கோமதி நடராஜன்
[1984 செப்டம்பாில், லயன்னஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட்,வெளியிட்ட, ‘ சஞ்சனா ‘ மாத இதழில் வெளியான கட்டுரை]
இந்த ஆண்டு நம் சுதந்திர இந்தியாவுக்கு வயது முப்பத்தியேழு பூர்த்தியாகி விட்டது.தொழில் வாணிபம்,கலை விஞ்ஞான வளர்ச்சிஎன்று நம்நாட்டுமுன்னேற்றத்துக்குத் தேவையான,அனைத்து அம்சங்களிலும்,வயதுக்குத் தகுந்த வளர்ச்சியைக் காட்டி,உலகோரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் முன்னேறியிருக்கிறது.இருந்தாலும்,சமுதாயத்தில் ஆழமாக வேறூன்றி விட்ட மொழி வெறி இனவெறி, போதைமருந்து வரதட்சணை போன்ற சீர்கேடுகள்,எனைய நாடுகளுக்கு மத்தியில்,இந்தியத்தாயைத் தலை நிமிரவிடாமல்,கூனிக் குறுகி நிற்க வைக்கின்றன.
பல துறைகளில்,வெற்றிப் பாதையில் பீடுநடை போடும் நம் நாடு,சமுதாயத்தின் முன்னேற்றம் என்ற பாதையில்,ஒருசில மைல்கற்களைத்தான் கடந்திருக்கிறது. சமுதாயத்தின் முன்னேற்றத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டையாக,இருக்கும் விஷயங்களில்,கொடுமையானதாகவும்,பெண் இனத்துக்குக் கேடு தரக்கூடியதாகவுமமைந்திருப்பது,வரதட்சணையென்ற,அநாகாிகமான சம்பிரதாயம்.
வரதட்சணை,வசதி படைத்தவர்களுக்குக் கெளரவப் பிரச்சனை,வசதிஅற்றவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சனை,பாதிக்கப் பட்டப் பெண்ணுக்கோ,வாழ்க்கைப் பிரச்சனை.
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார் என்று மகாகவி கும்மி கொட்டினார்.இன்றோ,வரதட்சணை இன்றிப் பெண்ணை ஏற்பது இகழ்ச்சி என்று எண்ணுபவர்கள் பெருகிவிட்டார்.வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்று கரை புரண்ட மகிழ்ச்சியில் கூத்தாடினார்.இன்றோ,கேட்ட பணம் வரவில்லையென்றால் வீட்டுக்குள்ளே,பெண்ணை பூட்டிவைப்போம்,என்பவர் தலையெடுத்திருக்கின்றனர்.
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின ,நன்மை கண்டோம் என்று கும்மியடி,என்றவர்,இன்று வரதட்சணை என்னும் அரக்கனின் பிடியில் சமுதாயம் திணறுவதைக் கண்டால்,நெஞ்சு பொறுக்குதில்லையே என்றும் கண்ணீர் விடுவார்.
கல்விக் கடலில் ஒாிரு அலைகளை மட்டுமே கண்டு மகிழ்ந்த என் ஏட்டறிவுக்குப் பண்டைக் காலங்களில்,வரதட்சணை என்பது ஒரு சமுதாயச் சீர்கேடாக உருவெடுத்ததாக இதுவரைத் தட்டுப் பட்டதில்லை. ‘கடுகைத் துழைத்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத்த் தறித்த குறள் ‘என்று புகழப்படும் திருக்குறளில் கூட இதற்கென ஒரு அதிகாரம் இல்லையே ?பாரதியும் ,பெண்கல்வி,பெண் சுதந்திரம்,சாதிச் சண்டை சமயச் சண்டை என்ற ாீதியில்தான் பாடினாரே அன்றி,வரதட்சணை என்ற சமுதாயச் சீர்கேட்டைப் பற்றி ஒருவாி கூட எழுதவில்லையே!
அவர் காலத்தில் இக்கொடுமை இல்லையா ?இருந்திருந்தால் அவர் கவனத்தில் தட்டுப் பட்டு,உள்ளத்தில் வேலனெப் பாய்ந்து,குருதி சொட்டச் செய்திருக்காதோ!சிந்திய அந்த ரத்தத் துளிகளாலேயே,நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்று வெடிக்த் தலை குனிந்திருப்பாரே!
