புதியமாதவி
சாகித்திய அகதெமியின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி மும்பை பிரபாதேவி
ரவீந்திர நாட்டிய மந்திர் கலையரங்கில் 17, 18, 19 அக்டோபர் 2004ல்
நடைபெற்றது.கவிதை இந்தியாவின் குரல் முதல் முறையாக ஓரிடத்தில்
சங்கமம் ஆன நிகழ்வு. இந்தியாவின் 22 மொழிக்கவிஞர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
மொழிகள் வேறானால் என்ன ?
புள்ளிகள் புள்ளிகள்தான்
கோடுகளும் வீடுகளும்தான்
மாறிப்போனது,
அவரவர் வாசலில்
அவரவர் கோலங்கள்.
சின்னதாக, பெரிதாக, மாக்கோலமாக, தேர்க்கோலமாக, பூக்கோலமாக,
வண்ணப்பொடிகளின் ரங்கோலியாக ..
தேசியமில்லாத இந்த தேசத்தில்
அவரவர் முகங்களுடன் ஒப்பனை இல்லாமல்
‘ நீ பெரியவனா நான் பெரியவனா
உன் இனமா என் இனமா
உன் மொழியா என் மொழியா ‘
என்ற கேள்விகளின் கட்டுடைத்து ஒருவரின் குரலை மற்றவர்கள் மதித்து
ஒருவருடன் ஒருவர் இனிய முகத்துடன் கைகுலுக்கிக் கொண்ட அற்புதமானக்
காட்சியாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.
அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் அகதெமியின்
செயலாளர் சச்சிதானந்தன். அகதெமியின் தலைவர் கோபிசந்த் நரங் தலைமையுரை
நிகழ்த்தினார்.அய்யப்ப பணிக்கர், குல்ஷர், ஜாவத் அக்தர், பத்மா சச்தேவ்,
அனுபவ்துளசி, சுனிதா ஜெயின்,தர்ணம் ரியாஷ், ப்ரபல்குமார் பாசு, நாகேஷ் கர்மலி,
மோகன் தாக்குரி, இப்ராகிம் அஷ்க், கனகா, விஜயலஷ்மி, சரத் சந்திரா,
மல்லிகா சென்குப்தா,அருந்ததி சுப்ரமண்யம், சூர்யமிஷ்ரா,கீதா, பிரதிபா….
இப்படி 60 கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி 9 அமர்வுகளாக
நடைபெற்றது. பெண்களின் எண்ணிக்கை 30% அதிகமாகவே இருந்தது
நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம். நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டப்படி
நடந்ததும் அரங்க அமைப்பும், பகலுணவு, தேநீர்.. எல்லாம் நிமிடம் தவறாமல்
நடந்ததும் கண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டில்லி அகதெமியின் ராவ், மராட்டியமாநில
செயலாளர் பிரகாஷ் இருவரையும் மும்பை இலக்கிய உலகம் மனம் திறந்து
பாராட்டியது.
கவிஞர்கள் அனைவரும் முதல் கவிதையை அவரவர் தாய்மொழியில்தான் வாசித்தனர்.
அதன்பின் தான் ஆங்கில/இந்தி மொழியாக்கங்கள்.
வயோதிகம் என்ற கவிதையை கன்னடக்கவிஞர் வாசித்தவுடன் கண்ணிமைகள்
ஈரமாகியது. ‘கட்டிலுக்கும் கழிவறைக்கும் நடுவில் வாழும் முதுமையில்
ஈரம் என் உடலுக்கும் கட்டிலின் விரிப்புக்கும் நடுவில்தான்..இனிமேல்தான்
சாவா.. நான் எப்போதோ செத்துவிட்டேன் ‘
தன் முதல் குழந்தைக்கு முதன் முதலில் கடைவீதிச் சென்று புதுச்சட்டை
வாங்கிய அனுபவத்தை ஜெய்ப்பூரின் கவிஞர் கவிதையாக்கியபோது வாழ்வின் ஒவ்வொரு
அனுபவங்களும் கவிதைதான் கவிஞர்களுக்கு என்பது புரிந்தது..
மும்பையின் குண்டுவெடிப்பு அந்த இருண்ட இரவு..மறுநாள் விடியலில்
குழந்தை ஒன்று பள்ளிக்கு செல்வதைக் கண்ட கவிஞர் ‘இதோ எழுந்து நடக்கிறது என் இந்தியா ‘
என்று எழுதிய கவிதையை வாசித்தவுடன் மும்பை இலக்கிய உலகம்
ஒவ்வொரு வரிக்கும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தங்கள்
உணர்வுகளை உணர்த்தியது.
பிரதிபா (பெங்களூர்) painting/repairing/construction/deconstruction
என்றெல்லாம் கவிதை வாசித்தப்போது இப்படி எல்லாம் கூட வாழ்க்கையை
உருவகப்படுத்த முடியுமா ? என்ற கேல்வி எழத்தான் செய்தது.
