சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா
‘சனிக்கோள் மையத்தில் இருக்க அதைச் சுற்றிவரும் பல துணைக்கோள்கள், விண்குப்பைகள் சுற்றும் புதிரான ஒளி வளையங்கள் ஆகியவற்றை நோக்கினால், அது ஏறக்குறைய ஒரு சிறு சூரிய மண்டலத்தைப் போலவே உள்ளது! 1980 இல் பயணம் செய்த வாயேஜர் விண்வெளிக் கப்பல் அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்குப் போதாதவை! சனிக்கோள் பல விந்தைகளைக் கொண்டது! மீண்டும் சென்று சனி மண்டலத்தை மேற்கொண்டு கூர்ந்தறிய விரும்புகிறோம் ‘
வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress Jr. NASA Scientist]
முன்னுரை: 3.4 பில்லியன் டாலர் செலவில் உருவான நாசா, ஈசா [NASA, ESA, American & European Space Agencies] இரண்டின் கூட்டுத் திட்டமான, காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் 2004 ஜூலை முதல் தேதியில் சனிக்கோளை அண்டி, அதன் ஈர்ப்பு மண்டலத்தில் நுழைந்து, அதை நீள்வட்ட வீதியில் சுற்றப் போகிறது! இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன் 1980 இல் பயணம் செய்த நாசாவின் இரு அண்டவெளி நோக்கிகளான வாயேஜர்-1 வாயேஜர்-2 விண்வெளிக் கப்பல்கள் சனிக்கோளை நெருங்கிச் சென்று அனுப்பிய செய்திகள் யாவும் இனிமேல் திருப்தி செய்யாத, பழைய தகவலாய்ப் ஆகப் போகின்றன!
காஸ்ஸினியின் சனிப் பயணம் 1997 அக்டோபரில் துவங்கி ஆறு வருடங்கள் ஓடிவிட்டன! அந்தக் காலவெளியில் 2.2 பில்லியன் மைல் நீண்ட விண்வெளிப் பயணம் செய்து, காஸ்ஸினி வெள்ளிக் கோளைக் கடந்து, பூத வியாழன் அருகே பறந்து, இப்போது [2003 ஆகஸ்டு] சனிக்கோளை நெருங்கிக் கொண்டு வருகிறது! மேலும் காஸ்ஸினி பூமியின் கவர்ச்சி மண்டலத்தைத் தாண்டிப் போன பின், வெள்ளிக் கோளை [Planet Venus] முதலில் ஒரு முறைச் சுற்றி, அடுத்து ஒரு பெரும் நீள்வட்டப் பாதையில் மறுபடியும் பூமியை 725 மைல் உயரத்தில் ‘துரித ஈர்ப்புச் சுற்று வீச்சில் ‘ [Gravitational Swingby Orbit] நெருங்கி, மீண்டும் வெள்ளியை வலம் வந்தது! வெள்ளி-பூமி இரண்டையும் சுற்றி வரும்போது, காஸ்ஸினியின் வேகம், கோள்களின் ஈர்ப்பு விசைகளால் அதிகரித்து சனிக்கோளை விரைவில் அடைய விஞ்ஞானிகள் பூமியிலிருந்து வழி வகுத்தனர். 2004 ஜூலையில் சனிக்கோளின் ஈர்ப்பாற்றலில் சிக்கியதும், காஸ்ஸினி அதைச் சுழல்வீதியில் சுற்றிவரத் தொடங்கும்.
சுற்ற ஆரம்பித்த பின் ‘ஈரோப்பியன் விண்வெளி கூட்டகம் ‘ [European Space Agency (ESA)] அமைத்துக் காஸ்ஸினி சுமந்து வரும் ‘ஹியூஜென்ஸ் ‘ இறங்கு சிமிழ் [Huygens Lander] பாராசூட் குடை விரித்துச் சனியின் மிகப் பெரிய துணைக் கோளான டிடானில் [Titan Satellite] இறங்கி உளவு செய்யும். நான்கு ஆண்டுகளுக்கு காஸ்ஸினி விண்சிமிழ் சனிக்கோளை 74 தடவை சுற்றி வந்து, அக்கோளையும், அதன் பல துணைக்கோளையும், பிரம்மாண்டமான பல வளையங்களையும் ஆராய்ச்சி செய்யும். அத்துடன் 44 தடவை புதிரான டிடான் துணைக்கோள் அருகே பயணம் செய்தும், சனியின் பிற பனித் துணைக் கோள்களைச் [Icy Moons] சுற்றி வந்தும் பல ஆய்வுகளைக் காஸ்ஸினிச் சிமிழ் புரியும்.
