சீனாவை நம்பி இருக்கும் பர்மா

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue


1988ஆம் ஆண்டு ராணுவ தளபதிகள் பர்மாவை ராணுவ ஆட்சிக்குள் கொண்டுவந்ததிலிருந்து பர்மாவுக்கு பெரிய ஆதரவாளராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருப்பது சீனா மட்டுமே. அப்போதிலிருந்து ரங்கூனும் பெய்ஜிங்கும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன.

சென்ற பத்தாண்டுகளில் பர்மாவும் சீனாவும் உளவு வேளைகளிலும் நெருங்கி வந்திருக்கின்றன. பர்மாவின் அனைத்து ராணுவத் தளவாடங்களும் சீனாவிலிருந்தே வருகின்றன. டாங்கிகள், பெட்ரோல் படகுகள், போர் விமானங்கள் அனைத்தும் சீனாவிடமிருந்தே பர்மா வாங்குகிறது. ராணுவத்துக்கு பயிற்சியும் போர்விமானம் ஓட்டும் பயிற்சியும்கூட சீனாவே அளிக்கிறது.

பர்மா ராணுவத்துக்குள்ளேயே பர்மா மிகவும் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு கவலை இருக்கிறது.

சமீபத்தில் பர்மா தன் ராணுவத் தேவைகளுக்கும் ராணுவத்தளவாடங்களுக்கும் பல இடங்களிலிருந்து பெற முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பர்மாவும் இந்தியாவும் ராணுவ ரீதியில் நெருங்கி வந்திருக்கின்றன. பர்மா சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களைப் பெற்றிருக்கிறது.

‘சமீபத்தில் பர்மா மிக் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து பெற்றதை சீனா விரும்பவில்லை. அவர்கள் தங்களது கோபத்தை பர்மாவிடம் தெரிவித்திருக்கிறார்கள் ‘ என்று சிலர் கூறுகிறார்கள்.

‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவை உளவு பார்க்க சீனாவை பர்மா அனுமதித்திருக்கிறது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை ‘ என்று இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் பர்மாவின் இடமான மெர்குயி என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகம் கட்ட பர்மாவுக்கு சீனா உதவி அளித்தது. ஆனால் இந்த துறைமுகம் கட்டுவதில் அதிக பொருளாதார காரணங்களே இருக்கின்றன என்றும் ராணுவ காரியத்துக்காக மட்டுமே இது கட்டப்பட்டது என்று கூற முடியாது என்றும் பலர் கூறுகிறார்கள்.

ஒரு பத்தாண்டுக்கு முன்பு சீன அதிகாரிகள் தென் சீன பிரதேசங்களை பர்மாவை உபயோகித்துக்கொள்ளும்படி அறிவுரை கூறினார்கள்.

சீனாவின் தென்பிரதேசங்களில் வறுமை கிழக்குப் பிரதேசங்களை விட அதிகமாக இருக்கிறது என்பதும் ஒரு காரணம்.

தென் சீனாவுக்கும் பர்மாவுக்கும் இடையேயான வர்த்தகம் கொழித்ததால், சீனாவே பர்மாவின் முதன்மையான வர்த்தக தோழராக இருக்கிறது. சென்ற வருடம் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த

வர்த்தகம் இருந்தது.

சில ஆராய்ச்சியாளர்கள் இந்த வர்த்தகம் உண்மையில் இரண்டுமடங்காகப் பார்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் காகிதத்தில் காட்டும் வர்த்தகம் போலவே இன்னொரு பங்கு வர்த்தகம் கணக்கில் வராமல்நடக்கிறது என்பதை குறிப்பிடுகிறார்கள்.

சீனாவும் பர்மாவின் மேல்கட்டுமான அமைப்புகளுக்கு வெகுவாக உதவி வந்திருக்கிறது. ஆழ்கடல் துறைமுகங்கள், சாலைகள், விமானதளங்கள் போன்றவற்றைக் கட்ட உதவி அளித்திருக்கிறது. இத்துடன் குறைந்த வட்டி கடன்களையும் பர்மாவுக்கு அளிக்கிறது.

இந்த பர்மாவின் துறைமுகங்கள் மூலம், தென் சீன பிரதேசங்கள் தங்களது பொருட்களை தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பவும் உதவுவதால் இந்த தொடர்பு நீடிக்கிறது. இத்துடன் தென் சீன பிரதேசங்களில் உருவாக்கப்படும் பொருட்களுக்கு பர்மாவிலேயே நிறைய சந்தையும் இவைகளுக்குக் கிடைக்கிறது.

ஆனால், இவ்வாறு போடப்பட்ட சாலைகள் போதை மருந்து கடத்துபவர்களுக்கும் வெகுவாக உதவிவிடுகிறது. ஆஃம்பிடமின்ஸ் என்ற போதைப்பொருட்கள் பர்மாவிலிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 60 சதவீதம் பர்மாவின் போதைப்பொருட்கள் சீனாவுக்குச் செல்கின்றன என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

பர்மாவின் தங்க முக்கோணம் என்று சொல்லப்படும் போதை மருந்து உற்பத்தி வினியோக புள்ளிகளின் முக்கிய கடத்தும் வழி சீனாதான். இதனால், சீனா இவ்வாறு போதைப்பொருள் கடத்துவதை முக்கிய பிரச்னையாகப்பார்க்கிறது.

சீனா பர்மாவுக்கு அளிக்கும் சாலைகளும் விமான வழிகளும் பர்மாவை ராணுவ ராஜதந்திர ரீதியில் முக்கியமான தேசமாக ஆக்கி விட்டுவிட்டன.

ஏற்கெனவே இந்தியாவும் ஜப்பானும் பர்மாவில் சீனாவின் வளரும் செல்வாக்கை கவலையோடு பார்க்கின்றன.

பர்மாவும் இந்த போட்டியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் எனவே தோன்றுகிறது.

Series Navigation

செய்தி

செய்தி