மைக்கல் பர்லே
(அந்தோனி பீவர் எழுதிய harrowing history, Berlin: The Downfall, 1945 புத்தக விமர்சனம்)
ஆறு வருடங்களுக்கு முன்னர், ஸ்டாலின்கிராடு பற்றி அந்தோனி பீவர் எழுதும்போது தன்னுடைய அடுத்த புத்தகத்துக்கான கருவை சந்தர்ப்பவாக்கில் யோசிக்க நேர்ந்தது. 1943 பெப்ரவரியில், ஸ்டாலின்கிராடு அழிவுகளின் மீது ஒரு செம்படை ஆபீஸர் தன்னுடைய ஜெர்மானியக் கைதிகளிடன் ‘இப்படித்தான் பெர்லினும் காட்சியளிக்கும். ‘ என்று கூறினார். ருஷ்யர்கள் தங்கள் ஆபீஸர்களையே ஒட்டுக்கேட்டு பதிவு செய்த நாடாக்களிலிருந்தும், கைதுசெய்யப்பட்ட ஜெர்மானிய கமாண்டர்களின் இடையே பேசப்பட்ட விஷயங்களைப் பதிவு செய்ததிலிருந்தும் ஒரே கதைதான் தெரியவந்தது. பெர்லின் பழிக்குப் பழி வாங்கப்படும். இறுதியில் பெர்லின் பழிக்குப்பழி வாங்கப்பட்டது.
ஒப்பிட்டுப்பார்க்கையில், பீவர் அவர்களது சமீபத்திய புத்தகம் அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸைனின் ‘ப்ரஷ்யன் நைட்ஸ் ‘ (ஜெர்மன் இரவுகள்) என்ற கதைசொல்லும் நீண்ட கவிதை போலத்தான். ஆனால், அதில் ஏராளமான அடிக்குறிப்புகளுடனும், மறுக்க முடியாத ஆதாரங்களுடன் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய சாவு இயந்திரம், பல பருவகாலங்களின் வழியே நகர்ந்து தான் சென்ற வழியெங்கும் அழிவை விட்டுச் சென்ற உணர்வை அளிக்கிறது. முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து பின்னாள் வரலாற்றாசிரியரான பீவர் அவர்கள், சிக்கலான ராணுவ நகர்வுகளைத் தெளிவாக விளக்கவும், அந்த நகர்வுகளுக்குக் காரணமான கமாண்டர்களின் காரணங்களைப் பற்றிய உள்ளார்ந்த அறிவுடனும் தெளிவாகவும் எழுதிச் செல்கிறார்.
ஆனால், அதே நேரத்தில், ஒரு நவீன போரின் உண்மையான பலிகடாக்களைப்பற்றிய அனுதாப உணர்வுடனும் இவர் எழுதுகிறார். பெரிய ஆளுக்கான ஹெல்மெட்டின் உள்ளே இருக்கும் சிறுவர்களின் கவலைதோய்ந்த முகங்கள். பலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கிடையேயும் சமாளித்து, தன் குழந்தைக்கு பால் கொடுத்த பெண்கள். தன்னுடைய குடும்ப நிலத்தைவிட்டுச் செல்லவோ, தன் இறந்துவிட்ட வாழ்க்கைத்துணையின் கல்லறையை விட்டுச்செல்லவோ மனமில்லாததால், ஒரு நரகத்துக்குள்ளே மாட்டிக்கொண்ட முதியவர்கள். விளைவு: நவீன வரலாற்று எழுத்துக்களில் ஒரு செவ்வியல் இலக்கியம். அதே நேரத்தில் ஒரு சர்வாதிகாரம் இன்னொரு சர்வாதிகாரத்தை ‘விடுதலை ‘ என்ற பெயரில் வெற்றிகொண்டதை நாவில் கசப்புச்சுவையாக விட்டுச்செல்லவும் தயங்காத எழுத்து.
