காவிரி நீர் போர்

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

நீல் பெல்கி

The Cauvery Water War:

Neil Pelkey

Division of Environmental Studies

University of California

Davis, CA 95616

USA

nwpelkey@ucdavis.edu

காவிரி நதியும் அதன் துணை நதிகளும், தென்னிந்தியாவின் நதி நீர்களில் மிகவும் முக்கியமானதாக இல்லையென்றாலும், மிகவும் சிக்கலானது; பிரச்னையானது. ஏறத்தாழ பாதி நதி கர்நாடகாவில் இருக்கிறது, மீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. மெகாங் (தெற்காசியா), கொலராடோ(மேற்கு அமெரிக்கா), ஒகவாங்கோ(தெற்கு ஆப்பிரிக்கா) போலவே, பல மாநிலங்கள் வழியாகச் செல்லும் ஒரு நதி. மழைக்காலங்களில் இந்த மாநிலங்கள் சமாதானமாக வாழ்கின்றன. மழை பொய்த்தாலோ, அந்த சமாதான வாழ்வு காற்றில் பறந்துவிடுகிறது. 1995லும், 1996 ஆரம்பத்திலும், மழைக்காலம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கமுடியாமல் பொய்த்தபோது, இந்த சமாதான வாழ்வு மறைந்தது. பிராந்திய வன்முறை அதிகமாகி தேசிய அளவில் இடையீடு வேண்டியிருந்தது. மத்திய அரசாங்கத்தில் அப்போது இருந்த நரசிம்மராவ் கர்னாடக அரசிடம் பேசி 6 டி.எம்.ஸி தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனக்கு மேலும் 6.5 டி.எம்.சி தண்ணீர் வேண்டும் எனக் கேட்டது. அந்தத் தண்ணீர் கொடுக்கப்படவில்லை. அதுவே டாக்டர்.ஜே.ஜெயலலிதா அவர்கள் 1996 தேர்தலில் தோற்றதற்கு ஒரு காரணம். மழைக்காலம் திரும்பி வந்ததும், அந்தப் பிரச்னை தலையெடுக்கவில்லை. ஜெயலலிதாவின் தோல்வியும் அரசியல் ஞாபகத்திலிருந்து மறைந்துவிடாது, இந்தப் பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களும் தானாக மறைந்துவிடாது.

மீதமுள்ள இந்தக் கட்டுரை கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி பேசும்.

கர்நாடகத்துக்கு காவிரியின் முக்கியத்துவம்

தமிழ்நாட்டுக்குக் காவிரியின் முக்கியத்துவம்

இந்தப் பிரச்னையின் மூல காரணங்கள்

இதனைத் தீர்க்க நீண்டகால தீர்வு

கர்நாடகா மாநிலம் தென்னிந்தியாவின் சக்தி தளம். இதன் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் அதிவேகத்தில் வளரும் நகரங்களில் முதல். இதில் உயர்தொழில்நுட்ப தொழிற்சாலைகளும், மருந்து தொழிற்சாலைகளும், வேதிப்பொருள் தொழிற்சாலைகளும் இருப்பதால், இவைகளுக்கு அதிக அளவு தண்ணீரும் மின்சாரமும் வேண்டும். ஏர்கண்டிஷன் நகரம் என இதன் மிதமான தட்பவெப்பத்தால் அறியப்படும் பெங்களூரில் ஏராளமான வளரும் மத்தியதர வர்க்கம் இருக்கிறது. இதில் ஹ்வுலட்-பேக்கர்ட், ஐ.பி.எம், கெண்டகி ஃப்ரைடு சிக்கன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தலைமையிடமாகக் கொண்டிருக்கின்றன. இதன் அதி வேக வளர்ச்சியின் ஆட்டம் காணும் அடித்தளம், மழைக்காலம் பொய்க்கும்போது வெகு எளிதில் தெரிந்துவிடுகிறது. வியாபார நிறுவனங்களைக் காப்பாற்ற, குடித்தனக் காரர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மின்சார வெட்டும் தண்ணீர் வெட்டும் வந்துவிடுகிறது. தண்ணீர் சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு சில மணிநேரங்களே தண்ணீர் வருகிறது. பிறகு சில நாள்களுக்கு முழுவதும் தண்ணீர் இல்லாமல் போகிறது. தண்ணீர் காலை 4 மணிக்கு வந்தால், அதிகாலையில் எழுந்து தண்ணீர் பிடிக்க வேண்டும். சாதாரணமாக அமைதியான பெங்களூர்காரர்கள் இது போன்ற சில நாட்களிலேயே சிடுசிடுப்பு அடைந்துவிடுகிறார்கள். இப்போதைக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை மழை பொய்க்கும் சிலகாலமே வருகிறது. ஆனால் இது தற்காலிகமான விஷயமே. தொழிற்துறையும், நகரமயமாதலும் தொடர்ந்து பெங்களூரில் நடந்து கொண்டே இருக்கும். இன்னும் 5 வருடங்களில் இது மைசூருடன் இணைந்துவிடும். ஒரு காலத்தில் மைசூர் பெங்களூரின் எல்லையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தண்ணீரின் தேவை அதிகரிக்கும்போது, கர்நாடகாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தண்ணீரை தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடுவதே முடியாத காரியமாகிவிடும்.

