கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

வினோத்


ஊரில்லுள்ள அத்துனை தகவல் தொடர்பு தளங்களும் ஒரு கணக்குச் சொல்ல, ஜெயா டிவியில் உட்கார்ந்து கொண்டு ரபி பெர்னார்ட் இரு ஜோக்கர்களுடன், “தற்போது வந்துள்ள தகவலின் படி அதிமுக பல தொகுதிகளிலும் முண்ணணியில் இருக்கிறது ….” என்று சொல்லிக் கொண்டிருந்தார் – மூஞ்சியை சிரியஸாக வைத்தவாறே……
ஜெயலலிதா இவரை போன்றவரை தூர தூர விரட்டாவிட்டால் எத்தனை தேர்தல் வந்தாலும் ஜெயிப்பது கடினம்.

சன் டிவி நியூஸ்ஸில் கலந்துரையாடல் நாகரீகமாக அற்புதமாக இருந்தது. “இலவச அறிவிப்பு சரியான ஒரு முன்னுதாரணமா…?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது ஆச்சரியமான ஒன்று.
கலாநிதி தயாநிதி மாறன்கள் ஏன் தொழிலில் வெற்றி பெற்றார்கள் என்பதை இது தெளிவுபடுத்தியது. வாழ்த்துக்கள்.

வெற்றியில் நூறு ஓட்டுக்கும் ஒரு லட்சத்திற்கும் வித்தியாசம் கிடையாது. வெற்றிதான் கணக்கு. அது படி, பல தொகுதிகளில் நூறு ஐந்நூறு என்றே வெற்றி வித்தியாசம் இருந்தாலும்

காங், கம்யூ, பாமக என பல பெருந்தலைகளுடன் தேர்தலைச் சந்தித்தாலும் திமுக முக்கி முனகித் தான் ஆட்சியைப் பிடித்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை முதலில் சற்று அதிக தொகுதிகளில் திமுக ஜெயிக்கவே ஏதுவாக இருந்தது. ஆனால் கருணாநிதியின் தொடர் இலவச அறிவிப்பு படித்த மேல்தட்டு மக்களை அதிகமாக வாக்குச் சாவடிக்கு அழைத்தது…. ஆனால் அவர்கள் இந்தக் கூற்றின்மேல் இருந்த வெறுப்பால் இரட்டை இலைக்கு வாக்குகளைத் தள்ளி விட்டார்கள்.

சங்கராச்சாரியார் விஷயத்தால் பிறாமணாள் அதிமுகவிற்கு ஆப்பு அடிப்பார்கள் எனும் எண்ணத்திற்கு சிரிக்க சிரிக்க மயிலாப்பூரில் ஆப்பு வைத்தார்கள்.

இனமானப் பேராசிரியர் முக்கி முண்டி 450 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கோட்டையில் ஜெயித்து வந்தார்.
நாளைய திமுக முதல்வர் ஸ்டாலின் வெறும் 2000 வாக்கு வித்தியாசத்தில் தான் ஜெயிக்கிறார்.
கருணாநிதி கொண்டாடிய திருவெல்லிக்கேணி நாகநாதனுக்கு டாட்டா…

சைதை, தி.நகரில் கூட திமுக கூட்டணி வரமுடியாதது கொஞ்சமும் எதிர்பாராததே…

திமுக கோட்டை புட்டுக்கினு போகும் படி ஒட்டளித்தாலும், கவனமாக ஆலந்தூரில் மந்திரியாக இருந்த வளர்மதியை (அதிமுக ) கவனமாக மக்கள் தோற்கடித்தார்கள்.

தமிழக மக்கள் அற்புத தீர்ப்பு இது. இது ஒரு ஆரம்பம். இனி துதிபாடி ஒருகட்சி ஆட்சிக்குத் தமிழகத்தில் தடா…
அதே சமயம் ஒன்று தெளிவாகத் தெரிகிறது… அத்துனைக் கட்சிகள் சேர்ந்த்தாலும் அதிமுகவை விட ஆயிரம் ஓட்டுக்கள் தான் அதிகம் பெற முடிகிறது.
அதே சமயம் தனக்கு ஆசை ஆசையாய் ஓட்டுப் போட வரும் பலரை தூர விரட்டியடிக்கும் அளவிற்கு ஜெயலலிதாவின் அலட்சிய பழகுதல் தன்மையுள்ளது.

