ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

சித்ரா சிவகுமார்



மன்னிக்கவும். தயவு செய்து கவனிக்கவும். இப்படிப்பட்ட பொருள் கொண்ட சொல் தான் சுமிமாசென் என்பது.

ஜப்பானியர்கள்; அரசரால் ஆளப்பட்டு வந்தால் நீண்ட நெடுங்காலமாகவே பணிவுடன் நடக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டு வந்துள்ளனர். அதனால் இன்றளவிலும் அவர்கள் பணிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவற்றை அவர்கள் செய்கைகள் மூலமாகவும்இ அவர்கள் பேசும் வார்த்தைகள் மூலமாகவும் நன்கு அறிந்து கொள்ளலாம். இரு ஜப்பானியர்கள் சந்தித்துக் கொள்ளும் போது இப்படி உடலை வளைத்து வணக்கம் தெரிவித்துக் கொள்வர்.

இரு ஜப்பானியர்கள் சந்தித்துக் கொள்ளும் போது இப்படி உடலை வளைத்து வணக்கம் தெரிவித்துக் கொள்வர்.

பணிவான வணக்கம்

இன்றைய சந்ததியினர் மேற்கத்திய கலாச்சார மோகத்தினால் சற்றே மாறிக் கொண்டு தான் வருகின்றனர்.

எந்தவொரு நாட்டிற்கும் அதன் அடிப்படை கலாச்சாலத்தின் ஊற்று மொழி மூலமாகவே அமைகிறது என்றே சொல்லலாம். அதில் சற்றும் சோடை போகாத மொழி ஜப்பானிய மொழி.

பல்வேறு மேற்கத்திய மொழிகளில் இல்லாத தமிழ் மொழி போன்று பணிவுடைமையும் முறைமையும் வெளிக்காட்டும் தனிப்பட்ட இலக்கண முறைகளையும் கொண்ட மொழி ஜப்பானிய மொழி.

ஜப்பானில் மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்படுவதில்லை. எதாவதொரு வகையில் ஒருவர் மற்றவரை விட உயர்வான ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகின்றனர். அது அவர்களது வயது அனுபவம் வேலை மற்றும் சூழல் காரணமாக அமைகிறது. கீழ் தட்டில் வைத்து எண்ணப்படுபவர்கள் எப்போதும் பணிவான வார்த்தைகளையே பேச வேண்டும். யாரிடமாவது உதவி கோரும் போதும்இ பணிவாகவே பேச வேண்டும். மேல் தட்டில் வைத்து எண்ணப்படுபவர்கள் சாதாரண மொழியில் பேசினாலே போதுமானது. அன்னியர்களுடன் அளவளாவும் போதும் பணிவு முன் நிற்கும்.

ஜப்பானியக் குழந்தைகள் பத்து வயது வரையிலும்இ சாதாரண மொழியில்இ மரியாதையற்ற வார்த்தைகளையும் பேசினாலும்இ சிறிது அறிவு முதிர்ச்சி ஏற்படும் போதுஇ பன்னிரண்டு வயது முதல்இ பணிவுடன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் தமிழர்கள் மத்தியிலும் இதே மொழிக் கலாச்சாரமே பின்பற்றப் பட்டு வருகிறது.

ஐந்தாம் நூற்றாண்டு வரையிலும்இ ஜப்பானிய மொழிக்கு எழுத்துருவம் கிடையாது. இதற்குப் பிறகு கொரியத் துறவிகளின் வரவால்இ சீனக் கலாச்சாரமும்இ சீன எழுத்துக்களும் ஜப்பானில் அறிமுகப்படுத்தப் பட்டன.

முதலில் முழுக்க முழுக்க சீன எழுத்துக்களே அதன் பொருளுக்காக பயன்படுத்தப் பட்டு வந்தன. காலப் போக்கில் பல தரப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுஇ இப்போது எழுத்துக்கள் மூன்று வகைகளாக பிரிக்கப் படுகின்றன.

சீன எழுத்துக்கள் ‘காஞ்சி” என்று அழைக்கப்பட்டது. இவை சீன மொழியிலிருந்து வந்த சொற்களையும்இ ஒத்த பொருளைக் கொண்ட ஜப்பானிய மொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றன. காஞ்சி எழுத்துக்கள் எழுதுவதே தனிக் கலை. சில எழுத்துக்களை எழுத 23 கோடுகள் வரை போட வேண்டும்.

சில காஞ்சி எழுத்துக்கள்

காஞ்சி எழுத்துக்களைக் கொண்டு எழுத முடியாதஇ கூற முடியாத ஜப்பானிய மொழிச் சொற்களை ‘ஹிராகானா” எழுத்துக்களால் எழுதுவர். இவை நம் தமிழ் எழுத்துக்களைப் போலவே ஒலியை அடிப்படையாகக் கொண்டது. க கி கு கே கோ என்ற ஒத்த ஒலிகளைக் கொண்டவை. அதனால் புழக்கத்தில் இல்லாத காஞ்சி எழுத்துக்களைஇ அதன் மேலே எழுதுவர். இவ்வெழுத்துக்களை ‘‡புரிகானா” என்று அழைப்பர். இவ்வெழுத்துக்கள் நான்கு கோடுகளுக்கு மேல் போகாது.


chitra@netvigator.com

Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்