சிதறும் நினைவுகள்

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

மலர்மன்னன்


‘திண்ணை ‘யின் வாசகர் வட்டம் இவ்வளவு விரிவானதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் மனுஷ மனசுதானே, வெங்கட் சாமினாதனிலிருந்து நான் அறிந்த, அறியாத பலரிடமிருந்தும் பாராட்டியும், தொடர்ந்து எழுதுமாறு வலியுறுத்தியும், வெவ்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்டும் வரும் மெயில்களைப் படிக்கிறபோது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அதிலும்

நான் பெரிதும் மதிக்கும் சிந்தனையாளர் வெங்கட் சாமினாதன் என் நினைவு அடுக்குகளில் புதைந்துள்ளவற்றையெல்லாம் நான்

பதிவுசெய்தாக வேண்டும் என்று உத்தரவிடும் தொனியில் எழுதியிருப்பதைப் படிக்கிறபோது எனக்கு உடலில் போதிய சக்தியும் எழுதுவதற்கான அவகாசமும் தருமாறு இறையருளை வேண்டுவது தவிர வேறு ஏதும் செய்வதற்கு இல்லை.

எனது உடலை ஏற்கனவே நான் மிகவும் வருத்தி வேலை வாங்கியாகிவிட்டது. இதன் மீது சலிப்பே ஏற்படும் அளவுக்கு. கழற்றிப்

போட்டுவிடலாமா என்று மனம் தவிக்கிறது, அடிக்கடி. ஏனெனில் இருமுறை உள்ளுணர்வில் ‘போதும், புறப்படு ‘ என்று செய்தி வந்து

விட்டது. எனினும் சில வேலைகளை முடித்துவிட்டு வர அவகாசம் கேட்டுக் கொண்டேன். ஆனால் நிச்சயமாக நினைவுகளைப் பதிவு செய்வதற்காக அல்ல. எமது ஹிந்து சமுதாயத்திற்கு நான் ஆற்றவேண்டிய சில கடமைகள் இருப்பதாக எனக்குத் தோன்றும்

சிலவற்றைச் செய்து முடிப்பதற்கும் என்னால் கவனிக்காது விடப்பட்டிருக்கும் என் மனைவியின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முடிந்தவரை ஏதாவது உருப்படியாகச் செய்துவிட்டுப் போகலாம் எனக் கருதியும்தான் புறப்படுவதற்குச் சிறிது அவகாசம் கேட்டு வைத்தேன். ஆனால் இடையில் உடலை மிகவும் சுமையாக உணர்ந்து காசிக்குச் சென்று நாற்பத்து எட்டு தினங்கள் தவமிருந்து அதன் பின் எம்மவரின் மாதாவான கங்கையில் ஜலசமாதியாகும் எண்ணத்துடன் சென்னை வந்தேன். எவருக்கும் தெரியாமல் மறைவது ஏதோ தவறுசெய்தவன் போல் ஆகும் அல்லவா ? எனவே என் என்ணம் பற்றி நீண்ட நாள் நண்பர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி வீட்டில் ஓர் இரவு தங்கி பேச்சுவாக்கில் அவரிடம் எனது ஜலசமாதி வேட்கையைத் தெரிவித்தேன். அவர் என்னை நன்கு அறிந்தவர் ஆதலால் திடுக்கிடாமலும், அதே சமயம் அதனை வெறும் மாய்மாலமாக எண்ணாமலும் மிகவும் பொறுமையாக என் முடிவை மாற்ற முற்பட்டார்.

நமக்கு அவ்வப்பொழுது இவ்வாறு ஆவேசம் வருவது இயற்கைதான். ஆனால் தற்போதைக்குச் சென்னையில் சில நாட்கள் இருந்து

விட்டுப் பெங்களூருக்கே திரும்பிச் செல்லுங்கள். அடுத்தமுறை இதே உனர்வு எழும்போது அதனைச் செயல்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். என் மீது மிகவும் அன்புள்ளவரான அவர், ஒருவேளை நான் பொருளதாரத் தொல்லையின் காரணமாக மனம் வெறுத்துப் போயிருப்பேனோவென்றும் ஐயுற்று, தான் ஏதேனும் செய்யவேண்டுமா என்று என்னிடம் மிகவும் நயமாக அக்கரையுடன் கேட்டுக்

கொண்டார். ஏதும் வேண்டாம், இரவு முழுவதும் பலவாறு பழங்கதைகள் பேசி மகிழ்ந்ததே மன நிறைவு தருவதாகக் கூறி நன்றி

தெரிவித்து விடைபெற்றேன்.