இதையெல்லாம் கூர்ந்து நோக்கும் பொழுது,இந்த நச்சுப் பாம்பு,ஆங்கிலேயன் நம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே உள்ளெ நுழைந்திருக்க வேண்டும்.அடிமை நாடாக இந்தியா இருந்த போது,முப்பது கோடி மக்களின் மூச்சும்,சுதந்திரம் சுதந்திரம் என்றே முழங்கியிருக்கின்றன.சுதந்திர தாகம் தீர்ந்த பின்னர்,அசட்டையாக இருந்ததின் விளைவு,வேண்
சம்பிரதாயங்கள்,சமூக மேம்பாட்டுக்கு முட்டுக் கட்டையாக விழுந்து கிடக்கின்றன.
எப்படி உருவெடுத்திருந்தாலும்,எப்படி வளர்ந்திருந்தாலும்,இது அழிக்கப்பட வேண்டிய கொடிய அரக்கன்.புரையோடிப் போன புண்.இதை இன்னும் வளர விட்டால்,சமுதாயத்துக்கு மேன்மேலும் கேடு வந்து சேரும்.அந்த நாளில் பெண்ணுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளான,பால்யவிவாஹம்,உடன் கட்டை ஏறுதல் போன்றவை அறவே ஒழிக்கப் பட்டிருக்க வில்லையா ?பெண்கல்வி பெண் சுதந்திரம் ஓரளவே இருந்து வந்த நிலையிலேயே,இவை சாத்தியமானால்,நாகாீகமும் முற்போக்குச் சிந்தனையும் மேம்பட்ட இந்நாளில் வரதட்சணையை ஒழிப்பது சிரமமான காாியமா என்ன ?
எந்த ஒரு பிரச்சனைக்கும்,முடிவு காணும் பொழுது, பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வியிலேயே பல நல்ல முடிவுகள் வெளிவரத் தாமதமாகி விடுகின்றன.முதலில் பையனின் படிப்பு,வேலை இவைகளின் தரத்துக்குத் தக்கவாறு வரதட்சணை கேட்கும் பெற்றோரை மாற்றவா ?கடனோ உடனோ பட்டுப் பெண்ணைத் தள்ளிவிட்டால் போதும் என்று துடிக்கும் அப்பாவிகளைத் தட்டிக் கேட்கவா ?பெற்றோர் கிழித்தக் கோட்டை,இந்த விஷயத்தில் மட்டும் தாண்டாத மணமகனை இடித்துரைக்கவா,மூன்று முடிச்சு விழுந்தால் போதும் ,என்று பலி ஆடாகக் கழுத்தை நீட்டும் மணமகளைக் கேட்கவா ?அல்லது,வரதட்சணையின்றிக் கல்யாணம் என்று கேள்விப் பட்டதும்,மூக்கில் விரலை வைத்து,மேற்கே உதய சூாியனைக் கண்டாற்போல், ‘பையனுக்கு ஏதேனும் குறை இருக்க வேண்டும் ‘என்று முடிவெடுக்கும் ,சமுதாயத்தின் ஒரு அங்கமான,சுற்றத்தாரை ஒடுக்கவா ?
இவர்களில் யார் முதலில் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.இது அனைவரும் ஒன்று கூடி,ஒருமனதாக முடிவெடுத்துச் செயல்பட வேண்டிய ஒரு கூட்டு முயற்சியாகும்.இம்முயற்சி,உடலில் ஓடும் கெட்ட ரத்தத்தை மாற்றிப் புது ரத்தம் செலுத்துவதற்கு ஒப்பாகும்.
சிலர் கேட்கலாம், ‘சுமுகமாகப் பிரச்சனை தீரும் என்றால்,வரதட்சணை கொடுக்கல் வாங்கலில் தவறு இல்லையே ‘என்று,இந்தப் பாம்பு கடிக்காது என்று யாராவது சொன்னால்,உடனே மடியில் ஊர்ந்து செல்ல அனுமதிப்போமா ?சிரமமின்றி வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற் மனப் போக்கு மாறவேண்டும்.வரதட்சணை கொடுக்கல் வாங்கல் உள்ள திருமணவைபவத்தில் கலந்து கொள்வதைத் தவிக்க வேண்டும்,இளைய சமுதாயத்தினர்,வரதட்சணையின் சுவடு கூட இல்லாமல் ஒழித்துக் கட்டுவோம் என்று சூளுரைக்க வேண்டும்.