2003 ஜூன் 27 ஆம் தேதி நாசா, ஜெ.பி.எல் [Jet Propulsion Laboratory (JPL)] வெளியிட்ட சமீபத்திய அறிக்கைப்படி, காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் எவ்வித இன்னல்கள், இடையூறுகள் இல்லாமல், சுமுகமாகச் சனிக்கோளை நோக்கி விண்வெளியில் விரைந்து கொண்டிருக்கிறது.
காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் சில பயண விபரங்கள்
1997 அக்டோபர் 15 ஆம் தேதி பிளாரிடாவின் கானாவரல் முனையிலிருந்து [Cape Canaveral, Florida] டிடான் IVB சென்ட்டார் ராக்கெட் [Titan IVB Centaur Rocket] செங்குத்தாக விண்வெளியை நோக்கி ஏறியது. ராக்கெட் மூக்கின் உள்ளே 23 அடி உயரம், 14 அடி அகலமுடன் 11,200 பவுண்டு எடையுள்ள காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் பாதுகாப்பாய் வைக்கப் பட்டிருந்தது. சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள், அவற்றின் இடைவெளிகள், நான்கு துணைக் கோள்கள் ஆகியவற்றை முதன்முதல் கண்டு பிடித்த 17 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற இத்தாலிய விஞ்ஞானி, ‘கியோவன்னி காஸ்ஸினியின் ‘ [Giovanni Cassini (1625-1712)] பெயரைப் பெற்றது, அந்த விண்வெளிக் கப்பல்.
Saturn & its Moons
காஸ்ஸினி விண்கப்பல் தன்னுடன், டிடான் துணைக்கோளில் இறங்கும் ‘ஹியூஜென்ஸ் ‘ என்னும் ‘இறங்கு சிமிழ் ‘ ஒன்றைத் தூக்கிக் கொண்டு சென்றது. சனியின் வளையத்தை முதலில் கண்டு பிடித்த ‘கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ‘ [Christian Huygens (1629-1695)] பெயரைப் பெற்றது, அந்த இறங்கு சிமிழ் உளவி. 2004 ஜூலை முதல் தேதி காஸ்ஸினியின் பிரதம எஞ்சின் சுடப்பட்டு, வேகம் தணிந்துவிடும். அப்போது அது சனிக்கோளின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, அதைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள் போன்று சுழல்வீதியில் சிக்கிக் கொள்ளும்!
நான்கு ஆண்டுகளுக்குக் காஸ்ஸினி சனிக்கோளை 74 தடவை நீள்வட்டச் சுழல்வீதியில் சுற்றி வந்து படங்களையும், தகவல்களையும் பூமிக்கு அனுப்பும். சனியின் 18 சந்திரன்களில் மிகப் பெரிய டிடான் சந்திரனை 44 தடவைகள் சுற்றி அதன் விபரங்களையும் சேர்த்து அனுப்பும். அத்துடன் மற்ற 17 பனிச் சந்திரன்களையும் [Icy Moons: Enceladus, Hyperion, Dione, Rhea, Iapetus etc] அநேக சுற்றுகள் சுற்றி விபரங்கள் அறியத் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.
2004 டிசம்பர் 25 ஆம் தேதி ‘ஹியூஜென்ஸ் உளவி ‘ [Huygens Probe], சுற்றி வரும் தாய்க்கப்பல் காஸ்ஸினியிலிருந்து பிரியத் தொடங்கும். பிறகு 2005 ஜனவரி 14 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சிமிழ் டிடான் மேக மண்டலத்தில் இறங்கத் துவங்கி, 3 மணி நேரத்திற்குள் முதல் முறையாக டிடான் தரையைத் தொட்டு ஒரு புதிய வரலாறை ஆரம்பிக்கும்!
சனிக்கோளை ஆராயச் சுற்றுவதில் சவாலான சாதனைகள்!
