எஸ்ஸார்சி
விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா
முதற்பதிப்பு-1985 காவ்யா 8 சாசுதிரி நகர், இரண்டாவது குறுக்கு தெரு, பெங்களூர் 560038
பக்கம்-248, விலை ரூபாய் -20
———————————————————————————————-
நான் ஒரு எறும்பல்ல,கொஞ்சம் வித்தியாசப்பட்டவன் என்று எதாவது ஒரு விதத்தில் காட்ட விரும்பிகிறோம். அதற்காகத்தான் ஒருவன் பின்பக்கமாக முந்நூறு மைல் நடக்கிறான். கவிதை எழுதுகிறான். கென்னடியைக்கொல்கிறான். ஒருவள் இருபத்தி நான்கு மணி நேரமும் குச்சுப்புடி ஆடுகிறாள் அல்லது பாம்புடன் வாழ்கிறாள். மனித வாழ்வின் அத்தனை உன்னத இயக்கங்களிலும் நான் சற்று நேரமாவது தனிப்பட்டவன் என்று காட்டிடவே விருப்பம். -முன்னுரையில்
———————————————————————————————————————
தொடாதது எதுவுமில்லை. தொட்டதைத் துலக்காமல் விட்டதுமில்லை. என்று கூறுவது இவருக்குப்பொருந்தும் இன்று பத்திரிகை உலகில் கிங் ஆக விளங்கும் சுஜாதா, – பதிப்புரையில் காவ்யா சண்முகசுந்தரம்
——————————————————————————————————————
படிகள் ( பேட்டி) சுந்தர ராமசாமி கதை அனுப்பினால் ஜனரஞ்சகப்பத்திரிகைகளில் வரும் என்று நினக்கிறீர்களா?
சுஜாதா: ஏன் வராது. அவர் அனுப்புவது இல்லை. பக்கம் 4
———————————————————————————————————————
என்னிடம் வருபவர்கள் குட் ரைட்டிங் எதுன்னு கேட்கிறபொதெல்லாம் லிட்டில் மேகசினைத்தான் காட்டுகிறேன்.
பக்கம் 5
———————————————————————————————————————-
வையாபுரிப்பிள்ளை கொஞ்சம் சொல்ல ஆரம்பிச்சார். அதுக்குள்ள ஒதச்சான் அவரை. தமிழர்கள், தெ டோன் அலோ
சயன்டிபிக் ரிசர்ச். பக்கம் 6
———————————————————————————————————————-
அசோகமித்திரன் ரைட்டர் க்கு ரைட்டர் என்று சொல்லும் தகுதி படைத்தவர். அவர் கதை பல ஜனரஞ்சக ப்பத்திரிகை எடிடர்களுக்குப்புரியாது.- ‘அபவ் தெர் ஹெட்’ அவ்வளவு விஷயம் இருக்கும் அசோகமித்திரன் கதையில். ‘,வாட் வி கன்சிடர்
எ ரிமார்கபில் இசுடோரி வில் பி பிளாட்லி ரிஜக்டெட்’. எடிடர்க்குப்புரியாது. அவன் லிமிடேஷன். பக்கம் 9
———————————————————————————————————————-
கே: எழுதுவதற்கு என்று எதாவது விதிகள் உள்ளனவா?
ப: நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும். நான் ஆண்டுக்கணக்காக இதை வளர்த்து வருகிறேன். எனது கண்களையும் காதுகளையும்
கவனமாக த்திறந்து வைத்திருக்கிறேன் கதைகளையும் கதைகள் அல்லாதவற்றையும் வாசிப்பேன். வாசிப்பது எழுதுவதற்குப்பெரிதும் துணை புரிகின்றது. ஒருவருக்கு எதைப்பற்றி தெளிவாகத்தெரிகிறதோ அதைப்பற்றியே எழுதவேண்டும். எழுத்து என்பது அவரது தோலிலேயே ஊறிப்போய் விட வேண்டும். பக்கம் 46
———————————————————————————————————————-
கே: உங்கள் எழுத்துக்களில் நீங்கள் திருப்தியுறுகிறீர்களா?
