ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-
முன்னுரை

கவிஞன் என்பவன் லுாசுப்பயல். புகைப்படம் எடுக்கையில் எல்லாவனும் தன் நினைவாத் திரிவான்… பவுடர் சப் சப்னு ஓர் அப்பல். ஒரு டை இருந்தாத் தேவலையோ. தலைல முடிகிடி எதும் துாக்கிருச்சோ-ன்னு புதுசு புதுசாக் கவலைகள்.

படம் எடுக்க வந்தவனின் சட்டைக் கிழிசல் பார்த்து ச், என்கிறான். எலேய் சோலியப் பாருடா. நீ வாங்கித் தரப் போறியா ? பின்ன என்ன ?

மழைல அவனவன் வீட்டுக்குள்ள ஓடியாருவான். இவன் கனகாரியமா வெளிய இறங்கிப் போறான். உடம்பு சுணங்கிப் படுத்து பெத்தவளின் ராத்துாக்கம் கெடுக்க ஏற்பாடு.

சோத்துக்கு டண்டணக்கா. இன்னாலும் மனசுல ராஜா, மாறுவேஷங் கட்டி ஊருக்குள் உலா வருகிற பாவனைக்குக் குறைச்சல் கிடையாது.

சகதி எருமை அவன். பராக் பேர்வழி. சீட்டுக்கட்டு ராஜா.

நான் லுாஸ். பெரியோர்களே தாய்மார்களே. நான் நாடோடிப் பைத்தியம்.

>>>>
வெளியீடு
இருவாட்சி சென்னை 600 011

—-
அந்தரத்தில்
புதையுண்டது பறவை
கவிதை என்றனர்

வடைமாலை
வாயுகுமாரன்
குருக்களுக்கு
தினசரி வாயுசூரணம்

மறைந்து தாக்க
நானே போதுமே
அட ராமா

அனஸ்தெடிஸ்ட்
மயங்கினார்
நோயாளியின் அழகில்

அநாதைப்பிணம்
வேட்டி உருவிய நிர்வாணம்
மூடி மறைத்தன ஈக்கள்

‘நன்றி மீண்டும் வருக ‘
ஒண்ணுக்கு வந்தால் வருகிறேன்

>>>>
மேலும் சில கவிதைகள்
அடுத்த இதழில்
from the desk of storysankar@rediffmail.com

ஞானக்கோமாளி – 2
எஸ். ஷங்கரநாராயணன்
கவிதாப் பிரசங்கம்
வெளியீடு – இருவாட்சி சென்னை 600 011

—-
சில கவிதைகள் அறிமுகம்

சிவன் சிலை
நிஜப்பாம்பு
சீறிச் சினந்து
கொத்தியது

அத்துமீறல்
ஏரிக்குள் வீடுகள்
புகுந்தது வெள்ளம்

கற்றாரை
முட்டாளே காமுறுவர்
கற்றார் வயிறெரிவர்

புருஷனின் அழுக்குச் சுவடு
அழுத்தித் துடைக்கும்
அடிமைப் பெண்டாட்டி

ஆயிரம் மனைவி
ஐயாவை மதிக்கிறான்
மனைவிக்கு வைக்கிறான்
கற்புக்கு சோதனை

பிணம் காத்திருந்தது
அலங்கரிக்கிறார்கள்
ஊர்தியை


from storysankar@rediffmail.com
மேலும் சில அடுத்த இதழில்….