மறுநாளே அமுதசுரபி ஏவிஎஸ் ராஜா என் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டே தீரவேண்டும் என்றும் உடனே கிடைத்தவரை

சிறுகதைகளைத் திரட்டி எடுத்துவருமாறும் அவசரப்படுத்தினார். கங்கை மாதாவின் மடியில் படுக்க விரும்பிப் புறப்பட்டவனிடம்

சிறுதைகள் தயாராகவா இருக்கும் ? வீட்டிலுங் கூடப் பத்திரப் படுத்தி வைத்ததில்லை! பிறகு எப்படியோ பலர் உதவியுடன் சில கதைகளை அவசரமாகத் திரட்டிக் கொடுத்தேன். நான் மிகவும் தெளிவாகக் கூறியும் அதன் பதிப்பாசிரியரான கன்ணன் என்பவர் (என் பெயரையே கேள்விப்படாதவர்!), அவராகவே தொகுப்பினை வெளியிட்டுவிட்டதால் தரமான கதைகள் விடுபட்டு, அவசரமாக எழுதிக் கொடுத்த பத்திரிகைக் கதைகள் இடம் பெற்று, அமுத சுரபி பதிப்பக வெளியீடாக அது வெளியாகிவிட்டது. இவ்வளவும் எதற்குச்

சொல்கிறேன் என்றால் எனது ஜல சமாதி முடிவை நான் தள்ளிப் போடவேண்டும் என்பதற்காகவே ஏவிஎஸ் ராஜாவின் மூலமாக இறைச்சக்தி அன்று இயங்கியதாகப் பிறகு புரிந்து கொண்டேன். அதே போலத் திண்ணையின் கோ. ராஜாராம், வெங்கட் சாமினாதன் மற்றும் பலர் மூலமாக இப்போது வரும் வற்புறுத்தல்கள் இன்னும் சில நாட்கள் இவ்வுடலைச் சுமந்திருக்க வைப்பதற்கான சமிக்ஞையா ?

அது புரிபடச் சிறிது கால அவகாசம் தேவைப்படும்.

சுயசரிதை மாதிரி எழுதவேண்டும் என்பது ராஜாராம் விருப்பம். தமிழ் நாட்டின் அரசியல் சமூக கலாசாரக் களம் கடந்த அறுபது ஆண்டுகளில் மிகவும் வக்கரித்துப் போயிருப்பதால் என் காலத்தையும் நான் எதிர் கொண்ட நிகழ்வுகளையும் பதிவு செய்வது ஆய்வுப் பணிகளுக்கு மிகவும் உபயோகமாயிருக்கும் என்பது வெங்கட் சாமினாதன் மற்றும் சிலரின் வலியுறுத்தல். சிலர் திண்ணையில் வந்த கட்டுரைகளிலிருந்து சில கருத்துகளைக் குறிப்பிட்டு மேலதிக விளக்கங்கள் கேட்கிறார்கள். ஆனால் மனசுக்கு மிகவும் நிறைவுதரும்

விஷயம், ஒருவராவது என்னைச் சந்தேகிக்கவில்லை. என் தகவல்களை எப்படி நம்புவது எனக் கேட்கவில்லை! அவர்களுக்கெல்லாம் எனது நமஸ்காரம்.

****

முதலில் எனக்கு மிகவும் அவசியம் எனப்படுகிற, என்னிடம் எதிர்பார்க்கப் படுகிற விளக்கங்கள். கேட்டவர் பெயர்களைக் குறிப்பிடுவதானால் நான் மெயில்களுக்குப் போய்த் தேட வேண்டும். அது சங்கடமான வேலை. எனவே சம்பந்தப் பட்டவர்கள் மன்னிக்க வேண்டும்.

அயோத்திதாசரும் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்த முனைந்தவர்தானே, ஈவேரா மீது மட்டும் ஏன் அந்தப் பழியைச் சுமத்துகிறீர்கள் என ஒருவர் வேதனைப் பட்டுள்ளார்.

அயோத்திதாசர் தலித்துகள் மட்டுமின்றி நாம் அனைவருமே நமது ஆதி மதமான பூர்வ பவுத்தத்திற்குத் திரும்பிவிட்டால் இந்தத்

தீண்டாதார் பிரச்னைக்கு முடிவுகட்டிவிடலாம் என்கிறார். தலித்துகள் மாத்திரம் பூர்வ பவுத்தர்களாகிவிடலாம் என அவர் கூறவில்லை. ஒரு வழிகாட்டுதல் போல் முதலில் தலித்துகள் பூர்வ பவுத்தம் தழுவுவதே அவரது நோக்கம் எனலாம். ஆகவே அவர் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்த முற்பட்டவர் அல்ல. ஹிந்து சமயத்திற்குப் பூர்வ பவுத்தம் என நாமகரணம் சூட்டியவர் மட்டுமே.