1996இல் சமீபத்திய காவிரி நதிநீர் போராட்டத்தின் போது, கர்நாடக முதல்வராக இருந்த தேவே கவுடா, தமிழ்நாட்டின் காவிரி தண்ணீர் தேவையை மிகைப்படுத்தியது என்றும், தவறான அடிப்படையில் எழுந்தது என்றும் கூறினார். அவர் உண்மையிலேயே இதனை நம்பினாரா இல்லையா என்பது தேவையில்லாதது. தமிழ்நாட்டு மக்கள் கர்னாடகாவில் ஓட்டுப் போடுவதில்லை. ஆகவே, தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் தேவை அதிகமாகும் போது, கரநாடகாவின் அரசியல் தலைவர்கள், மழை நிறைய இருந்த காலத்திலும் கூட, தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை திறந்துவிடுவது என்பது மத்திய அரசாங்கத்திடமிருந்து கட்டளை வந்தால் மட்டுமே செய்வார்கள். தமிழ்நாட்டிடமிருந்து வரும் எத்தகைய வாதங்களும், கர்நாடக அரசை திருப்தி செய்யமுடியாது. நான் கர்நாடகாவின் தண்ணீர் தேவை பற்றிய விஷயங்களை அதன் ஆதாரங்களை காட்டாமல் சொல்கிறேன் என்பதை உணர்கிறேன். இந்த தேவைகள் உண்மையானவையா கற்பனையானவையா என்பது எடுக்கப்படும் அரசியல் முடிவுகளுக்கு தேவையில்லாதது. தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று முடிவு எடுத்த பின்னரும், கர்னாடகாவில் நடந்த வன்முறை நடந்தும், தண்ணீரை திறந்துவிடாமல் இருப்பதை வைத்துப் பார்த்தால், தண்ணீருக்கான தேவை மிகவும் தீவிரமாக கர்னாடகாவில் உணரப்படுகிறது என்பதைத்தான் அறிந்து கொள்ளவேண்டும். இந்த வன்முறை மீண்டும் நடக்கும் என்பதற்கான தேவையான ஆதாரங்கள் இருக்கின்றன.

காவிரி – தமிழ்நாட்டுக்கு எப்படி முக்கியம்

மத்திய தமிழ்நாட்டுப் பகுதியின் விவசாயத்துக்கு காவிரி தான் உயிர் மூச்சு. வரைபடம் 1தமிழ்நாட்டில் காவிரிபாய்ச்சல் பகுதியும், வடியும் பகுதியும் தரப்பட்டுள்ளது. 1992-ல் சராசரி விவசாயப் பயிர்க் குறிப்பீடுகள் தரப்பட்டுள்ளன. அமெரிக்க கடல் மற்றும் சுற்றுச் சூழல் நிருவாகத்தின் துருவத் துணைக் கோள்களிலிருந்து இவை கிடைத்துள்ளன. இந்தக் குறியீடு காடுகளின் நலன், விவசாயம் , மற்றும் பயிர்ப் பகுதிகளைக் குறிக்கிறது. பசுமை நிறத்தில் உள்ள பகுதிகள் அதிகக் குறிப்பிட்டெண்கள் உடையவை. கரும்பச்சை நிறத்தில் உள்ளவை அடர்த்தியான காடுகளையோ அல்லது, அடர்த்தியான விவசாயப் பகுதிகளையோ குறிப்பவை. தஞ்சாவூர் மற்றும் நாகப் பட்டினம் மாவட்டங்களில் ஒரு பசுமையான நரம்பினைப் போல காவிரி பாய்கிறது. கடற்கரைப் பகுதிகள் – டெல்டாவின் வடக்கிலும் , தெற்கிலும் – மஞ்சள் நிறமாயுள்ளன. இது ஒரு பருவத்தில் மட்டும் செய்யபடும் விவசாயத்தையோ அல்லது, அடர்த்தியற்ற காடுகளையோ குறிப்பவை. சிவப்பு நிறத்தில் உள்ளவை விவசாயம் அருகிய அல்லது பாழ்நிலங்களைக் குறிப்பது. காவிரியை நம்பியுள்ள ஐந்து மாவட்டங்கள் தமிழ்நாட்டின் உணவுப் பயிர்களில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன.லிது மிகவும் முக்கியமானது . ஏனெனில்