ஹிட்லர் 1941இல் ரஷ்யாவை ஆக்கிரமித்ததை, கலாச்சாரம் சிறந்த ஜெர்மானியர்களுக்கும் ,காட்டுமிராண்டிக் கூட்டத்துக்கும் இடையேயான இறுதிப்போராக பிரசாரப் படுத்தப்பட்ட பின்னர், ரஷ்ய செம்படை திரும்பி தாக்கும்போது, கலாச்சாரம் சிறந்த ஜெர்மானியர்கள் கவலைப்பட்டதற்கு காரணம் இருந்தது – அதுவும், இந்த கலாச்சாரம் சிறந்த ஜெர்மானியர்கள், தாங்கள் சென்ற இடங்களில் பொதுமக்களுக்கும், போர்க்கைதிகளுக்கும் செய்த கொடூரங்கள் அவர்களுக்கே ஞாபகம் இருந்ததால். பல லட்சக்கணக்கான ஜெர்மானியர்கள் செம்படை வரும் வழியில் இருக்கும் பிரதேசங்களிலிருந்தும், தாங்கள் ஆக்கிரமித்த கிழக்குப் பிராந்தியங்களிலிருந்தும் ஓடினார்கள். ஓடாமல் தங்கியிருந்த ஜெர்மானியர்கள், ஆயுதம் தாங்கிய, அழுக்கு பழுப்பு போருடைகள் உடுத்திய, காலணிகள் உடைந்து விழுந்துகொண்டு, ‘யுரி ‘ யுரி ‘ என்று கத்திக்கொண்டு, கையில் அகப்பட்டதையெல்லாம் திருடி தன் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்ற போர்வீரர்களைப் பார்த்தார்கள். ஏன், மின்சார விளக்குகள் கூட திருடப்பட்டன. ஒருவேளை ரஷ்ய கிராமங்களுக்கு மின்சாரம் வரும்போது உபயோகப்படும் என்று.
இந்த மனிதர்கள் சாராய நாற்றத்தோடு, புகையிலை நாற்றத்தோடு, இருந்தாலும், இவர்களது நாற்றம் ஒரு பெரும் குற்றமல்ல. போர்வீரராகும் வயதற்ற ஜெர்மானியச் சிறுவர்கள் உயரமாக இருந்தால், அவர்கள் ‘தூ, எஸ்எஸ் ? ‘ (நீ எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவனா ?) என்ற மரணக்கேள்வியைத் தாண்டியாக வேண்டும். 14 வயதிலிருந்து 80 வயது வரை இருக்கும் பெண்கள் ஜெர்மானியர்களாக இருந்தாலும், ருஷ்யர்களாக இருந்தாலும், யுக்ரேனியராக இருந்தாலும், அல்லது ‘விடுதலை செய்யப்பட்ட உழைப்பாளர்களாக ‘ இருந்தாலும், செம்படையின் ராணுவ பாலியல் பலாத்காரக்காரர்களிடம் சுழற்சி முறையில் பலாத்காரத்துக்கு உட்பட்டாக வேண்டும். நாஜிகளிடமிருந்து தப்பிய யூதர்கள் இவர்களது கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தபோதெல்லாம், ‘கடந்தகாலம் கடந்த காலமே-விதவைகள் விதவைகளே ‘ என்று பதில் சொன்னாரகள். பீவர் சொல்வது போல, ‘பரவலாக, சோவியத் யூனியனிலிருந்தே தூக்கிவரப்பட்டு பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது, செம்படையின் இந்த பாலியல் பலாத்கார குற்றங்களை, சோவியத் யூனியனில் செய்த ஜெர்மன் கொடுமைகளுக்கு, பழிக்குப்பழி வாங்க செய்யப்பட்டது என்று சால்ஜாப்பு சொல்ல முடியாமல் ஆக்குகிறது ‘