ஈவேராவை நான் புறந்தள்ளி, தாசரைத் தழுவிக் கொள்ளக் காரனம் இதுவே.

***

அயோத்தியில் பாபர் நினைவு மண்டபம் குறித்துச் சிலர் எதிர்பார்க்கும் விளக்கங்கள்:

நான் டெக்கான் ஹெரால்டு இதழுக்கு எழுதியனுப்பிய, அது புறக்கணிித்த கட்டுரை: பாப்ரி: மாஸ்க் ஆர் மெமோரியல் ?

முகமதியர்களைப் பொருத்தவரை, வேளை வந்து விட்டால் எந்த இடத்தையும் தமது வழிபாட்டுக்குரிய இடமாக்கிக் கொண்டு

விடுவார்கள். அது ஓடும் ரயிலாயினும் சரியே.

1974-75 ல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள உஸ்மான் சாலையில், சிவ விஷ்ணு ஆலயம் அருகே முகமதியர்கள் ஒரு கட்டிடம்

வாங்கித் தங்கள் சமயம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள முற்பட்டார்கள். நீங்கள் இங்கு உங்கள் வழிபாட்டையும் தொடங்கி

விடுவீர்கள். எங்களுக்கு அதில் பிரச்சினை இல்லை யென்றாலும், காலப் போக்கில் அருகில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்திலிருந்து வரும் எமது இன்னிசை ஓசைகள் தொழுகைக்கு இடையூறு செய்வதால் தொழுகையின் போது ஒசையெழுப்பாதீர்கள் எனக் கூறத்

தொடங்கி விடுவீர்கள். எனவே உங்களது சமயப் பணிகளுக்குப் பயன் படுத்த இங்கு கட்டிடம் வேண்டாம் எனக் கூறினோம்.

ஹஜ் பயணம் செய்து திரும்புபவர்களுக்காகவும், ஹஜ் பயணம் செல்பவர்களுக்காகவும் ஒரு தாற்காலிகத் தங்கும் இடமாகத்தான் இக்கட்டிடத்தைப் பயன்படுத்தப் போகிறோம். எனவே உங்கள் அச்சம் அனாவசியம் என உறுதியளித்தார்கள். ஆனால் இன்று அக்கட்டிடத்தைப் பள்ளி வாசல் என்றே போர்டு போட்டுக் கொள்ளும் அளவுக்குத் தங்கள் உறுதி மொழியினைக் காற்றில் பறக்க

விட்டுவிட்டார்கள். ஹஜ் பயணிகள் தங்குமிடமாகவே போர்டு வைத்திருந்தாலும் அவர்கள்தான் ஹிந்துக்களைப் போல் அல்லவே,

எந்த இடமாயினும் வேளை வந்தவுடன் துப்பட்டியைத் தரையில் போட்டுத் தொழுகை தொடங்கி விடும் கட்டுப்பாடு உள்ளவர்களாயிற்றே ?

முகமதியர் முதலில் ஹஜ் பயணிகளுக்கான விடுதி எனக் கூறிவிட்டு, பின்னர் அதனைப் பள்ளிவாசல் என்றே குறிப்பிடத் தொடங்கி

தொழுகையும் நடத்திவருவதில் எமக்குச் சந்தோஷம்தான். ஆனால் என்று சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஓசையுடன் பூஜைகள்

நடந்தேறுவது தமக்கு இடைஞ்சலாக உள்ளது எனப் பிரச்சினை கிளப்பப்போகிறார்களோ!

இப்படித்தான் மும்பையில் வெள்ளிக் கிழமை உச்சிப் போது வந்துவிட்டால் சாலை முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டு தொழுகை செய்யத் தொடங்கினார்கள். தொழுகையின்போது எவருமே சாலைக்குள் நுழைய முடியாது! டாம் மொரேஸ் ஒருமுறை உள்ளே புக முற்பட்டு உதைபட்டுத் திரும்பினார். அவர் போலீசில் கொடுத்த புகார் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டிப் பதிவு செய்யப் படவில்லை. வெள்ளிக் கிழமை பகல் எனில் பாந்திரா சாலை பொது மக்களுக்குச் சொந்தமல்ல என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அவர் தமது தார்மிகக் கோபத்தைத் தணித்துக் கொள்ளவேண்டியதாயிற்று.

