மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உண்மையா அது ? செத்துக் கிடந்தால்,
உயிர் இழப்பாகுமா உனக்கு
என்னை நீ இழப்பதில் ?
புதைக்குழியின் ஈரம் என்னுடைய
சிரத்தின் மேல் இறங்குவதால்,
பரிதியின் தீக்கனல்
வெளிச்சமும்
குளிர்ச்சியாய்ப் போகுமா உனக்கு ?
என்னினிய நேசனே!
உன்னத மடைந்தேன் உன்மடல் படித்து,
உன்னுடையள் நான்,
உனக்கு அப்பெரும் வெகுமதி !
உன் ஒயினை ஊற்றிக்
கொடுக்கவா
நடுங்கும் என் கரங்களில் ?
மரணக் கனவுகளை விட்டுவிட்டு
மறுபடி என் ஆத்மா
வாழ்வின் முதற்படி ஏறும் ! அன்பனே !
நோக்கிடு என்னை,
மூச்செடு என் மேல்,
நேசிப்பாய் என்னை.
அறிவுச்சுடர் பெண்டிர்கள்
அவற்றை
விந்தையாய்க் கருதார்,
காதலுக் கிழப்பேன் எனது
நில புலங்களை !
காதலுக் கிழப்பேன் எனது
பட்டப் படிப்பை !
உனக்காக
விட்டு விடுவேன்
எனது மரண எதிர்பார்ப்பை !
சுவையான
சொர்க்கக் காட்சிக்குப் பதிலாக
மாற்றிக் கொள்கிறேன்
உன்னுடன் வாழும்
மண்ணுலகுக்கு !
********************
Poem -23
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
Is it indeed so? If I lay here dead,
Wouldst thou miss any life in losing mine?
And would the sun for thee more coldly shine
Because of grave-damps falling round my head?
I marvelled, my Belovழூd, when I read
Thy thought so in the letter. I am thine–
But . . . so much to thee? Can I pour thy wine
While my hands tremble? Then my soul, instead
Of dreams of death, resumes life’s lower range.
Then, love me, Love! Look on me–breathe on me!
As brighter ladies do not count it strange,
For love, to give up acres and degree,
I yield the grave for thy sake, and exchange
My near sweet view of Heaven, for earth with thee!
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 28 2007)]
- கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8
- நாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.
- தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்!
- காதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !
- குமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு
- எறும்பாய் ஊர்ந்த உலகம்
- ஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.
- வெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்
- இலை போட்டாச்சு ! (31) திடீர் அடை – ஐந்தாம் வகை
- ஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை
- மீண்டும் காண்பேனா?
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை
- ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை
- பிறைநதிபுரத்தானுக்கு பதில்
- சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்
- நரேந்திரன் அவர்களுக்கு,
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
- வாழ்வின் பயணம்
- மெழுகுவர்த்தி
- பெரியபுராணம்-133 (நிறைவுப் பகுதி)
- என்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்?
- “கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
- தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்
- அணுகுமுறை
- நிலமகளின் குருதி! (இறுதிப் பகுதி)
- காட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.
- ஸஹாரா
- மாத்தா-ஹரி அத்தியாயம் 12
- உன் பாதை…
- பூங்கொத்து கொடுத்த பெண்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)