எஸ். ஷங்கரநாராயணன்
ஞானக்கோமாளி – 3

ராஜா வேசமாம்
ஆசையாப்போனால்
ஊருக்குள் ராஜா
மாறுவேசம் மனுசவேசம்

வியாபாரிக்கு
வள்ளுவர் சொன்னது
பற்றுக பற்றற்றான் பற்றினை

குளிக்க வந்த
கோவணாண்டி
கோவில்சாமி
ஆகினன்

சபைக்கு வந்தார்
பேண்ட் அணிந்து
போன கூட்டத்தில்
வேட்டி இழந்தவர்

கருப்புதாடி
திடாரென நரைத்தது
ஷேவிங் சோப்

எழுத்தாளர் கதைகளிலோ
எத்தனையோ பாத்திரம்
பேப்பர்காரன் தந்ததுவோ
ஒரேயொரு பாத்திரம்

குருட்டுப் பிச்சை
கூட வரும் நாய்
வாலை வாலை
ஆட்டியது

அணுமின்உலை
ஆலைச்சங்கு
மரண அறிவித்தல்

இயற்கை
இறங்கு என்றது
செயற்கை
இழுத்துச் சென்றது

>>>>
storysankar@rediffmail.com
புத்தகத்திலிருந்து இன்னும் சில கவிதைகள்
அடுத்த இதழில்…
ஞானக்கோமாளி /வெளியீடு
இருவாட்சி சென்னை 600 011

கவிதாப் பிரசங்கம்
ஞானக்கோமாளி – 4
எஸ். ஷங்கரநாராயணன்
—-

தேள்கடிக்கு
டாக்டரிடம் போனால்
டாக்டரின் தோளில்
பெரிய சைஸ் தேள்

ரயில் பாடகன்
விசில் அடித்துப்
பாராட்டியது ரயில்

உதைபந்தாட்டம்
வானொலி வர்ணனை
ரசிக்கிறான் குருடன்

அழும் மழலை
சிரிக்கும் தாய்
பிரசவ அறை

அமோக வியாபாரம்
குடை வியாபாரி
வீடு திரும்பினார்
நனைந்தபடி

டாக்டர் தொழிலில்
சூராதி சூரன்
என்றாலும்
வயித்தெரிச்சல் தீராதவன்

எள் என்னுமுன்
எண்ணெயாய் நிற்பவள்
சுற்றி வருகிறாள்
துளசிமாடம்

கொசுக்களின் சாபம்
சாம்பலானது
கொசுவத்திச் சுருள்

ஒற்றைக்காலன்
ஒண்ணுக்கடிக்கிறான்
முள்ளே கவனம்
குத்தி விடாதே

கிணற்றில் குதித்தவள்
குடத்து நீரால்
குளிப்பாட்டுகிறார்கள்

>>>>
storysankar@rediffmail.com
இருவாட்சி வெளியீடு
சென்னை 600 011
மேலும் சில கவிதைகள்
அடுத்த வாரம்….

கவிதைத்தொகுதி – ஞானக்கோமாளி – 5
எஸ்.ஷங்கரநாராயணன்
வெளியீடு – இருவாட்சி சென்னை 600 011

—-
குளிக்கிற பெண்ணாலே
அழுக்காச்சு
வேட்டி

துணி காயப்போட்டதில்
ஈரமாச்சு
உடல்

ஓட்டல் பில்
கேட்டது முதலாளியிடம்
நீயுமா புரூட்டஸ்

காப்பகம் வந்து
பால்பாவுடர் நினைந்துாட்டினாள்
சாலப் பரிந்து

பாட்டு வாத்தியார்
முன்னமர்ந்த
மாணவ மழலையை
ரசிக்கிறேன்

ஈன்றபொழுதில்
முகங் கடுத்தாள்
தன் மகனை
முட்டாள் எனக்கேட்ட
தாய்

மரத்தடி ஜோசியன்
ரேகை வைத்தான்
போலிஸ் ஸ்டேஷனில்

மாணவனை நிறுத்தி
காயம் படாமல்
கத்தி எறிகிறான்
வித்தைக்காரன்

வியர்வை சிந்த
எடுத்துச் செல்கிறான்
குளிர்பதனப்
பெட்டி

முதுகில் துப்பாக்கி
கையில் பூங்கொத்து
ராணுவவீரன் நடக்கிறான்
கல்லறை நோக்கி

சிலைகள்
அறியுமோ
நல்வாசனை

வந்துவிட்டன
வெளிநாட்டுப் பறவைகள்
அவள் கணவன் வரவில்லை

>>>
storysankar@rediffmail.com
/தொடராது/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்