சுஜாதா என்னும் Phenomenon…

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

மகேஷ்.


ஸ்வாரஸ்யமான நடை மட்டுமல்ல.. சுஜாதாவின் சாதனை. சாமான்ய வாசகர்களிடம்
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களை கொண்டு சேர்த்ததே
அவரின் மகத்தான சாதனை.

என் போன்ற வாசர்கள் கு.பா.ரா, புதுமைப்பித்தன்,தி.ஜா, ஆதவன், வண்ணதாசன்.. என
பல்வேறு சாளரங்களை தரிசிக்க வைத்த காரணகர்த்தா..

எண்பதுக்குப் பின் எழுத வந்தவர்களின் நடையில் சுஜாதாவின் சாயல் தவிர்க்க
இயலாது..

கவிதை கலந்த நடை அவருடையது.. ஒரு முறை சாவி பத்திரிகையில் கவிதைப்போட்டி
அறிவித்த போது வைரமுத்து நடுவர்.. அப்போது அவர் சொன்னது.. “வந்திருந்த கவிதைகளைப்
படித்த போதுதான் தெரிந்தது..சுஜாதா ஒரு மிகப்பெரிய கவிஞர் என்பது..” என்றார்..

எண்பதுகளில் அவர் தமிழ் நடை எல்லோரையும் பாதித்தது..

தமிழில் எழுதுவதும் படிப்பதும் குறைந்து வரும் இக்காலத்தில் சுஜாதாவின் மறைவு
அகாலமானதுதான்.

வருத்தங்களுடன்

மகேஷ்.
சென்னை.

Series Navigation

மகேஷ்

மகேஷ்