எம் .வி . குமார்
தமிழிலக்கிய வரலாற்றில் சதங்கை முக்கியமான சிற்றிதழ்களின் வரிசையில் அனேகமாக சேர்க்கபடாது என்றுதான் சொல்லவேண்டும் . அது தெளிவான அழகியல் கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை . இலக்கியத்தில் எந்த இடத்தையும் நிரப்பவில்லை . அது எந்த பெரிய விவாதத்தையும் உருவாக்கவும் இல்லை .
ஆனால் அதன் இடம் ஒருவராலும் மறுக்கப்படக்கூடியதல்ல. சதங்கை ஆசிரியரான வனமாலிகைக்கு இதழ் குறித்து ஒரு திட்டம் இருந்தது .பிரபல இதழ்களுக்கு மாற்றாக எழுத முற்படும் முக்கியமான இளம் எழுத்தாளர்களுக்கு அறிமுகக் களமாக தன் இதழ் இருக்கவேண்டும் என அவர் விரூம்பிவந்தார் .அதற்காகவே தன் இதழை விடாப்பிடியாக நடத்தினார்.
சதங்கைக்கு இரு கால கட்டங்கள் உண்டு . எழுபதுகளில் சதங்கை அன்றைய சிற்றிதழ் போக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் இதழாக வெளிவந்தது . கலாப்பிரியா ,வண்ணதாசன், வண்ண நிலவன் , மாலன் , பூமணி போன்ற அக்கால இளம் இலக்கியவாதிகள் பலருக்கும் அது களம் அமைத்து தந்தது . குமரிமாவட்டத்தில் ஒரு எளிய தமிழாசிரியராக இருந்த வனமாலிகை மிகுந்த சிரமந்துக்கிடையே அவ்விதழை ஏறததாழ ஆறுவருடகாலம் நடத்தினார் .
தொண்ணூறுகளில் ஓய்வு பெற்றபின்பு வனமாலிகை சதங்கையை மீண்டும் தொடங்க விரும்பியபோது சிற்றிதழ் சூழல் பெரிதும் மாறிவிட்டதை பலர் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள் . சுபமங்களா வந்த பிறகு சிற்றிதழ்களின் இடமும் பணியும் மாறிவிட்டிருந்தன. ஆனால் அவருக்கு வேறு ஒரு திட்டம் இருந்தது . சிற்றிதழ்ச் சூழலில் பொதுவாக குறைத்து மதிப்பிடப்பட்டிருந்த முற்போக்கு கருத்துக்களை முன்வைக்கும் உத்தேசம் அவருக்கு இருந்தது . சதங்கையின் இரண்டாவது கட்டத்தில் சு சமுத்திரம் , பொன்னீலன், பா செயப்பிரகாசம் ஆகியோர் அதன் ஆசிரியர் குழுவில் பங்கு பெற்றனர் .
ஆனால் சதங்கை ஒரு இறுக்கமான இதழாக இருக்க வில்லை .அதன் முதல் கட்டத்தில் சாது சாஸ்திரி என்றபேரில் கிருஷ்ணன் நம்பியும் , பல புனைபெயர்களில் ஜி. நாகராஜனும் எழுதியுள்ளனர் .இரண்டாம் கட்டத்தில் ஜெயமோகன் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார் . அதற்கு வனமாலிகை பலதரப்பட்ட எழுத்தாளர்களுடன் கொண்டிருந்த நேரடியானநட்பும் தொடர்பும் தான் காரணம்.புது எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் பணியை சதங்கை இறுதிவரை தொடர்ந்தது .இப்போது கவனிக்கப்பட்டு வரும் காஞ்சனா தாமோதரன் உள்ளிட்ட பலர் அதில் எழுதியுள்ளனர் .
இதயநோயாலும் கடுமையான கல்லீரல் பாதிப்பாலும் அவதிப்பட்ட வனமாலிகை கடந்த தன் எழுபது வயதில் 2 – 7-2002 அன்று தன் இல்லத்தில் மரணமடைந்தார் . அவரது மரணத்துக்கு பின்பு பொன்னீலன் சதங்கையை ஏற்று நடத்தவிருப்பதாக சொல்லப்படுகிறது.
உடல்நலமில்லாத நிலையிலும் கடுமையான சிரமங்களுக்கு இடையே சதங்கையை வனமாலிகை நடத்துவதில் அவரது குடும்பத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது . அவர் மரணச்செய்தி அவரது குடும்பத்தாரால் செய்தித்தாள்களுக்கு தரப்பட்ட போதுகூட அவர் சிற்றிதழாளர் என்ற செய்தி தவிர்க்கப்பட்டு அவர் ஒரு ஆசிரியர் என்ற விஷயமே முன்னிலைபடுத்தப்பட்டது தமிழ் சமூகத்தில் ஒரு சிற்றிதழாளனின் இடமென்ன என்பதை காட்டுகிறது .
***
- துணையை தேடி
- சுவாசம்
- நிதான விதைகள்..
- திண்ணை அட்டவணை
- பயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- ஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)
- கோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை
- வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்
- நிம்மதி
- மிடில் க்ளாஸ்
- முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்
- கறை
- ‘உயிர்க் கவிதை ‘
- என் கிராமத்துக்-குடிசைப்பேத்தி!
- எல்லைகளின் எல்லையில்
- இந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்
- அரசியல்
- தயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- கூறாமல்