கோவா முறை பன்றிக்கறி விண்டலூ

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue


தேவையான பொருட்கள்

காரம் விரும்புபவர்கள், கூட கொஞ்சம் மிளகாய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

2 தேக்கரண்டி முழு ஜீரகங்கள்

2 அல்லது 3 காய்ந்த சிவப்பு மிளகாய்கள்

1 தேக்கரண்டி கறுப்பு மிளகுகள்

1 தேக்கரண்டி ஏலக்காய் விதைகள்

1 மூன்று அங்குல பட்டை குச்சி

1 1/2 தேக்கரண்டி முழுக் கறுப்பு கடுகு விதைகள்

1 தேக்கரண்டி சோம்பு விதைகள்

5 மேஜைக்கரண்டி வெள்ளை ஒயின் வினிகர்

சுமார் 2 தேக்கரண்டி உப்பு (ருசிக்கு தகுந்தாற்போல)

1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை

1 கோப்பை எண்ணெய்

2 நடுத்தர வெங்காயங்கள், உரித்து, தூளாக நறுக்கியது

1 கோப்பை தண்ணீர்

1 கிலோ பன்றிக்கறி, கொழுப்பு எடுத்து, சிறிய துண்டுகளாக வெட்டியது

1 அங்லம் புதிய இஞ்சி, தூளாக வெட்டியது

முழு பூண்டு உரித்து பற்களாக உதிர்த்துக்கொண்டது

1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்

1 தேக்கரண்டி மஞ்சள்

பாசுமதி அல்லது ஜீரக சம்பா அரிசி வேகவைத்தது

செய்முறை

ஜீரகம், சிவப்பு மிளகாய், மிளகு, கடுகு, ஏலக்காய், பட்டை, சோம்பு அனைத்தையும் மிக்ஸியில் தூளாக ஆக்கி, ஒரு சின்ன பாத்திரத்தில் கொட்டவும். இத்தோடு வினிகர், உப்பு, பழுப்பு சர்க்கரை சேர்த்து தனியே வைக்கவும்

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நடுத்தர தீயில் சூடு செய்யவும். இதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பழுப்பு நிறமாக ஆகும் வரை வதக்கி, இந்த வெங்காயத்தை எண்ணெயிலிருந்து எடுத்து, ஒரு காகிதத்தில் வைக்கவும்.

வதக்கிய வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு, 2 அல்லது 3 மேஜைக்கரண்டி தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். இந்த விழுதை வினிகரோடு வைத்திருக்கும் காரக்கலவையில் சேர்க்கவும்.

இந்த மிக்ஸியை கழுவிவிட்டு, இதில் இஞ்சி, பூண்டு, இன்னும் 2 அல்ல்து 3 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

வெங்காயம் வறுத்த எண்ணெயை மீண்டும் சூடாக்கி, இதில் பன்றிக்கறி துண்டங்களை கொஞ்சம் போட்டு, எல்லா பக்கங்களும் பழுப்பாகும் வரை வதக்கவும். இவைகளை எடுத்து தனியே வைத்துவிட்டு அடுத்தது இன்னும் கொஞ்சம் பன்றிக்கறி துண்டங்களை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும். இவ்வாறே எல்லா பன்றிக்கறி துண்டங்களையும் பழுப்பாக வறுத்து வைக்கவும்.

இப்போது, இஞ்சிப் பூண்டு விழுதை அதே பாத்திரத்தில் சேர்த்து, தீயை குறைக்கவும். இத்துடன் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும். இன்னும் சிறிது நேரம் வறுத்துவிட்டு, இதில் பன்றிக்கறி துண்டங்களையும் அதிலிருந்து வந்திருக்கும் சாற்றையும் சேர்த்து பாத்திரத்தில் கொட்டி வதக்கவும். இதில் விண்டலூ விழுதாக பக்கத்தில் இருக்கும் காரக்கலவையையும் சேர்க்கவும். ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி கொதிநிலை வரும்வரை கொதிக்க வைத்து, பின்னர் மெதுவான தீயில் 1 மணி நேரம் வைக்கவும் அல்லது பன்றிக்கறி மிருதுவாக ஆகும் வரை. அவ்வப்போது கிளறி விடவும். இதனை பாசுமதி சாதத்தோடோ அல்லது ஜீரக சம்பா சாதத்துடனோ பரிமாறலாம்.

இது நான்கு அல்லது 6 பேருக்கு போதுமானது.

Series Navigation