இந்த துருப்புகளுக்குப் பின்னே, NKVD ராணுவப் போலீஸ் அமைப்புகள் வந்திருக்கின்றன. இவற்றின் வேலை, ‘விடுதலை செய்யப்பட்ட ‘ போர்க்கைதிகளை விசாரணை செய்வது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ‘தாய்நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் ‘ என முத்திரை குத்தப்பட்டு குலாக்-கட்டாய உழைப்பு பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இல்லையெனில், ராணுவத் திட்டங்களை வடிவமைத்த தலைவர்கள் மீது இவர்களை சிறைப்படும் அளவுக்கு மோசமான திட்டங்களை தீட்டியதாக குற்றம் வரும் என்ற காரணத்தால். தங்கள் ‘காம்ரேட் போராளிகளுக்கு ‘ எழுதிய கடிதங்களில் ரஷ்ய சிறைக்கைதிகள் புலம்புகிறார்கள். ‘ஏன் நீங்கள் ஜெர்மானிய சிறையிலிருந்து வெளிவந்த ருஷ்ய மக்களைக் கொல்கிறீர்கள் ? நாங்கள் சந்தர்ப்பவசத்தால் சிறைப் பிடிக்கப்பட்டோம். சிறை முகாமில் பசியால் இறக்காதிருக்கும்பொருட்டு, நாங்கள் எங்களை கைது செய்தவர்களுக்க்கு எடுபிடி வேலை செய்தோம். இப்போது இந்த மக்கள் ருஷ்யப் பகுதிக்கு வந்ததும், தங்களது ராணுவத்தின் கீழ் வந்ததும், அவர்களை நீங்கள் சுடுகிறீர்கள். எதற்காக என்று நாங்கள் கேட்கிறோம். 1941இலும் 1942இலும் சோவியத் ராணுவத்தலைவர்கள் இவர்களை கை கழுவி விட்டதற்காகவா ? ‘
அந்தந்த பிராந்திய கம்யூனிஸ ஆதரவாளர்கள் செம்படையின் கேள்விக்கணைக்குள் மிகுந்த யோசனைக்குப் பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். NKVD போலந்து ‘பாஸிஸ்டுகளை ‘ கைது செய்யவும், அவர்களது ஆயுதங்களையும் பறிமுதல் செய்யவும் தீவிரம் காட்டியது. இந்த ‘பாஸிஸ்டுகளின் ‘ பாஸிஸ எதிர்ப்பு போர் சோவியத் யூனியன் ஜெர்மானிய பாஸிஸத்தை எதிர்த்ததை விட இரண்டு வருடம் அதிகமாக இருந்தாலும். ஜெர்மானிய ‘காம்ரேட்கள் ‘ சந்தோஷமாக சோவியத் யூனியனின் போர்வீரர்களை வரவேற்றதும் அவர்கள் உடனே கைது செய்யப்பட்டு, ‘ஏன் நீங்கள் பாஸிஸத்தை எதிர்த்துப் போராடும் பார்டிஸன் குழுவில் இல்லை ? ‘ என்று கேட்கப்பட்டார்கள். நாஸி ஜெர்மனியில் பார்டிஸன் குழுவே இல்லை என்பது தகுந்த காரணம் என்று கருதப்படவில்லை. இவை எல்லாமும், சோவியத் யூனியன் வைத்திருந்த கோப்புகளிலிருந்து பீவர் அவர்கள் கூர்மையாகப் படித்து, அவற்றை மேல் ஆதாரம் காட்டுகிறார்.