– விவசாயத்திற்குத் தகுதியான நிலங்களில் மூன்றில் ஒரு பங்கில் இந்த 40 சதவீத உற்பத்தி நடைபெறுகிறது.

– குறைந்த அளவிலான உரம், மின்சாரம், நிலத்தடி நீரை இது பயன் படுத்துகிறது.

– 44 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்பை இது அளிக்கிறது.

– தமிழ்நாட்டின் மிக உற்பத்தித்திறன் வாய்ந்த கரும்பு விவசாயிகளும் இங்கு தான்

மேலே உள்ள படங்கள் ஆகஸ்ட்- அக்டோபருக்கான சராசரிகள் குறிப்பீடுகள். தமிழ்நாட்டின் கீழ்க்கடற்கரைப் பகுதியைப் பார்த்தால் இந்த மாதங்களில் மேற்சொன்ன பகுதிகள் தான் இந்த வரண்ட மாதங்களில் விவசாய உற்பத்தி செய்துள்ளதைக் காணலாம்.

காவிரி நீர் இல்லாமல் தமிழ்நாடு உயிர் வாழ்வது கடினம் என்பது வெறும் அரசியல் பேச்சல்ல. உண்மையிலேயே காவிரி தான் தமிழ்நாட்டின் உயிர் நாடி. கடற்கரைப் பகுதிகளைப் பொறுத்தவரை இது மிகுந்த உண்மை. இந்தச் சார்பு நிலை சீர்பெறுவதும் சந்தேகமே.உண்மையில் இது மோசமாகத் தான் கூடும் காரணங்கள் :

தமிழ்நாட்டின் ஜனத்தொகை அதிகரிப்பு.

காவிரிப் படுகைக்கு வெளியே உள்ள நிலங்களும் நிலத்தடி நீரையே பெரிதும் நம்பத்தொடங்கியுள்ளன. உட்புறப் பகுதிகளில் கிணறு ஆழமாக நோண்ட வேண்டியுள்ளது. தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத நிலை பல இடங்களில் இதனால் நிலத்தடி நீரை மேலே கொண்டுவரும் செலவும் அதிகரித்துள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் உப்பு நீர்க் கசிவினால் நிலம் கெடத் துவங்கியுள்ளது. இதனால் தண்ணீர் பயன்படத் தக்கதாய் இல்லாமலாகி வருகிறது. இந்த நிலை மோசமானால் சரி செய்வதே முடியாமல் ஆகிவிடும்.

சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் குடிநீர்த் தேவைகள் அதிகரிப்பால், விவசாயத்திற்கு நீர் கிடைப்பது கூட அரிதாகிவருகிறது.

பிரசினையின் வேர்கள்

மேலே தரப்படும் சித்திரம் அவ்வளவு அழகானதல்லதான். தமிழ் விவசாயிகள் போராட்டமும், கர்நாடக விவசாயிகள் போராட்டமும் முற்றி மோதல் நேர்ந்தால் நிலைமை இன்னமும் மோசமாகித் தான் போகும். இந்தப் பிரசினையின் இன்றைய வேர்களையும், நேற்றைய வேர்களையும் நாடித் தெரிந்து கொள்வதே பிரசினையின் தீர்விற்கு உதவும்.

