தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள்

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue


தண்டு செல்கள் என்பவை யாவை ?

தண்டு செல்கள் என்னும் stem cells இளம் செல்கள். இவை முட்டையும் விந்துவும் இணைந்து உருவாகும் முதல் செல் பிரிந்து உருவாகும் முதல் செல்கள். இவை பிரிந்து உடலின் 130 வகை வித்தியாசமான திசுக்களாக மாறுகின்றன.

அறிவியலாளர்கள். இந்த தண்டு செல்களை பரிசோதனைச்சாலையில் உருவாக்கி அவற்றை ஒரு தனி உறுப்பாக வளரும் படிக்கு ஆணையிட்டாஅல் அவை வளர்ந்து சிறுநீரகமாகவோ, இதயமாகவோ, ஏன் மூளையாகவோ கூட வளரலாம் என்று நம்புகிறார்கள்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை மனித உடலில் பொருத்தலாம் என்றும் கருதுகிறார்கள். மற்றவர்கள் கொடுக்கும் உடல் உறுப்புக்களை பொருத்துவதை விட, பரிசோதனைச்சாலையில் உருவாக்கிய உடல் உறுப்புகளை பொருத்துவது சிறந்தது.

கருச்சிதைவு மூலமும், பல குழந்தை உற்பத்தி முறைகள் மூலமும் வீணாகும் பல ஆரம்ப மனிததிசுக்களிடமிருந்து இந்த தண்டு செல்களை எடுத்து உபயோகிக்க முடியும்.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் தண்டு செல்களிலிருந்து இதயத்தை உருவாக்கினார்கள்.

ஒரு தண்டு செல்லை எடுத்து அதனை இதய செல்லாக மாற்றி அதனை இன்னும் பல செல்களாகப் பிரியும்படி அமைத்து இதயத்தை உருவாக்கினார்கள்.

இது போன்ற தண்டு செல்கள் ஆராய்ச்சியை அமெரிக்காவின் தீவிரவாத கிரிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பதால், அமெரிக்காவில் இது போன்ற ஆராய்ச்சி நடத்த அமெரிக்க அரசாங்கம் உதவாதது போல் இருப்பதால், பல அறிவியலறிஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இந்த ஆராய்ச்சியை தொடரும் வாய்ப்பு இருக்கிறது.

பல நாடுகளில் ஆரம்பத்திசு ஆராய்ச்சிக்கு எதிராக சட்டங்களோ, பிரதியெடுத்தல் முறைக்கு (cloning) ஆராய்ச்சிக்கு எதிராக சட்டங்களோ இல்லாததால், பலர் பிரிட்டன் இந்தியா போன்ற நாடுகளுக்குச் செல்லலாம்.

தண்டு செல்கள் எங்கிருந்து வருகின்றன ?

தண்டு செல்கள் ஆரம்ப மனிதத்திசுக்களிடமிருந்து பெறப்பட்டவை. இன்றைக்கு இவை கருச்சிதைவு போன்ற தேவையற்ற மனிதத்திசுக்களிடமிருந்து பெறப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை பிரித்து பரிசோதனைச்சாலைகளில் சேமித்து பிற்காலத்துக்கு உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு செல் கூட்டமும் ஒரு தனி மனித ஆரம்பத்திசுவிடமிருந்து (a single embryo) வந்தது. இப்படி ஒரு ஆரம்பத்திசுவிடமிருந்து பெறப்பட்ட செல்களை செல்வழி (cell line) என்று அழைக்கப்படுகிறது.

பிரதியெடுக்கும் (clone) முறையில் ஆரம்பத்திசுக்களை உருவாக்கி அவைகளிலிருந்து தண்டு செல்களை எடுப்பது இன்னும் நம்பத்தக்க முறை. ஒரு ஆரம்பத்திசு (embryo) பல்லாயிரக்கணக்கான தண்டு செல்களுக்கு ஊற்றாக உபயோகப்படுத்தலாம்.

மருத்துவ தேவைகளுக்காக பிரதியெடுத்தல் (Therapeutic Cloning) என்ற முறை பிரிட்டன் போன்ற பல நாடுகளில் சட்டப்பூர்வமானது. இந்த முறையில் பல ஆரம்பத்திசுக்களை உருவாக்கி அவைகளிடமிருந்து தண்டு செல்களைப் பெறலாம்.

அமெரிக்காவில் இன்னும் வராத ஒரு சட்டம் மூலம், எல்லா பிரதியெடுத்தலையும் தடை செய்யும் படிக்கு செய்யப்போகிறார்கள்.

ஜனாதிபதி புஷ் என்ன முடிவு செய்தார் ? அந்த முடிவுக்கு என்ன விளைவுகள் இருக்கும் ?

ஜனாதிபதி புஷ் அவர்கள் இறுக்கமான கட்டுக்கோப்புகளுக்குள் சட்ட திட்டங்களுக்குள் இந்த ஆரம்பத்திசு தண்டுசெல் ஆராய்ச்சிக்கு அரசாங்கப்பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே இருக்கும் 60 செல்வழிகளைக் கொண்டு மட்டுமே இந்த தண்டு செல் ஆராய்ச்சிக்கு மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்ய முடியும் என்றும் கூறியிருக்கிறார். இந்த 60 செல்வழிகள் உலகெங்கும் உள்ள பரிசோதனைச்சாலைகளில் சேமிக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்க சட்டங்கள், ஆரம்ப மனிதத்திசுக்கு பாதகம் விளைவிப்பதற்கு தடை செய்வதால், அமெரிக்க அரசாங்கப்பணம் புதிய செல் வழிகளை உருவாக்க உபயோகப்படுத்த முடியாது.

ஆயினும், பல ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே இந்த 60 செல்வழிகள் இருக்கின்றனவா என்பதை சந்தேகப்படுகிறார்கள். மேலும், இந்த செல்வழிகள் பல தனியார் நிறுவனங்களின் பரிசோதனைச்சாலைகளுக்குச் சொந்தமாக இருப்பதால், அரசாங்க அறிவியலாளர்கள் இந்த செல்வழிகளை உபயோகப்படுத்த முடியாது என்றும் கருதுகிறார்கள்.

What happens elsewhere ?

மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது ?

பல நாடுகளில் ஆரம்ப மனிததிசு பற்றி ஏதும் சட்டங்கள் இல்லாமல் இருந்தாலும், மருத்துவ தேவைகளுக்காக பிரதியெடுத்தல் (Therapeutic Cloning) என்ற முறை பிரிட்டன் போன்ற பல நாடுகளில் சட்டப்பூர்வமானது.

ஜப்பான் மனிதத்திசுக்களின் மூலம் தண்டு செல்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.

உயிரியல் ஒழுக்கம் பற்றிய அரசாங்கக்குழு இந்த முடிவை ஆதரிக்கும் என்றும் தெரிகிறது.

பிரதியெடுத்தல் போன்ற முறைகள் மூலம் தண்டுசெல்களை உருவாக்ககூடாது என்ற கடுமையான சட்டங்களும் இருக்கும் எனத்தெரிகிறது.

கரு கொள்ள உதவி செய்யும் மருத்துவமனைகளில் தேவையில்லை என்று உதறப்படும் மனிதத்திசுக்கள் மூலமே இந்த அராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சட்டங்கள் கூறும்.

Series Navigation

செய்தி

செய்தி