சூரிய குடும்பத்தில் பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடி இரண்டாவது பெரிய கோள் சனிக்கோளே. சனி நமது பூமியைப் போல் 95 மடங்கு பெரியது. தன்னைத் தானே சுற்ற 10.5 மணி நேரமும், பரிதியைச் சுற்றிவர 29.5 ஆண்டுகளும் சனி எடுத்துக் கொள்கிறது. சனிக்கோளின் விட்டம் மத்திய ரேகைப் பகுதியில் 75,000 மைலாக நீண்டும், துருவ அச்சின் பகுதியில் 7000 மைல் சிறுத்து விட்டம் 68,000 மைலாகக் குன்றியும் உள்ளன. சனியைச் சுற்றி வரும் வளையங்களின் எண்ணிக்கை 100,000 என்று அனுமானிக்கப் படுகிறது. அந்த வளையங்களில் விண்கற்களும், தூசிகளும், பனிக்கட்டித் துணுக்குகளும் இடைவெளிகளுடன் வெகு வேகமாய்ச் சுற்றி, சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால், அவைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. வளையங்களின் தடிப்புகள் 10 மைல் முதல் சிறுத்து 50 மைல் வரை பெருத்து வேறு படுகின்றன. சனிக்கோளின் வெளிப்புற வளையத்தின் விட்டம் மட்டும் 169,000 மைல் என்று கணக்கிடப் பட்டுள்ளது! தூரத்திற் கேற்ப வளையங்களின் துணுக்குகள் பல்வேறு வேகங்களில் சனிக்கோளைச் சுற்றி வருவதால்தான், அவை சனியின் ஈர்ப்பு விசையில் இழுக்கப்பட்டு சனித்தளத்தில் மோதி நொறுங்காமல் தப்பிக் கொள்கின்றன!
2004 ஜூலையில் சனிக்கோளின் ஈர்ப்பாற்றலில் இழுக்கப்பட்டு, நீள்வட்டச் சுழல்வீதியில் சுற்றப் போகும் காஸ்ஸினித் தாய்க்கப்பல் கண்காணித்துப் பின்பற்ற வேண்டிய பாதை மிக மிகச் சிக்கலானது! அது சனியைச் சுற்றி வரப் போகும் சுழல்வீதி, அகண்ட சனி வளையங்களின் நகர்ச்சி வரையரைக்குள் செல்லக் கூடாது. வளையங்களின் விண்கற்கள் வேகமாகச் சுற்றி வருவதால், காஸ்ஸினிக் கப்பலின் எந்த பாகமும் வளையங்களில் மாட்டிக் கொண்டால், கருவிகள் பெருஞ் சேதமடைந்து 3.4 பில்லியன் டாலர் விஞ்ஞானச் சிமிழ் எரிந்து நொடிப் பொழுதில் சாம்பலாகி விடும்!
காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் கருவிகள், குறிப்பணிகள்
காஸ்ஸினி சூரிய மண்டல விண்வெளியில் காலிலியோ விண்கப்பல் வியாழனுக்குப் பறந்தது போல VVEJGA [Venus ->Venus ->Earth ->Jupiter Gravity Assist] கோள்களின் துரித ஈர்ப்பு வேகவீச்சு வீதியில் [Gravitational Swingby Orbit] பயணம் செய்து சனிக் கோளை விரைவில் நெருங்கப் போகிறது. போகும் பாதையில் எதிர்ப்படும் விண்கற்களின் [Astroids] தளத்தைக் காஸ்ஸினி கூர்ந்து நோக்கி ஆராயும். 27 விதமான ஆராய்ச்சிகளைக் காஸ்ஸினி செய்யப் போவதாக அறியப்படுகிறது!
காஸ்ஸினியில் வைக்கப்பட்டுள்ள கருவிகள்: ரேடார் உளவி [Radar Mapper], படப்பிடிப்பு ஏற்பாடு [Imaging System], உட்சிவப்பு உளவி ஒளிப்பட்டை மானி [Infrared mapping Spectrameter], அகிலத் தூசி ஆய்வு உளவி [Cosmic Dust Analyser], பிழம்பு ஒளிப்பட்டை மானி [Plasma Spectrameter], காந்த கோள படப்பிடிப்பு உளவி [Magnetospheric Imager], காந்த மானி [Magnetometer], மின்னி/நடுநிலை நிறை ஒளிப்பட்டை மானி [Ion/Neutral Mass Spectrometer], தொலை அளவி, சமிக்கைக் கம்பம் [Telemetry & Antennas]
1. காஸ்ஸினியின் முதற்பணி ஹியூஜென்ஸ் உளவியைச் சுமந்து கொண்டு போய், தாய்க்கப்பல் மட்டும் சனிகோளை நீள்வட்டத்தில் சுற்றி, டிடான் தளத்தில் உளவியை இறக்குவது.
