கால வெளி கடந்த மயக்கங்கள்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

அருண்மொழி ஒளவை


1) அவன் கொண்ட காதல்

ஒரு பிரளயத்தை கடைந்தெடுத்து
உலகத்தை நோக்கி திருப்பும் அளவு
உள்ளத்தில் உறைந்து ததும்பும்
ஒரு வெற்றிடம்.

உன் முத்தங்களால் இந்த வெற்றிடத்தை நிரப்பு;
அவன் கவிதைகளால் இதை வ(வெ)டிக்கட்டும்.

2) நீட்சி

மனதின் ஆழத்தை பொருத்தே
இடம், காலம், ஜென்மங்களை தாண்டிய
உறவுகள்.

அவளை…. ? அது எப்படி சாத்தியம் ?
ஒரு தொலைக்க முடியாத தூரத்தில் வைத்திருக்கிறேன்;
உயிரின் ஆழத்தில் உள்ள ஆன்மாவின் வெற்றிடத்தில்;
அது இட கால ஜென்மங்களை கடந்து நிற்கும் தூர ஆழம்.

3) எனக்கு என்ன வேண்டும் ?

‘உனக்கு என்ன வேண்டும் ? உனக்கு என்ன வேண்டும் ? உனக்கு என்ன வேண்டும் ? ‘
என கேட்டுக்கொண்டே இருக்கிறாய் ?
நானும் கொடுத்து கொண்டே இருக்கிறேன்
என் அன்பு முத்தங்களை..முத்தங்களை.
அது சரி கண்ணே, உனக்கு என்ன வேண்டும் ?

4) யாராயிருந்தால் என்ன ?

நீ யாராயிருந்தால் என்ன ? எங்கிருந்தால் என்ன ? எப்படி இருந்தால் என்ன ?
பிரச்சனை ஒன்றும் இல்லை எனக்கு; பேசு கண்ணே!
பேசாத ஒவ்வொரு கணமும் நாம் ஒரு சில யுகங்களை இழக்கிறோம்!

—-
arunmozhi.auvai@gmail.com

Series Navigation

அருண்மொழி ஒளவை

அருண்மொழி ஒளவை