ஸ்டாலின், பெர்லினின் மீது இறுதி தாக்குதலை தொடுக்க திட்டமிடும்போது, நாஸி தலைநகரத்தின் மீதான தாக்குதலை வேண்டுமென்றே அதன் ராணுவ முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு, மேற்கத்திய தோழமை நாடுகளை தெற்கு ஜெர்மனிக்கு அனுப்பினார். பவாரியாவின் பிராந்தியங்களில் மீண்டும் உருவாகிக்கொண்டிருந்த பாஸிஸ போர்வீரர்களின் மிச்சம் மீதாரிகள் இதற்கான சிறந்த தூண்டில்புழுவாக ஆனார்கள். செங்கொடி ரெச்சிஸ்டாக் கட்டிடத்தின் மீது பறப்பதன் ராணுவப் பெருமைக்காகவும், சோவியத் ராணுவத்தை முடிந்த அளவு ஜெர்மனிக்குள் திணிப்பதற்காகவும் இது திட்டமிடப்பட்டது. அதைவிட முக்கியமாக, பீவர் வாதிப்பது போல, ஜெர்மானிய அணுகுண்டின் கச்சாப் பொருட்களை அடைவதற்கும், பெர்லின் சுற்றுப்புறக்குடியிருப்புகளில் பதுக்கி வைக்கப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றுவதற்கும்.
ஒரு கமாண்டரை இன்னொரு கமாண்டருக்கு எதிராக நகர்த்திக்கொண்டு, பெர்லினின் மீது இறுதித்தாக்குதலுக்காக ஏராளமான போர்வீரர்களைக் குவித்தார். இதற்காக 2.5 மில்லியன் துருப்புகள், 7500 விமானங்கள், 6250 டாங்கிகள், 41600 பீரங்கிகள் அனைத்தையும் கொண்டு நகரும்போது, பெர்லினின் அபாய அறிவிப்புகள் தானாக அலறவும், சுவர்களில் மாட்டப்பட்டிருந்த படங்கள் தானாகக் கீழே விழுவதற்கும் காரணமாயிற்று. ஜெர்மானியர்கள் தோள்மீது வைக்கப்பட்ட கிரெனேட் செலுத்திகள் கொண்டும், பல ஆயுதங்கள் கொண்டும் வீரமாக எதிர்த்தாலும், இந்த வான, இயந்திர சக்திகளுக்கு முன்னால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.
தலைநகரில் இந்த ரஸ்யப் படை குவிந்தபோது எதிர்த்தவர்கள் பெரும்பாலும், சிறுவர்கள், வெளிநாட்டு ஃபாசிஸ்டுகள், கிழவர்கள் தான்.ஹிட்லரின் பாதுகாப்புகள் விழுந்தன. ஹிட்லரின் பரிவாரங்களில் மறைந்து கிடந்த சச்சரவுகள் முன்னுக்கு வந்தன. கோரிங், ஹிம்லர் கண்டனம் செய்யப் பட்டார்கள். ஹிம்லர் அமைதிக்காக பேசுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஒரு காரணம். உணவும், பானங்களும் ஹிட்லரின் பதுங்கு குழியில் நிரம்ப இருப்பினும், வெளியிலிருந்து செய்தி வர வழி இல்லை. அவன் தொலைபேசி வழியே வெளியுலகைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அப்படி தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேரங்களில் பதில் ருஷ்யன் மொழியில் வந்தது.
முன்னணிப் படைகள் சுருங்கச் சுருங்க, வெளிநாட்டு எஸ் எஸ் படைகள் ஃபிரான்ஸ், லாத்வியா, ஸ்காண்டினேவியா விலிருந்து பெறப்பட்டன. அவை போல்ஷ்விக் படைகளை எதிர் கொள்ள முன்வந்தன. வீடு அருகிலிருந்த ஜெர்மன்கள் போலல்லாமல் இவர்களுக்குப் போக்கிடம் இல்லை. ஹிட்லர் தன் பதுங்கு குழியில், விதியே என்று ஒதுங்கிய போது, அவனுக்கு மேல் தளத்தில், யுஜின், ஹென்றி, ரோகர் போன்ற பெயர் கொண்ட அலுவலர்கள் ஹிட்லரைப் பாதுகாக்கும் முயற்சியில் இறந்து கொண்டிருந்தனர். இந்த முடிவு பல முறை சொல்லப் பட்ட்து தான். ஏப்ரல் 30-ல் அடால்ஃ ஹிட்லரும், ஈவா வும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, வெளியில் உடல் தீ மூட்டப் பட்டது. பதுங்கு குழியில் களியாட்டம் ஆடிக் கொண்டிருந்த ஓர் இளைஞன் ஓடிப் போய் மேலே சொன்னான் . ‘தலைவர் எரிகிறார். பார்க்கிறயா ? ‘ ‘ஒரு எரி நட்சத்திரம் அணைந்து விட்டது ‘ என்றான் அந்த அலுவலன்.
