கூகிள் கெத்தாக மாற…

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

விழியன்



கூகுள் ஆண்டவர் இல்லையென்றால் மென்பொருள்துறையில் ஒரு நாளை ஓட்டுவது கூட கடினமாகிவிடும். அப்படி நான் உபயோகிப்பது இல்லை என்று கதை விடுபவர்கள் யாரும் இந்த குறிப்புகளை வாசிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க கூகுளையே கடவுளாக பூஜிப்பவர்களுக்க்கான மற்றொரு பக்தனின் காணிக்கையாக.

1. இது அல்லது அது
தேடலின் போது சில சமயம் இது அல்லது அது எது இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை அடிக்கடி ஏற்படும். எ.காட்டாக சூர்யா மற்றும் ஜோதிகா யாருடைய பேர் இருந்தாலும் அந்த முகவரிகள் தேவை என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம் அப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Google Search: சூர்யா OR ஜோதிகா

“சூர்யா ஜோதிகா” என்று தேட கொடுத்தால் இருவர் பெயர் இருக்கும் முகவரிகள் மட்டும் கிடைக்கும்.

2. அங்க என்ன நேரம்?
உலகில் சில முக்கியமான நகரங்களின் தற்போதைய நேரம் என்ன என்பதை அறிய மிக எளிதாக ஒரு வசதி உள்ளது.

Google Search: “Time in Bangalore”

என்று கொடுத்தால் போது. சென்னையை இந்த தேடலில் காணவில்லை.

3. கணக்கில் சிங்கம்
நமக்கு தான் இப்ப எல்லாம் 1 + 1 என்பதற்கு கூட கணிப்பான் தேவை படுகின்றது. கூகிள் இன்னும் வாழ்வை சோம்பல் படுத்த ஒரு வசதி கொடுத்துள்ளது. எப்படி?
Google Search: 123 * 1234
என்று கொடுத்து பாருங்கள்

4. வலைதளத்தில் மட்டும் எப்படி தேடுவது?
உங்களுக்கு ஒரு வலைதளத்தில் ஏதாவது ஒரு வார்த்தை தேடவேண்டும். உதாரணத்திற்கு திண்ணை வலைதளத்தில் இருக்கும் ஜெயமோகன் பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன வார்த்தை தேடவேண்டுமோ அதை கொடுத்துவிட்டு, அந்த வலைதளத்தில் முகவரியை Site:<வலைத்தள முகவரி> என கொடுத்தால் நமக்கு தேவையான பக்கங்கள் மட்டும் கிடைக்கும்
Google Search: “ஜெயமோகன்” site:thinnai.com

5.கோப்புகளில் மட்டும் தேட
கோப்புகளுக்குள் தேடவும் கூகுளில் வசதியுள்ளது. கோப்புகள் மட்டும் தேவை என்றால்
filetype:pdf,doc,ppt என்று தரலாம். அந்த கோப்புகள் மட்டும் கிடைக்கும். (குகிள் 101KB அளவுள்ள கோப்புகளை மட்டுமே பட்டியலிடுகின்றது என ஒரு வதந்தி உள்ளது)

Google Search: “தமிழ்” filetype:doc
(இந்த தேடலில் நான்கு விடை மட்டும் வருகின்றது)

6. எண் விளையாட்டு.
பல சமயங்களில் வருடங்கள் அல்லது எண்கள் சரியாக தெரியாது. 1990ல் இருந்து 2000 வரை ஏதோ ஒரு ஆண்டு அல்லது 10ல் இருந்து 25 வரை இருக்கும், ஆனால் சரியாக எந்த எண் என்று தெரியாது, இது போல பயங்கர இக்கட்டான் நிலையில் எப்படி கூகிள் ஆண்டவரிடம் கோரிக்கை வைப்பது, வைக்கும் விதத்தில் கோரிக்கை வைத்தால் பலன் கிட்டும்.
அதற்கு 1900..2000 என கொடுக்க வேண்டும்.

Google Search: இந்தியா 1945..1948

6.1 சில சமயம் 10க்கு மேல் அல்லது 10க்கு கீழ் என்று மட்டும் தெரியும், அப்பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

10.. (பத்திற்கு மேல் தேட)
..10 (பத்திற்கு கீழ் எண்களை தேட)

7. தவிர்க்க முடியாத வார்த்தைகள்
கூளிள் தேடலில் மொத்தம் 32 வார்த்தைகளை கொடுத்து தேடலாம். முன்னர் பத்து வார்த்தைகள் மட்டுமே தேடிவந்தது. இந்த முப்பத்தி இரண்டில் சில வார்த்தைகள் மிக அவசியமாக நமக்கு தோன்றலாம். அந்த வார்த்தைகளை மிக அவசியம் தேவை என்று நமக்கு தோன்று அப்போது அந்த வார்த்தைகளை ” ” உள்ளே போட்டு தேடினால் பலன் கிடைக்கும்

Google Search : “இந்தியா வெற்றி”

பல தேடும் போது இந்தியா + வெற்றி என தேடுவதை பார்த்துள்ளேன். கூகிள் தேடுஇயந்தரத்தில் ஒவ்வொரு வார்த்தை நடுவிலும் AND தானாக சேர்த்துக்கொள்ளும். ஆனவே + போட வேண்டிய அவசியம் இல்லை

8. பதிலை தேடுங்கள்.கேள்விகளை அல்ல..
ஒரு சின்ன விடயத்தை மனிதில் வைத்துக்கொண்டால் கூகிள் தேடலில் கை தேர்ந்தவாராகிவிடலாம். கூகிள் பதில்களில் இருந்து தான் தேடுகின்றது, ஆகவே பதில்களை மட்டுமோ தேடல் சொற்களில் வைக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் தேடுவது போல தமிழிலும் தேட ஆரம்பியுங்கள். தேட தேட தான் பல பக்கங்கள் வலைதலைங்கள் கூகுளுக்குள் பட்டியலிடப்படும். தமிழில் ஒருங்கிறியில் (Unicode) பக்கங்கள் மட்டுமே தேடப்படுகின்றது.

தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க..

நன்றி : google.com

உங்களுக்கு தெரிந்த கொத்துக்களை இங்கே இந்த இழையில் இடவும்.


விழியன்
http://vizhiyan.wordpress.com

umanaths@gmail.com

Series Navigation

விழியன்

விழியன்