2. சனிக்கோளின் சுழல்வீதியில் சுற்றிக் கொண்டே, சனி மண்டலம், சனியின் வளையங்கள், சனியின் 18 சந்திரன்களை ஆராய்ந்து தகவல்களைப் பூமிக்கு அனுப்புவது.
3. சனிக்கோள் வளையங்களின் ‘மூவடிவு அமைப்பையும், இயக்க முறைகளையும் ‘ [Three Dimensional Structure & Dynamical Behaviour of the Rings] தொகுத்தறிவது.
Titan Satellite
4. துணைகோள் தளங்களின் உள்ளமைப்பையும், தளவியல் வரலாறுகளையும் [Composition of the Satellite Surfaces & Geological History] சேகரிப்பது.
5. காந்த கோளத்தின் மூவடிவு அமைப்பையும், இயக்க முறையையும் [3D Structure & Behaviour of the Mangetosphere] அளந்தறிவது.
6. சனிக்கோளின் மேகச் சூழ்வெளி நகர்ச்சி முறைகளை ஆராய்தல்.
7. டிடான் துணைக்கோளின் மேகம், மந்தாரம் ஆகியவற்றின் கால வேறுபாடை ஆய்வது.
8. டிடான் தளப்பரப்பின் பல்வேறு பிரிவுகளுடைய குணாதிசயங்களை அறிவது.
9. சனிக்கோள் அதன் 18 துணைகோள்கள் ஆகியவற்றின் ஈர்ப்பாற்றல்களைக் கணிப்பது.
10. காஸ்ஸினி ராக்கெட்களுக்கு எரித்திரவம் எஞ்சி யிருந்தால், நீடித்த பயணத் திட்டங்களை மேற்கொள்வது.
1973-1980 ஆண்டுகளின் முந்தைய பயணத்தில் சேகரித்த தகவல்கள்
1973 ஆண்டில் பிளாரிடா கனாவரல் முனையிலிருந்து ஏவப்பட்ட பயனீயர்-11 [Pioneer-11] ஆறாண்டுகள் அண்ட வெளியில் பயணம் செய்து 1979 இல் சனிக்கோளுக்கு 13,000 மைல் அருகே சென்று முதல் படங்களைப் பூமிக்கு அனுப்பியது. இப்போது அதன் மின்கலன்கள் பழுதாகி, பூமியோடு தொடர்பு கொள்ள முடியாது, விண்வெளியில் போய்க் கொண்டே இருக்கிறது!
சனிக்கோளின் அருகே 1980 ஆண்டுகளில் பறந்த இரண்டு வாயேஜர் [Voyager-1 & Voyager-2] விண்கப்பல்கள் செய்த பயணங்களில் கண்டுபிடித்த சிலவற்றை நாம் இங்கு பதிவு செய்வது அவசியம். அவை இதுவரை மனிதர் அறியாத சனியின் ஆறு புதிய சந்திரன்களைக் கண்டு பிடித்தன! விண்கப்பல்கள் சனி வளையங்கள் ஊடே சென்று, அவற்றைப் பற்றிய புதிய தகவல்களை பூமிக்கு அனுப்பியன! சனிக்கோளின் மத்திய ரேகையில் மணிக்கு 1100 வேகத்தில் [1100 mph] அடிக்கும் காற்றுக்களை உணர்ந்து பதிவு செய்தன! தூரக் கோள், அதன் துணைக்கோள்கள் பற்றி விபரம் அளித்த வாயேஜரின் இவ்வரிய புதிய கண்டு பிடிப்புகளே, காஸ்ஸினிப் பயணத் திட்டத்தின் அடிப்படைக்குக் காரணமானது. சிக்கலான ஒரு சிறிய அண்டக்கோளின் ஏற்பாடை ஆழ்ந்து ஆராய்ந்தால், பூமியின் இல்லமான பரிதி அண்டக்கோள்களின் பிரம்மாண்டமான ஏற்பாட்டைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
‘சனிக்கோள் மையத்தில் இருக்க அதைச் சுற்றிவரும் பல துணைக்கோள்கள், விண்குப்பைகள் சுற்றும் புதிரான ஒளி வளையங்கள் ஆகியவற்றை நோக்கினால், அது ஏறக்குறைய ஒரு சிறு சூரிய மண்டலத்தைப் போலவே உள்ளது! 1980 இல் பயணம் செய்த வாயேஜர் விண்வெளிக் கப்பல் அனுப்பிய தகவல்கள், விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்குப் போதாதவை! சனிக்கோள் பல விந்தைகளைக் கொண்டது! மீண்டும் சென்று சனி மண்டலத்தை மேற்கொண்டு கூர்ந்தறிய விரும்புகிறோம் ‘ என்று நாசா விஞ்ஞானி வெஸ்லி ஹன்ட்டிரஸ் கூறுகிறார்.