வெற்றி பெற்றவர்கள் ? மொத்தம் 78,291 ருஷ்யன் துருப்புகள் கொல்லப் பட்டன. கிட்டத்தட்ட 250,000 பேர் காயமடைந்தார்கள்.கால் நொண்டியான, மரக் கால் பொருத்தியவர்கள், வெளியேற்றப் பட்டார்கள் — காரணம் தெருவில் கும்பலாய் இருந்தார்களாம். சோவியத் நாட்டைச்சேர்ந்த யுத்தக் கைதிகள் 15 லட்சம் பேர் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டார்கள். சோவியத் நாட்டில் யூதர்கள் கொல்லப்பட்டது பற்றிய ‘கறுப்பு ஆவணம் ‘ மக்களைச் சென்றடையாமல் நீக்கப் பட்டது. சோவியத் கமாண்டர் சுகோவ் அவர்களது நெருங்கிய அலுவலர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப் பட்டனர். ஸ்டாலினுக்கு எதிராக இல்லாத சதி ஒன்று காரணம் காட்டப் பட்டது. சுகோவ் இருபது வருடம் நாடு கடத்தப் பட்டார். பெர்லினைத் தோண்டும் போதெல்லாம், இன்று வரை வருடத்திற்கு 1000 சவங்கள் கண்டெடுக்கப் படுகின்றன.
மைக்கேல் பர்லே எழுதிய ‘மூன்றாவது ரீச்: ஒரு புதிய வரலாறு ‘ இந்தப் புத்தகம் 2001-க்கான ‘புனைகதையற்ற புத்தகங்களுக்கான சாமுவேல் ஜான்சன் பரிசைப் பெற்றிருக்கிறது.
Michael Burleigh ‘s The Third Reich: A New History (Pan Macmillan) won the 2001 Samuel Johnson Prize for Non-Fiction.
- ஒரே ஒருமுறை
- இசையோடியைந்த தமிழ்க்கல்வி
- தமிழில் சிறுபான்மை இலக்கியம்
- சோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.
- துக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா ? – 3 -புஷ்கின் எழுதிய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ )
- விர்ஜின் மேரி
- தேங்காய் பப்பாளி
- பாலும் தேனும்
- பழத்தயிர் (ப்ரூட் லஸ்ஸி)
- கலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சிகள்
- அறிவியல் மேதைகள் -மேடம் மேரி கியூரி (Madamme Marie Curie)
- செந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்
- நிதர்சனம்
- இந்த வார வெண்பா நான்கு
- வன மோகினி
- விழுவதால் விருதா ?
- புதைகுழி
- சின்ன கவிதைகள் – 3
- ஏடுகள் சொல்வதுண்டோ ?
- இசையோடியைந்த தமிழ்க்கல்வி
- சோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.
- ‘மயங்குகிறாள் ஒரு மாது.. ‘ இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் மறைவுக்கு அஞ்சலி.
- தமிழர் பெயரெழுத்தும் தலையெழுத்தும்
- எண்ணமும் அன்பும்
- தமிழில் சிறுபான்மை இலக்கியம்
- புத்தர் ?
- லு பென்னின் தோல்வியும், பிம் போர்டுயின் கொலையும்
- விபத்து