ஆழ்ந்து பார்த்தால் திமுக மேல் பயம் கொண்டுள்ள தமிழக மக்கள் ஜெயலலிதாவின் ஏதேச்சிகாரத்தினால் தந்துள்ள ஒரு இரண்டும் கெட்டான் நிலைப்பாடே இது.

அதனால் , தன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்காக ஜெ ஒரு சீரிய எதிர்கட்சியாக செயல்பட வேண்டும்.

இதில் தமிழக மகா ஜோக்கராய் தென்படுபவர், தமிழக காங்கிரஸ் தலைவர்….
“இது மாபெரும் வெற்றி….. மிகப் பிரமாண்டா வெற்றி… என்பதாய்….” எப்படி…. சுதந்திர அடைந்தகாலத்திலிருந்து காங்கிரஸ் வென்ற தொகுதிகளை தொலைத்து தோற்று விட்டு… அதுவும் திமுக நிழலில் ஒளிந்து கொண்டு….
அவரது கட்சி பெரிசு தொண்டாமுத்தூரில் ஜெயித்தாரா என்றே தெரிய இரவாச்சு ( எஸ்.ஆர்.பி. புட்டுக்கினாரு… எல்லாம் behavior தந்த முடிவு…. )
இந்த லட்சணத்தில் ஜெயலலிதாவைக் கிண்டல் செய்து பேட்டி…

காங்கிரஸ் அழிவுப்பாதையில் அழுத்தமாக தன் முதல் காலடியை எடுத்து வைத்துள்ளது.
உடனடியாக சுதாரித்தல் நன்று……

அதே சமயம்… மதுரையில் பிறந்து.. சென்னையில் வாழும் விஜயகாந்த் தன்னை வேரறுக்கத் துடிக்கும் பாமக கோட்டையில் உள்ளே சென்று ராம்தாஸ் நண்பரையே தோல்வி பெற செய்துள்ளார்.
அரசியல் வரலாற்றில் , கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குப் பின் தேர்தல் களத்தில் இவர்தான் இப்படியொரு வெற்றி பெற்றவர்.

இவர் கட்சியின் பல தொகுதி மூன்றாவது நிலை காங்கிரஸிற்கு ஒரு அபாய அறிவிப்பு. நாளை திமுக அதிமுக கூட்டணிக்கு முதலில் இவரிடம் தான் தூது விடும். காங்கிரஸ் இனி ஒரு கடந்தகால சமாச்சாரம் ஆகிவிடும் சுதாரிக்காவிட்டால்.

இனியாவது சோனியாகாந்தியிடமிருந்து தமிழக காங்கிரஸ் விட்டு விடுதலையாக வேண்டும்.

ஊரே ஒருமுறை ஜெயலலிதாவிற்கு எதிராய் இருந்த போது ஊடே புகுந்து சந்தில் சிந்துபாடி தன்னை ஒரு சக்தியாய் காட்டி கொண்ட ரஜினிகாந்து இனி கை சொடக்கி பேச வெட்கப்படனும். ரஜினி தினமும் ஒரு முறை விஜயகாந்த் புகைப்படத்தில் கண்விழித்து தைரியம் வரவழைத்துக் கொள்ளலாம்…..
அரசியலுக்கு வராவிட்டாலும் இரவில் பாத்ரூமிற்கு போகவாவது உதவும்.

சிங்கத்தின் குகையில் சென்று அதன் அடங்காத அதன் பிடரியை பிடித்து ஆட்டி, அதன் தாடையில் சும்மா நச்சுன்னு ஒரு குத்து விட்ட விஜயகாந்திற்கு வாழ்த்துக்கள்.
————–
வினோத்

vinod_29_2004@yahoo.com

Series Navigation

வினோத்

வினோத்