டிடான் துணைக்கோளை நோக்கி இறங்கும் ஹியூஜென்ஸ் உளவி
சனிக்கோளின் 18 சந்திரன்களில் டிடான் துணைக்கோளே எல்லாவற்றிலும் பெரியது. 3200 மைல் விட்டமுள்ள டிடான் துணைக்கோள் புதனை விடச் சற்று பெரியது! பூமியின் நிலவை [2160 மை விட்டம்] விட மிகவும் பெரியது! மேலும் மீதேன் வாயு [Methane Gas], நைடிரஜன் வாயு மண்டிய அதன் சூழ்வெளி பூமியின் சூழ்வெளியை விட அடர்த்தியானது! 700 பவுண்டு எடையும் 9 அடி விட்டமுள்ள ஹியூஜென்ஸ் உளவி [Hyugens Probe] ஈரோப்பியன் விண்வெளிக் கூட்டகம் தயாரித்து, நாசாவின் காஸ்ஸினியில் இணைக்கப் பட்டது.
இறங்கு சிமிழ், வெப்பக் கவசம், பாராசூட் குடை இறக்கி, சுய இயங்கி ஆய்வகம் [Heat Shield, Descent Module with Parachute Package, Robotic Laboratory] ஆகிய முப்பெரும் சாதனங்களைக் கொண்டது. சனியைச் சுற்றிவரும் தாய்க்கப்பல் காஸ்ஸினி [Mothership Cassini] தள்ளி விட்டதும், டிடான் தளத்தை நோக்கி டிடான் ஈர்ப்பு விசை வேகமாய் இழுக்கும் போது, வெப்பக் கவசத் தட்டு எதிர்த்து வேகத்தைத் தளர்த்துகிறது. 110 மைல் உயரத்தில் உளவி இறங்கும் போது, அதன் பாராசூட் குடை விரிந்து, வெப்பக் கவசம் வீசி எறியப்படுகிறது. 90 மைல் உயரத்தில் பெரிய குடை துண்டிக்கப் பட்டு, சிறிய குடை விரிந்து மிக மெதுவாக உளவி, டிடான் தரையைத் தொடுகிறது.
இறங்கும் போது, சிமிழ் டிடான் துணைக்கோளின் மகத்தான வடிவைப் படமெடுக்கிறது. அத்துடன் டிடான் சூழ்மண்டலத்தின் உஷ்ணம், அழுத்தம், அடர்த்தி, ஆர்கானிக் ரசாயனம் ஆகியவற்றை உளவி அளக்கிறது. ஹியூஜென்ஸ் உளவி ஆய்ந்து அனுப்பும் தகவல்கள் அனைத்தையும் தாய்க்கப்பல் காஸ்ஸினி சேமித்துப் பூமிக்கு அனுப்புகிறது.
விண்வெளி விஞ்ஞானிகள் மர்மமான டிடானில் மீதேன் அல்லது ஒரேதேன் கடல்கள் [Oceans of Methane or Orethane] இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். அவ்விதமே இருக்க வேண்டும் என்று பெளதிக விஞ்ஞானத்தின் வெப்ப இயக்க விதிகள் [The Laws of Thermodynamics] கூறுகின்றன. ஆனால் பூமியில் இருக்கும் ரேடார் அலைக் கருவிகள், அவற்றுக்கு நேராகச் சான்றுகள் அளிக்கவில்லை.
காஸ்ஸினிப் பயண முடிவில் நீடிக்கப்பட விருக்கும் குறிப்பணிகள்
நான்கு ஆண்டுகள் திட்டமிட்ட பணிகளை முடித்த பின், 2008 ஆண்டிலிருந்து காஸ்ஸினியின் நீடிப்புப் பணிகள் ஆரம்பமாகும். ஆயுட் காலம் 200 வருடங்கள் வரை நீடித்து, நிலையான வீதியில் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் சுற்றிவரத் தகுதி பெற்றது! அதற்கு நீடித்த மின்னாற்றல் அளிக்க புளுடோனிய வெப்பமின் ஜனனியில் [Plutonium Thermoelectric Generators], மூல அணுவியல் பொருள் போதிய அளவு இருக்கிறது. ஆனால் வீதியைச் செம்மைப் படுத்தவோ அன்றி திருத்தவோ வேண்டிய ராக்கெட் எரித்திரவம் [Rocket Propellant] எவ்வளவு மீதம் இருக்குமோ, அதுவரைதான் காஸ்ஸினியின் நீடிப்புப் பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது. 1980 இல் ஏவிக் குறிப்பணிகள் நிறைவேறிய பின் வாயேஜர் விண்கப்பல் இன்னும் [2003 ஆகஸ்டு] பரிதி மண்டலத்தைத்தின் விளிம்பில் போய் தகவல்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டுள்ளது!