ப: எப்பொழுதும் இல்லை. ஒருவர் திருப்தியுறவும் கூடாது. எழுத்தாளர் இவ்வாறு சொல்வதானால் அவர் அப்பொழுது சவமாகிப்போகிறார்.
பக்கம்-47
———————————————————————————————————————-
நான் கிளாரிபை பண்ணிடறேன். ரொம்ப ஜீனியசு இல்லை நான். ஆனா கொஞ்சம் குருக். குருக் குங்கறது ஒரு ரிலேடிவ் டேம். எல்லாத்துக்கும் பொருந்தும். கிரியேடிவிடிக்கு அது தேவையா இருக்கு. சில பேர் பேசறப்ப அவங்களோட நேர் அர்த்தங்களை விட்டு விட்டு உள் அர்த்தங்களை தேடிக்கிட்டே இருப்பேன். பக்கம் 9
———————————————————————————————————————-
கே: பிடித்த தமிழ் நாவல்கள் ?
ப: சுந்தர ராமசாமி எழுதிய ‘ ஒரு புளிய மரத்தின் கதை’ நீலபத்மநாபன் எழுதிய ‘தலை முறைகள்’ கி. ராஜ்நாராயணன் எழுதிய ‘ கோபல்ல கிராமம், பக்கம் 119
———————————————————————————————————————-
மோகமுள் போன்ற முழுமையான நாவலை நான் அதன் பின் தமிழில் படிக்கவில்லை !…… அவர் நடையில் இருந்த நளினத்தை யாரும் எட்டிப்பிடித்ததாகத் தெரியவில்லை. ஜானகிராமனை என் இளமைக்காலத்தில் ஒரு இலக்கிய கூட்டத்தில் முதன் முறை சந்தித்தேன்.
அதாவது தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை என் பக்கம் திரும்பி புன்னகைத்தபோது அதை எடுத்து பையில் போட்டுக்கொண்டு திருப்தியுடன் திரும்பினேன். பக்கம் 196
———————————————————————————————————————-
ஜானகிராமனின் கதையை முப்பது வருஷம் கழித்துப் படித்தபோது கூட அந்தச்சிலிர்ப்பு எனக்கு மறுபடி ஏற்படுகிறது.
பக்கம் 197
———————————————————————————————————————-
மொழியை கன்னி , தாய் என்று கொஞ்சுகிற பிசினெசை விட்டொழித்தால்தான் நமக்கு விடிவுகாலம். பக்கம் 205.
———————————————————————————————————————-1965 ல் கணையாழி டில்லியில் துவங்கிய போது அதன் இரண்டாம் இதழிலேயே ஆசிரியர் என் நண்பர் கசுதூரி ரங்கன் ‘ஏதாவது
எழுதேன்’ என்று என்னிடம் ஒரு பக்கத்தைக்கொடுத்துவிட்டார். அப்போதெல்லாம் நான் ஒன்றும் பிரபலமில்லை. இருந்தாலும்
கசுதூரிரங்கனுக்கு என் எழுத்தின் மேல் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. பக்கம் 237
essarci@yahoo.com
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்
- உயிர்த்தெழும் ஔரங்கசீப்
- அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி
- SR நினைவுகள்
- அமரர் சுஜாதா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ? (கட்டுரை: 20)
- தேம்ஸ் நதியின் புன்னகை
- இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்
- வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்
- உடம்பு இளைப்பது எப்படி?
- நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து
- தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !
- ஜெய்பூர் கால்— டொக்டர் பிரமோத் கரன் சேத்தி மறைவு
- பதங்களும் ஜாவளியும் – பக்தியும் சிருங்காரமும்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)
- கிராமங்களின் பாடல்
- மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி
- அதிகாலை.காம்
- ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது
- “வார்த்தை” மாத இதழ் சந்தா – சிறப்புச் சலுகைகள்
- குதிரை ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !
- ஆடுகளம்
- சுயமோகிகளுக்கு…..
- சம்மந்தமில்லை என்றாலும் – விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா
- உலகை குலுக்கும் உண்டியல் புரட்சியாளர்கள்
- மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்
- நினைவுகளின் தடத்தில் (6)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 2
- முலையகம் நனைப்ப விம்மி அழுதனள்
- போட்டோ
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 2