சென்னையில் முகமதியர்கள் ரம்ஜான் தொழுகையைக் கடற்கரையில் நடத்திக்கொள்கிறார்கள். இதேபோல் பல இடங்களில் ரம்ஜான் கூட்டுத் தொழுகைக்காக மைதானம் வேண்டும் எனக் கேட்டு, காலப் போக்கில் அதனைத் தங்களது உடமையாக்கிக் கொண்டு

விடுகிறார்கள். இப்படித்தான் ஹூப்ளியில் முதலில் இடம் கேட்டு அதன்பின் புத்திசாலித்தனமாக லீசுக்கும் எடுத்து அதில் கடைகள் கட்டி சம்பாதிக்கவும் முனைந்தார்கள். கேட்டது என்னவோ ஒரு நாள் கூட்டு வழிபாட்டிற்கக! பிறகு ஊருக்குப் பொதுவான அத்

திடலில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதைத் தடுக்குமளவிற்குத் தீவிர மதப் பற்றாளர்களாக விளங்கினார்கள். ஆண்டு

தோறும் ஆகஸ்டுப் பதினைந்து ஹூப்ளியில் தேசியக் கொடியேற்றும் ஒரு போராட்டமாகவும் அக் குற்றத்திற்காக நாங்கள் கைதாவதுமாக ஒரு சோகச் சம்பவம் தொடர்ந்தது. தேசியக் கொடியேற்றச் செல்பவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு எல்லாம்

நடந்தன. நினைத்துப் பாருங்கள், பாரத மண்ணில் சுதந்திர தினத்தன்று பாரத மணிக் கொடியினை ஏற்ற பாரதியர்களுக்கு

அனுமதியில்லை! இந்த வெட்கக் கேடு வேறு எந்த தேசத்திலாவது நிகழுமா ?

தேவே கவுடா கர்னாடக முதல்வரானபோது கூட இப்பிரச்சினை தீரவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் கெஞ்சிக்

கூத்தாடி மானக் கேடாக உள்ளதே எனப் புலம்பி சுதந்திர தினத்தன்று அங்கு தேசியக் கொடியேற்றுவதற்கு முகமதியர்களைச்

சம்மதிக்க வைத்தார்.

இதேபோல் கர்னாடகத்தில் தத்தாத்ரேயர் மலைக்குச் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பாபா புடான் என்று அழைக்கப் பட்ட ஒரு முகமதியத் துறவி அரேபியாவிலிருந்து வந்து தங்கலானார். ஹிந்துக்களும் தமக்கே இயல்பான சமரச மனப்பான்மையில் அவருக்கு இடமளித்து மகிழ்ந்தனர். காலப் போக்கில் அந்த மலையையே அவர் தமக்குச் சொந்தமாக்கிகொண்டுவிட்டார்! இன்றைக்கும் அங்கு ஆண்டுக்கு ஒருமுறை தத்தாத்ரேயர் ஜயந்தி கொண்டாடுவதென்றால் ஆயிரக் கணக்கான போலீஸ் பந்தோபஸ்து, பக்தர்களுக்குப் பலவாறான கட்டுப்பாடு எனப் பல பதட்டங்கள்!

தத்தாத்ரேயரைக் காட்டிலும் பாபா புடான் புராதனமாகிவிட்டிருக்கிறார், நம் தேசத்தில், அவர் முகமதியர் என்ற ஒரே

காரணத்திற்காக! எனவே அவரது சமாதி பராமரிப்பாளர்கள் சம்மதித்தால்தான் அங்கு ஹிந்துக்கள் ஆண்டுக்கு ஒருமுறையாகிலும்

தத்தாத்ரேயர் ஜயந்தி கொண்டாட இயலும்.

கடற்கரையிலும், மைதானங்களிலும் நடுச் சாலையிலும் ஓடும் ரயிலிலுங் கூட முகமதியர் வழிபாடு நடத்துவதால் அந்த இடங்களையெல்லாம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களாக அங்கீகரிப்பது சரியாகிவிடுமா ?

முகமதியர்கள் வீம்புக்காக பாபர் நினைவிடத்தில் வழிபாடு நடத்தத் தெடாங்கியதால் பாபர் நினைவு மண்டபம் பாபர் மசூதியாகி

விடுமா ?

