பட்டுக்கோட்டை தமிழ்மதி
தாழிட்டுக்கொண்டு
தனிமையில் நான் மட்டும்.
கத்தும் சத்தம்
கதவு தாண்டி கால் வைக்க
காக்கைகள்
வான்வெளியில் மேடை போட்டு
வாய்விட்டுச் சொல்வதென்ன?
கா எனும் சொல்கொண்டு
காகம் பேசும் மொழியென்ன?
தம் மொழியால்
காகமெல்லாம் கூடியதென்ன
கூடி ஓன்றாய்க் கோருவதென்ன?
மனிதர்கள் கூடும் மாநாடுகளைவிட
இந்த
ஐந்தறிவிகள் கூடுவது
அர்த்தமுள்ளதாயிருக்கும்.
என்னையும் மனதையும்
திறந்து வரச்சொன்ன காக்கைகள்
எனக்கிப்போது
ஆறாம் அறிவோடு.
இந்தக் காக்கைகள்
கம்பமில்லாத கொடிகளாய்ப்
பறந்து ஏன்
காற்று காட்டும்
கருப்புக் கொடியாக வேண்டும்?
சுதந்திரக் காற்றுக்குச் சோதனையா
உயிரை உயர்த்திக் காட்டி
உலகிற்குக் கண்டனமா?
ஓ…
ஒருகாகம்.
இந்தக் காகத்தோடு
எல்லாக் காகங்களும்
கத்திற்று கா…கா… என.
எம் வாசலில்
ஈழத்திலிருந்து
இங்கு வந்து விழுந்த
அடிப்பட்ட காகம்.
—
பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்
tamilmathi@tamilmathi.com
- திரைப்படங்கள் புதியவை – விடயங்கள் பழையவை
- பெரியபுராணம் – 94 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சுவரில் ஒரு சி(ரி)த்திரம்;;
- பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்!
- வடக்கு வாசல் இசை விழா
- கடவுள்களின் கலக அரசியல்
- நெய்வேலியில் ஆனந்த மழை!( 25-6-06)
- சமூக நீதியும், இட ஒதுக்கீடும் – சில மாற்றுச் சிந்தனைகள்
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா? -10
- மயக்கம் தெளியவில்லை
- முறிவு
- கபாவில் சமாதியா
- சுரதா
- கடிதம்
- காலம் 26 வது இதழ் வெளிவந்துவிட்டது
- கழிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே !
- தேசிய பாரம்பரியக் கலை பாதுகாப்பு மையம்
- கேப்டனும் பேண்டேஜ் பாண்டியனும்
- கடித இலக்கியம் -11
- கல்மரம் ஆசிரியர் – திலகவதி
- யாமறிந்த மொழிகளிலே…(கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா)
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 6. சட்டங்களும் அரசியலும்
- மறைக்கப்பட்ட வரலாறு:அனார்ச்சாவின் கதை
- அபத்தம் அறியும் நுண்கலை – 2
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-7)
- கீதாஞ்சலி (79) மனவலியைத் தாங்குவேன்!
- கேள்விகளும் பதில்களும்
- கா எனும் குரல்…
- தாஜ் கவிதைகள் .. 1
- பறவையின் தூரங்கள்
- உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு
- இட ஒதுக்கீடு
- அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன
- அருந்ததி ராய்
- மங்களவரி சுங்கபாண்டி – கருப்பு ஆப்பிரிக்காவின் பாரம்பரிய கணிதம்
- தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!
- தமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு “நச்”சுனு இருக்கா..??
- அணு சோதனையால் மாசுபட்ட மண் – வெளிவரும் சூழலியல் பயங்கரம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 27