இந்தப் பிரச்சையை ஒழிக்க எண்ணும் மக்களின் மனப்போக்கைப் பார்க்கலாம்.இரண்டுக்கு மேல் பெண்ணைப் பெற்றவர்,முப்பது வயதாகியும் திருமணமாகாத பெண்கள்,எதையாவது எதிர்க்கவேண்டும் என்று துடிக்கும் இளரத்தம்,சமூக சேவை என்று பொழுதுபோக்கிற்காக அணிகும் ஒரு குழுவினர்,உண்மையாகவே மன்ம் நொந்து ,பிரச்சனையைக் களையப் பாடுபடும் ஒரு கூட்டம்.இவர்களில் முதலிரண்டு பேரும் பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்கள்,அவர்களுக்குப் போராடத் தெம்பிருக்காது.மேடை ஏறி முழங்கி விட்டுக் கொள்கையையும் குறிக்கோளையும் கூட்டத்தில் சிதற விட்டுவிட்டு,இறங்குபவர்களால் பயனில்லை.முழுமூச்சாக,வாழ்க்கையின் குறிக்கோளாக ஏற்றுப் பாடுபடுபவர்களால் மட்டுமே,நிலைமை சீர் அடையும்.
தற்காலத்தில்,வரதட்சணையென்ற சொல்லுக்கு மறுவடிவம் ஒன்று உருவாகியிருக்கிறது.திருமணத் தரகர்களிடம் மாப்பிள்ளை வீட்டாாின் எதிர்பார்ப்பு என்னவென்று கேட்டால்,பெண் வேலை பார்க்க வேண்டும்,எம்.பி.ஏ.,எம்.சி.ஏ,என்று திருக்க வேண்டும்.இது கண்ணுக்குத் தொியாத வரதட்சணை.வேலை கிடக்காமல் பல குடும்பத்தலைவர்களே, திண்டாடும் பொழுது,25 வயதுக்குள் எத்தனை பெண்களுக்கு வேலை கிடைத்துவிடும் ?நாகாிக மோகம்,தேவையோ இல்லையோ அனைத்து பொருட்களையும் இல்லத்தில் இருக்க வேண்டும்.ஒற்றை வருமானத்தில் இது சாத்தியமில்லை.எனவே,வருபவள்,வைரோத்தோடு மாட்டி வந்தால் மட்டும் போதாது,வருமானத்தோடும் வரவேண்டும். பையனுக்கு முதுகெலும்பு இல்லை என்று இவர்களே ஊருக்குப் பறை சாற்றிக் கொண்டிருப்பர்.இதுவும் ஒரு வரதட்சணை கொடுமைதானே ?
இந்தப் பிரச்சனையை, யார் எப்படி அணுகினாலும்,குறிக்கோளும் அணுகுமுறையும்,அதன் முடிவும் நல்லதாக அமையும் பட்சத்தில் அனைவரையும் பாராட்டுவோம்.வெற்றி பெற வாழ்த்துவோம்.சமுதாயம், சீரான பாதையில், சிரமம் இன்றி நடை போடத், தடையாக இருக்கும் கற்களையும் முட்களையும் அகற்றுவோம்.இருளில் மூழ்கும் சமுதாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவர விளக்கேற்றுவோம்.
***
ngomathi@rediffmail.com
***
- ஆதங்கம்..
- சகடையோகம்
- திருமாவளவன் கவிதைகள்
- சென்னை நாடக சந்திப்பு
- A Collections of Two Short Stories of Eelam Tamil Writers
- ‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)
- வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)
- தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……
- மெக்சிகோ பாணி கோழி டாக்கோ
- அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)
- விண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- விழி, மொழி, பழி
- எதிர்பார்ப்பு
- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )
- காவிரீ!
- கடல் பற்றிய நான்கு கவிதைகள்
- நீ.. நான்… அவன்…
- நானும், தாத்தாவும் வேப்பமரமும்.
- பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்
- சின்னப் பயல்கள்
- சென்னை நாடக சந்திப்பு
- கொடுப்பதும் கொள்வதும் கொடுமை
- மன்னியுங்கள், ஞாநி
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- கனடாவில் வீடு