1837-ல் திருநெல்வேலி கலெக்டர் பர்ட் என்பவர் காடுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி உணர்ந்தார். தாமிரபரணி நீர்ப்படுகைப் பகுதிகளில் மேய்ச்சலையும், புஞ்சை விவசாயத்தையும் கட்டுப்படுத்தினார். 30 வருடம் கழித்து ஆர் கே பக்கிள் என்ற இன்னொரு கலெக்டர், இன்னமும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். ஒவ்வொரு கிராமமும் மேய்ச்சலுக்கு என்ன எல்லைக்குள் இருக்க வேண்டும் என்று நியமித்தார். உயர்ந்த மேட்டுப் பகுதிகளில் காப்பிப் பயிரிடுவதையும் அவர் கட்டுப்படுத்தினார். அவர் சொன்ன காரணம், இந்த காப்பித் தோட்டங்கள் நீரை உறிஞ்சிவிடுவதால், இரண்டாம் பருவப் பயிர்கள் திருநெல்வேலிப் பகுதியில் சாத்தியப் படாமல் போவதைக் கண்டார். ஏற்கனவே திருநெல்வேலியின் விவசாயம் பிரிட்டிஷ் ராணிக்குப் பெரும் சம்பாத்தியத்தை அளித்து வந்தது. இந்த வருமானத்தை மேம்படுத்துவதே இவர்களின் நோக்கம். காபியினல் கிடைக்கும் குறுகியகாலப் பயன்கள், விவசாயத்தின் நீண்ட காலப் பலன்களைப் பாதிப்பதை இவர் உணர்ந்தார். அவர் முயற்சி பெரும் வெற்றி என்று சொல்லமுடியாது. கீழ்மலைச் சரிவுப் பகுதிகளில் காப்பித் தோட்டம் தொடரத்தான் செய்தது. பாபநாசம் குற்றலத்தைச் சுற்றியுள்ள வரண்ட பகுதிகளைத் தவிர்த்துப் பார்த்தால், மற்ற பகுதிகள் அடர்த்தியான காடுகளுடன் தான் இருந்தன. (மக்லீன் 1855)

திருநெல்வேலி இப்படி வருமுன் காக்கும் முயற்சியைத் தொடரத்தான் செய்தது. மெட்ராஸ் பிரெஸிடென்ஸியின் கீழ் இருந்த காடுகள் காப்பு அலுவலர் இதைத் தொடர்ந்தார். பெனிங்டன் என்ற அப்போதைய கலெக்டரும் கர்னல் பெடோம் என்ற காடுகள் காப்பு அலுவலரும் இந்தக் காப்புப் பணியைப் பற்றி விரிவாக எழுதவும் செய்தனர். அவர்கள் சொன்னது இது தான்: அப்போது அழிந்துகொண்டிருக்கும் காட்டுப் பகுதிகள் வெள்ளம் வரக் காரணமாய் இருந்தன. இதனால், கால்வாய் வெட்டும் செலவு அதிகரித்தது. இதனால் இரண்டாம் பருவப் பயிர்கள் வளர முடியாது ஆயின. சிங்கம்பட்டி காடு இப்படி அழிந்துவந்தால் காடே இல்லாமல் போய்விடும் என்பது பெனிங்டனின் அச்சம். காப்பித் தோட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதும் வெள்ளப் பிரசினையை ஏற்படுத்தும் என்பது அவர்கள் கூற்று. காப்பித் தோட்டக்காரர்கள் சட்டத்துக்குப் புறம்பாக கண்டபடி காட்டை வெட்டியது காட்டுத்தீக்கும் காரணமாயிற்று. நிதிக்குழு, காப்பித் தோட்டத்தால் வரும் அதிக வருமானத்தைக் காரணம் காட்டி இந்தக் காட்டு அழிப்பைத் தடுக்காமல் விட்டது. இங்குள்ள ‘பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி ‘ என்ற கம்பெனி இன்றும் கூடப் பிரசினைக்கு இந்தப் பகுதியில் காரணமாய் விளங்குகிறது.

நீண்ட காலத் தீர்வு

இந்தப் பாதுகாப்பு முயற்சிகளால் தாமிரபரணி நீர் நிலை நன்கு பாதுகாக்கப் பட்ட நீர் நிலையாய் விளங்குகிறது. வரைபடம் 2-ல் நாம் திருநெல்வேலி மாவட்டத்தில் நீளும் ஒரு நரம்பு போல தாமிரபரணியைக் காண்கிறோம். இந்த நீர்நிலையால், திருநெல்வேலி முதல் மூன்று உற்பத்தித் திறன் கொண்ட பகுதிகளில் ஒன்றாய் விளங்குகிறது. பாதுகாக்கப்பட்ட நீர்நிலை என்ன நலன் பயக்கும் என்பது ஒரு தீர்வாய் நாம் காணவேண்டும். ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை பகுதிகள் (படம் 2) இப்படிப் பாதுகாக்கப் படாததால் பெரும் ஊறு கொண்டுள்ளன. இந்த பள்ளத்தாக்குப் பகுதிகளின் அடிவாரங்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. காட்டிற்கும், உயரத்திற்கும் உள்ள உறவை படம் 3 சொல்கிறது. கீழ்நிலைக் காடுகள் மறைந்து போய் விட்டன. கீழ்மலைப் பகுதிகள் பெரும் அழிவுக்கு ஆளாகியுள்ளன.