துருக்கியில் கிறிஸ்தவர்களின் புனித சோபியா ஆலயத்தை முகமதியர் எதேச்சாதிகாரமாக மசூதியாக மாற்றியபோது ஞாபகமாக அதன் நான்கு புறமும் மினாரெட்டுகளை எழுப்பித்தான் அதிகாரப் பூர்வமான மசூதியாக அதனை அறிவித்தார்கள். பாபர் நினைவிடத்தில் அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில் அதனை மசூதியாக்கிக் கொள்ளும் அவசியம் அப்போதுஆவர்களுக்கு இல்லை. பிற்பாடு

ஹிந்துக்கள் ஜன்மஸ்தானத்தில் தாம் நம்பும் பிரஸ்தாப இடத்தில் ராம் லல்லாவுக்குக் கோயில் வேண்டும் எனக் கோரவும், அதனை மசூதி என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். முதல் விடுதலைப் போர் நடந்த 1857 கால கட்டத்தில் ஹிந்து-முகமதியர் ஒற்றுமைக் கான நல்லெண்ன அடிப்படையில் அங்கு ராம் லல்லாவின் ஆலயம் அமைவதற்கென பாபர் நினைவு மண்டபத்தை விட்டுக் கொடுக்க மன்னர் வாஜித் அலி ஷா முன் வந்தார். ஆனால் போர் தோல்வியுற்றதால் அது சாத்தியமில்லாது போயிற்று.

இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

சென்னை பெரியமேடு பகுதியில் பிரதான மசூதி ஒன்று உள்ளது அல்லவா ? அதன் எதிரே சென்னை மாநகராட்சியின் விளையாட்டு ஸ்டேடியம் இருப்பதும் தெரியும் அல்லவா ? 1947 ஆகஸ்டு 15 க்கு முன்னரே அதனைக் கட்டுவதற்கான ஏற்பாடாகிவிட்டது.

பிறகென்றால் கட்ட முடிந்திருக்காது!

சென்னை மாநகராட்சி அங்கு ஸ்டேடியம் கட்ட முற்பட்டபோது, அப்போது கவர்னராக இருந்த ஆங்கிலேயர் நையிடம்

பெரியமேடு முகமதியர்கள் ஒரு மனு கொடுத்தார்கள். ‘இங்கே மசூதியிருப்பதால் எதிரில் ஸ்டேடியம் கட்டினால் விளையாட்டுகள்

நடைபெறும்போதெல்லம் கூச்சல் எழும்பி எங்கள் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே ஸ்டேடியத்திற்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் ‘ என்பதுதான் மனுவில் கண்டிருந்த சேதி.

‘எத்தகைய வெளிச் சலனங்கள் இருந்தாலும் அது செவிப் புலனில் புகாமல் மேற்கொள்வதுதான் உண்மையான வழிபாடாக இருக்க முடியும். சாதாரணக் கூச்சல்களால் தடைபடுமானால் அது வழிபாடாக இருக்க முடியாது. சென்னையில் இப்பகுதி மக்களுக்கு ஒரு ஸ்டேடியம் மிகவும் அவசியம். அது தங்களது வழிபாட்டுக்கு இடையூறாக இருக்கும் என்று முகமதியர்கள் கருதினால் அவர்கள் வெளியிலிருந்து ஓசைகள் ஏதும் வர வாய்ப்பில்லாத ஏதேனும் ஒரு வனாந்திரத்திற்குத் தங்களுடைய வழிபாட்டுத் தலத்தை இடம் பெயர்த்துக் கொள்வதே உசிதம் ‘ என்று அந்த மனுவின் மீது தமது தீர்ப்பை எழுதினார் ஆளுநர் நை.

சுதந்திரம் கிடைத்த பிறகென்றால் இப்படியொரு கருத்தைச் சொல்லி முகமதியரின் மனுவைப் புறக்கணிக்கும் துணிவு ஒரு ஆளுநருக்கோ, மாநில முதல்வருக்கோ வந்திருக்கக் கூடுமா ? இதுதான் நாம் பெற்ற சுதந்திரத்தின் மகத்துவம்!

சுயசரிதை, எனது காலமும் அதில் நான் எதிர் கொண்டவையும் என்றெல்லாம் நான் பதிவு செய்யவேண்டும் என்று விரும்பினால் இவ்வாறெல்லாந்தான் என்னால் எழுத இயலும். சகித்துக் கொள்ளத் தயார்தானா ? தயார் என்றால் சொல்லுங்கள், எழுதுவதைத்

தொடர்கிறேன்!

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்