கூடங்குளம் செர்னோபில் ஆகுமா ? – செர்னோபில் விபத்தும் விளைவும்.

This entry is part [part not set] of 8 in the series 20001217_Issue

மஞ்சுளா நவநீதன்


ஏப்ரல் 26வருடம் 1986.

சோவியத் யூனியன் இன்னமும் உடையவில்லை.

செர்னோபில் நகரில் அணு உலை எண் 4-ல் ஒரு வெடிப்பு. ஒரு நெருப்பு. 31 பேர் உடனே கொல்லப் பட்டனர்.

டிசம்பர் 1983-ல் துவக்கப் பட்ட மொத்தம் 865 நாட்கள் பணியாற்றியது. இந்த 865 நாட்களில் 715 நாட்கள் மட்டுமே முறையாக அது மின்சாரம் உற்பத்தி செய்தது. விபத்து அணு உலையின் கட்டமைப்பில் உள்ள குறையினால் ஏற்பட்டதல்ல என்று சொல்லப் பட்டது. அணுக் கதிர்களுக்கான பாதுகாப்பு வளையத்தினை மீறிய இந்தக் கசிவு தூசியும், புகையும் வெளிப்படுத்தியது. 41 வருடங்களுக்கு முன்பு ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைக்காட்டிலும் 100 மடங்கு வலுவான கதிரியக்கம் இது. இந்த அணுக் கதிரியக்கம் உக்ரேன் மட்டுமல்லாமல், பெலாருஸ், போலந்து, பால்டிக் கடலுக்கும் பரவியது.

இந்த கதிரியக்கத்தினால் எவ்வளவு பேர் இறந்தனர் என்று தெளிவான கணக்கீடுகள் இன்னமும் நடக்க வில்லை. சில ஆயிரம் பேர்கள் தான் இறந்தனர் என்று உக்ரேன் சொல்கிறது. பசுமை-அமைதிக் கட்சி (Greenpeace) கணக்குப் படி லட்சக் கணக்கான பேர்கள் இறந்துள்ளனர். கிட்டத் தட்ட 50 லட்சம் பேர் எதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த வாரம் அணு உலை எண் 3-ஐ நிரந்தரமாய் மூடுகிறது உக்ரேன் அரசு.

செர்னோபில் பகுதியில் இருக்கிற குழந்தைகளிடையில் தைராய்ட் கான்ஸர் மிக திகமான அளவில் காணப் படுகிறது – சாதாரணப் பகுதிகளைக் காட்டிலும் 80 மடங்கு அதிகம். 1986-லிருந்து ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது இரு மடங்காகி விட்டது. 10000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ரத்தப் புற்றுனோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

எய்ட்ஸ் எண்ணிக்கையும் உக்ரேனில் மிக அதிகமாய் உள்ளது. 35,500 பேர் பாதிக்கப் பட்டவர்கள் என்று அரசாங்கம் கூறினாலும், பத்து மடங்கு அதிகமாய் இந்த எண்ணிக்கை இருக்கும் என்று சொல்கிறார்கள். 1992-ல் 5 கோடி இருபது லட்சம் இருந்த மக்கள் தொகை 1999-ல் 5 கோடியாகி விட்டது. மற்ற வியாதிகளும் பரவி வருகின்றன. நேரடியாக இந்த நோய்களுக்கு செர்னோபில் விபத்து காரணமில்லை என்றாலும் , மக்களின் இயல்பான நோய்த்தடுப்புணர்வை கதிரியக்கம் கணிசமாய்க் குறைத்து விட்டது என்று மருத்துஅவர்கள் நம்புகின்றனர். உக்ரேனின்ல் சராசரி இறப்பு வயது (Life expectancy ) 55-க்கு வந்து விட்டது.

விபத்து நடந்தவுடன் செர்னோபிலைச் சுற்றி 2000 சதுர மைல்கள் ‘விலக்கப் பட்ட பகுதி ‘ என்று அறிவிக்கப் பட்டு மக்கள் வாழத்தகுதியில்லாத இடமாய் அடையாளம் காட்டப் பட்டு , மக்கள் வெளியேற்றப் பட்டனர். ஆனால், இந்தப் பகுதிக்கு வெளியே – செர்னோபிலிலிருந்து கிட்டத் தட்ட 100 மைல்கள் தாண்டியும் இதன் குரூரம் குறையவில்லை. அணுக்கதிர் அளவு சாதாரணமாக 13-14 அளவில் இருக்கும் ஆனால், 100 மைல்கள் தாண்டியும் பல பகுதிகளில் 40 அள்வுல் உள்ளது. சில இடங்களில் 400க்கும் மேல் கூடப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

செர்னோபிலில் விபத்து நடந்த சில நாட்களிலேயே 350,000 துப்புரவுத் தொழிலாளர்கள் இந்த வெடி விபத்தினைச் சுத்தம் செய்யத் தருவிக்கப் பட்டனர். அவர்களில் 40,000 பேர் இறந்து வீட்டனர். அவர்களின் சராசரி வயது 30லிருந்த்ய் 40-க்குள் தான். 30கிலோமீட்டர் விஸ்தீரணத்தைத் தாண்டி கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்கள் பகுதி ‘சிறு அளவு கதிரியக்கப் பகுதி ‘ என்று சொல்லப் பட்டாலும் அவரக்ளும் வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கதிரியக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்ப் பரப்பிலும் பரவி வருகிறது. இதனால் பின் விளைவுகள் இருக்கும் என்று தெரிகிறது.ஐரோப்பாவில் மக்கள் தொகைக் குறைவு நிகழ்ந்த இரு நாடுகள் பெலோருஸ்-ம், உக்ரேனும் தான்.

கூடங்குளத்தில் ரஷ்ய தொழில் நுட்பத்துடன் அணு உலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எதிர்காலம் ?

மனிதகுலம் அடுத்த நூற்றாண்டு அடுத்த ஆயிரமாண்டு வளமையுடன் வாழ வேண்டும் என்று ஆர்வப்படும், ஆசைப்படும் மனிதர்கள், ஆபத்தில்லாத மின்சார உற்பத்தி, ஆபத்தில்லாத சக்தி உற்பத்திக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அணுசக்தி உற்பத்தி, கரி, பெட்ரோல் மூலம் மின்சார உற்பத்தி போன்றவைகள் உலகத்தை வெகுகாலம் நாசம் செய்யக்கூடியவை. மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய, தன்னிறைவு கொண்ட மின்சார உற்பத்தி வழிகள் ஏராளம் இருக்கின்றன.

இவைகளில் முக்கியமானது ஆற்று நீரைத் தேக்கி அணைகள் கட்டி அதன் மூலம் மின்சார உற்பத்தி செய்வது. இரண்டாவது சூரிய சக்தியை உபயோகப்படுத்தி அதன் மூலம் மின்சார உற்பத்தி செய்வது. மக்களுக்கு உதவுகிறேன் என்று சிலர் அணைகளை பலர் எதிர்க்கிறார்கள். இதில் மேதா பட்கர் போன்றவர்கள் புகழ் பெற்றவர்கள்.

கரிப்பொருள் மூலம் மின்சார உற்பத்தி செய்வது, அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்வது போன்றவற்றை எதிர்ப்பதே சரியானது.

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்