நீடிப்புப் பணிகளில் காஸ்ஸினி என்ன சாதிக்க முடியும் ? சனியும், சனியின் வளையங்களும் நான்கு வருடங்களுக்குப் பிறகு அடையும் கால மாறுபாடுகளை அறியலாம்! அல்லது சனிக்கோளின் புதிய சந்திரனைக் கண்டு பிடிக்கலாம்! டிடான் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, சனிக்கோளின் ஈர்ப்புப் பிடியிலிருந்து தப்பி, சனியின் வேறு சில துணைக் கோள்களையோ அல்லது வேறு சில புறக் கோள்களையோ ஆராயலாம். அடுத்து ‘காற்றுத் தளர்ச்சி ‘ [Aerobraking or Using a Body ‘s Atmosphere to slow down a Spacecraft] முறையைப் பயன்படுத்தி, காஸ்ஸினி பல ஆண்டுகள் டிடான் சந்திரனை ஆராய்ந்து வர விட்டு விடலாம்! அல்லது சனிக்கோளின் வளையங்களைப் பல்லாண்டுகள் காஸ்ஸினி ஆராய்ந்து புதிய தகவல்களை அனுப்ப முற்படலாம்!
2003 ஜூன் 27 ஆம் தேதி நாசா, ஜெ.பி.எல் [Jet Propulsion Laboratory (JPL)] அறிக்கைப்படி, காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் எவ்வித இன்னல்கள், இடையூறுகள் இல்லாமல், சுமுகமாகச் சனிக்கோளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் காஸ்ஸினி திட்டமிட்டபடி சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்து, மகத்தான புதிய விஞ்ஞானத் தகவல்களை பூமிக்குப் பல்லாண்டுகள் அனுப்பும் என்று நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
தகவல்கள்:
1. Cassini Overview Summary www.floridatoday.com/space/explore/releases/1997b NASA/JPL Release
2. Cassini has safely departed Planet Earth By: Robyn Surino [1997]
3. Cruise: Challenges of Early Cassini Mission [1997] NASA/JPL Release
4. Watch Cassini-Huygens setting off for Saturn & Titan [Oct 1997] NASA/JPL Release
5. Power to Discover: Treasure Hunts fuelled by Plutonium [Sep 1997] By: Todd Halvorson
6. Cassini-Huygens, The Extended Mission [1997] NASA/JPL Release
7. Cassini Information [http://nssdc.gsfc.nasa.gov/planetary/cassini.html]
8. The Saturn Tour [1997] NASA/JPL Release
9. The Huygens Probe Mission [1997] NASA/JPL Release
10.Cassini Update, Cassini Significant Events [June 27, 2003]
11. Cassini-Huygens Operations http://saturn.jpl.nasa.gov/operations/index.cfm NASA/JPL Release
******************
jayabar@bmts.com
- சொல்லாடலும், பிலிம் காட்டுவதும்
- தாய்மைக் கவிதை
- மனிதனாக வாழ்வோம்
- உருவாக்கம்
- அறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)
- சனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
- அழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )
- நாவலும் யதார்த்தமும்
- மனசெல்லாம் நீ!
- தஞ்சைக் கதம்பம்
- வாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12
- சங்கப் பாடம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
- ஆடு புலி ஆட்டம்
- என்று உனக்கு விடுதலை
- நல்லவர்கள் = இஇந்தியர்கள்
- 4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக
- அப்பா
- விடியும்! நாவல் – (9)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது
- ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்
- கடிதங்கள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி
- குறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ
- சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ
- வழியில போற ஓணான…
- சிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்
- சட்ட பூர்வமான வரதட்சணை! வரதட்சணைத் தொகைப் பதிவு! முதலிரவு முன் ஒப்பந்தம்! பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3
- தாயே வணங்குகிறோம்
- ராஜீவின் கனவு
- எந்திர வாழ்க்கை
- சுவைகள் பதினாறு
- செயலிழந்த சுதந்திரம்.