கொடியது வறுமை..

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

புஷ்பா கிறிஸ்ரி


பச்சை குத்திய உடலுடன்

பச்சைக் குளிரின் நடுக்கத்தில்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி

பிள்ளை முகத்துடன் அவன்

கையை நீட்டினான் பிறரிடம்

கையை விரித்து இல்லையென்று

சைகை காட்டி நடந்தனர்

விசையாக நடந்த மனிதர்கள்..

அங்கே வந்தாள் ஒருத்தி

இங்கே நீட்டினான் அவன் கையை

கையிலே தந்தாள் ஒரு டொலரை

பையிலே கைவிட்டு அவள்தானே

காப்பிக் கடை தேடி

காப்பி வாங்க நடந்தான் அவன்

அவளும் அதே கடைக்கு வந்தாள்

அவன் பணத்தை வாங்கியவன்..

மீதிப்பணத்தைத் தந்து விட்டு….

மீதமாய்க் காப்பியை வாங்கிக்

கொள்ளாமல் சென்று குடித்திடென்று…

கொல்லாமல் சொல்லால் கொன்றான்.

ஏமாற்றத்துடன் நடந்தான் ஏழை

ஏனிந்த வாழ்க்கை என்றெண்ணியே

வீம்புடன் நிமிர்ந்து நின்று

விழுமியமற்ற கடைக்காரன் தானும்

வேகமாய் வியாபாரம் செய்தான்

வேண்டியவர் தேவை தீர்த்தே

அன்பான பெண்ணவள் அடுத்து

அன்புடன் வாங்கினாள் காப்பிகள் இரண்டை

ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டே

ஒன்றைத் தந்தாள் ஏழையிடம்

கைகள் கூப்பி நன்றியுடன்

கைநழுவாமல் வாங்கினான் காப்பியை

அவள் அப்பால் நடந்த போது

அவன் கண்கள் பனித்தன

குளிரில் நடுங்கிய தேகம்

பனியின் கொடுமையின் தாகம்

இனியும் தாங்காத பாவம்

இல்லையென்னாத பாசம்..

கொடியது வறுமை கொடியது

கொடியது பனியின் வறுமை

கொடியது குளிரும் கொடியது

கொடியது வறுமைக் குளிர்

கொடிதினும் மிகக் கொடியது

***
புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி