ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் பரிசு

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

பொ.கருணாகரமூர்த்தி


சென்ற ஆண்டில் ஞானபீடப்பரிசு பற்றிய கதையாடல் வந்தபோது ஒரு இணையப்பத்திரிகையின் ஆசிரியர்

ஞானபீடப்பரிசுக்கு யார் மிகப் பொருத்தமான தமிழ் எழுத்தாளராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள் ?

என தமிழ் எழுத்தாளர்கள் (தாய்நில/ கடல்கடந்த) அனைவரிடமும் ஒரு கருத்துகணிப்பு நடத்தினார்.

ஜெயகாந்தனின் அரசியலுடன் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் அவருடை எழுத்தாளுமை, எழுத்துப்பரப்பு, வயசு , அனுபவம் என்பவற்றை வைத்து நான் ஜெயகாந்தனை முதலாவதாகவும்,

சுந்தரராமசாமியை இரண்டாவதாகவும், இந்திரா பார்த்தசாரதியை மூன்றாவதாகவும் பரிந்துரைத்தேன்.

இப்போது ஜெயகாந்தனுக்கு ஞானபீடப்பரிசு கிடைத்துள்ளமையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஞானபீடப்பரிசு தகுதியற்ற ஒருவருக்குப் போய்விட்டது ‘ என்ற கூச்சல்கள் அவ்வளவு எழாதென்றே நம்பலாம்.

நீலபத்மனாபன், கி.ராஜநாராயணன், கலைஞர், அசோகமித்திரன், சுஜாதா, ஜெயமோகன் ஆதியோரும் கருத்துக்கணிப்பில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் என்பது மேற்படி ஆசிரியருடனான தனிப்பட்ட உரையாடலில்

கிடைத்த கொசுறுச்செய்தியாகும்.

பொ.கருணாகரமூர்த்தி., பேர்லின் 20.03.2005


karunaharamoorthy@yahoo.ie

Series Navigation

பொ கருணாகர மூர்த்தி

பொ கருணாகர மூர்த்தி