையே
நீ எனக்கு வேண்டும்.
நீ ஊர்வசியும் இல்லையடி,
மேனகையும் இல்லையடி,
இருப்பினும் என் மனம்
உனை அணைக்க ஆசை கொள்ளுதடி.
[ somasundaram padmanabhan]
———————————————————————-
1994-95 வனவாணி[சென்னை] உயர்நிலைப்பள்ளி வெளியிட்ட பள்ளி ஆண்டுமலரில் வெளியான முதற்பரிசு பெற்ற கவிதை.
ngomathi@sify.com

Series Navigation

சோமசுந்தரம் பத்மனாபன்

சோமசுந்தரம் பத்மனாபன்