கோகுல கிருஷ்ணன்.
****
என் தலையெங்கும்
அணிவிக்கப்பட்டிருக்கின்றன
கண்ணாடிச் சில்லுகளாலான மகுடங்கள்.
‘சுவாில் எழுதாதீர் ‘
கீழேயே சிாித்துக்கொண்டிருக்கிறான்
எவனோ ஒரு
‘தங்கத் தமிழகத்தின்
சிங்கத் தலைவன் ‘.
அவன் முகத்தில்
ஒட்டப்படுகின்றன
‘முரசு கொட்டும் மூன்றாவது வார ‘
போஸ்டர்கள்.
அவை கிழித்து,
என் நிர்வாணத்தில்
பசியாறுகின்றன
சுதந்திர மாடுகள்.
மனிதர்கள் மட்டுமன்றி,
நாய்கள் சிலவும்
நனைத்துச் செல்கின்றன என்னை.
என் வேர்களில்
தன் காலூன்றி
கண்ணெதிாில் வளர்ந்த மரம்
சினேகமாய்ச் சிாிக்கிறது
தலைமேல் பூச்சொாிந்து.
- சுவர்