காவிரியின் தலைவாயில் மீது தமிழ் நாடு எந்தக் கட்டுப்பாட்டையும் கொள்ள இயலாது. ஆனால் பவானி, மொய்யாறு போன்ற கிளைகளின் மீது கட்டுப்பாடு செலுத்த இயலும். 1800-களில் வைகை வருடம் முழுதும் கடல் நோக்கி ஓடியதுண்டு. பெண்ணையாறும், பாலாறும் அவ்வாறே ஓடின. இந்த நீர்நிலைகளின் மீது தமிழ்நாடு கட்டுப்பாடுகளைச் செலுத்த முடியும். வானிலை அறிக்கைகளின் படி, கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த வானிலை மாற்றங்கள் மழை நாட்களை தமிழ்நாட்டில் 13 நாட்கள் குறையும் படி செய்துள்ளன. ஆனால், மழை வீழ்ச்சியின் மொத்த அளவு குறையவில்லை. அதாவது மழை நாட்கள் குறையினும், மழைப் பொழிதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ,நீர்நிலைகளைக் காக்கும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பாதுகாப்பினால்

– மழை நீர் வீணாவது தடுக்கப் படுகிறது.

– நிலத்தடி நீர் சேமிக்கப் படுகிறது

– மண் அரிப்புத் தடுக்கப் படுகிறது.

– நதிநீர்ப் பாயும் நாட்கள் அதிகமாகின்றன.

இது வெறும் ஊகம் அல்ல.இந்தப் பாதுகாப்பு முயற்சிகள் திருநெல்வேலிக்கு கடந்த நூறு வருடங்களும் நன்மை அளித்துள்ளன. மதுரையின் காடுகள் பாதுகாப்பு அலுவலர் வில்சன் ஐந்து வருடங்களுக்குள்ளாக நீர்நிலையை மீட்டு விட முடியும் என்று கண்டறிந்தார்- காடுகள் அழிவைத் தடுக்க முடிந்தால், மாடுகள் மேய்ச்சலைக் கட்டுப் படுத்த முடிந்தால். பழனி மலை பாதுகாப்பு கவுன்சிலும் கரவகுறிச்சி ரிசர்வ் காடுகளை அழிக்க முற்படாமல், விறகுக்காக மரத்தை வெட்டும் ஆட்களுக்கு பதிலியாக மரம் நடும் பணியை அளித்துள்ளார். (1995). இது தான் காவிரிப் பிரசினையைத் தீர்க்கும் வழிகாட்டி.

நீர்நிலைகள் பாதுகாப்பு என்பது சுலபமான விஷயம் அல்ல. அரசியல் சார்புள்ள சமூகக் காடுகள் திட்டமோ, கிராமக் காடுகள் திட்டமோ பயன் அளிக்காது. சிறு பயன்கள் இந்தத் திட்டத்தில் விளைந்தாலும் பெரும் பரப்புகளைப் பாதுகாக்க இந்தத் திட்டங்கள் உதவமாட்டா. வணிகத் தோட்டங்களும் பிரசினையைத் தீர்க்காது. சந்தைகளை நம்பிய இது மாதிரி திட்டங்கள் நீண்ட கால விவசாயப் பிரசினைக்குத் தீர்வாகா. காடுகள் இலாகா, அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் இணைந்து செய்லபடவேண்டும். 20 கோடி ரூபாய் செலவில் ஐந்து லட்சம் ஹெக்டேர் நிலங்களைப் புதுப்பிக்கும் இந்தப் பணி. வருடத்திற்கு 20 கோடி விவசாய மானியமாகச் செலவாகும் போது இது பெரும் தொகை அல்ல. அங்கோலாவிலும், மத்திய நாமிபியாவிலும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 400 கோடி செலவு செய்து குடிநீர் அளிக்க முயல்கிறார்கள் என்பதை எண்ணும் போது இது நிச்சயம் பெரிய தொகை அல்லவே அல்ல.

***

http://www.des.ucdavis.edu/staff/pelkey/cauvery.htm

Series Navigation