வயதும் அனுபவமும் கைகோர்த்த முதுமையில் சிலரின் கவிதைகள்
தத்துவ மழை பொழிந்தன.
மலையாளத்தில் கவிஞர் சித்தானந்தன் அவருக்கே உரிய அத்தனைத் திறமைகளையும்
இருபது நிமிடங்கள் கொட்டித் தீர்த்துவிட்டார்.
பஞ்சாபி, வங்காள கவிஞர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால்
மணிப்பூர், சிந்தி, ஒரியா மொழிக்கவிதைகளின் வளர்ச்சியும் அவர்களின் சிந்தனையுன்
கண்டு அசந்துவிட்டேன்.
உருதுக்கவிஞர் வாசித்த சமுத்திரம் என்ற கவிதையில் கடலின் அலைகள் எதையோ
மறந்துவிட்டு தேடுவதாக சொல்லிக்கொண்டேவந்து கடைசி வரியில் அலையே
நீதான் சமுத்திரம் என்பதாவது நினைவிருக்கிறதா என்று முடித்தவுடன்
எங்கள் கரவொலியில் கடலலையே ஒதுங்கிப்போனது.
கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களும் சென்னையிலிருந்து வந்திருந்தார்.
கவிதைகள் வாசித்தார்.
இந்திய மொழியில் கவிதைப் புத்தகம் ஒன்று 25 பதிப்புகள் வெளிவந்திருக்கிறது.
அதுவும் அந்தக் கவிஞன் வாழ்கின்றபோதே அவனுக்கு அந்தச் சிறப்புக் கிடைத்திருக்கிறது
என்றால் அந்தச் சிறப்புக்கு உரிய கவிஞர் மு.மேத்தா தான். அவருடைய
கண்ணீர்ப்பூக்கள் கவிதைநூல் 25வது பதிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது
என்ற அறிமுகத்துடன் கவிஞர் மு. மேத்தா அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதிசயத்தில் புருவங்கள் உயர அந்த எளிமையானக் கவிஞனின் கவிதையை
கேட்க ஆவலுடன் கவிஞர்கள் தங்கள் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்ததை
சொல்லித்தான் ஆகவேண்டும்.
‘திருவிழாக்கள் வரும்போது
ராஜகவிகள் பாட வருகிறார்கள்
நாங்கள்-
பாடவரும்போது
திருவிழாக்கள் வருகின்றன.. ‘
என்று அகதெமியின் விழாவை வரவேற்று ஆங்கிலமொழியாக்கத்தை அவர்
வாசித்தபோது மற்றவர்களுக்கு அது புதுமையாகவே இருந்தது.
‘ஈராக்
போரில் அழிந்தப்பிறகுதான்
உலகத்திற்கு தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
யாரிடமிருக்கின்றன என்பது ‘
மேத்தாவின் இந்தக் கவிதை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மொழியாக்கம்/அயல்மொழியை வாசிக்கும் திறமை இதில்
கஜல் கவிஞர்கள் (இந்தி, உருது) பெரும் வரவேற்பை
பெற்றச் சூழலில் அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு
கவிஞர் மேத்தா ஒரு சந்தக்கவிதையை அப்படியே தமிழில் சொல்லி
‘இதை எப்படி எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் என் தாய்மொழி தமிழ்
மொழி உணர்த்தியதை அப்படியே முழுமமையாக உணர்த்த முடியாது ‘ என்று ஆங்கிலத்தில்
சொன்னவுடன்….
மொழியாக்கங்களில் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு கிட்டியது.
மொழியாக்கம் என்பது மூலத்தின் நகலாக இருக்கவே முடியாது.
மொழியாக்கம் மூலப்பிரதியைப் பார்த்து வரைந்ததாக மட்டுமே இருக்கமுடியும்
என்பதை ஒவ்வொரு படைப்பாளியும் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.
Translation and its Dycontents என்ற தன் புத்தகத்தில் மிகச்சிறந்த
மொழி பெயர்ப்பாளாராக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கும் கிரெகரி ரபஸா
சொல்லியிருப்பது நினைவுக்கு வந்தது.
‘மொழிபெயர்ப்பு என்பது சாத்தியமில்லாதது. ஒரு கோழிக்குஞ்சை அப்படியே
ஒரு வாத்து குஞ்சாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. கிட்டத்தட்ட மிக அண்மைவரையில்
போகலாம் ‘
மும்பையில் வாழும் இந்தியாவின் அனைத்து மொழி கவிஞர்களும் கவிபாரதி
நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின்
அனைத்து அமர்வுகளையும் சிறப்புச் செய்தியாக்கியது என்றாலும் மற்ற
பத்திரிகைகளும் ஊடகங்களும் மராட்டிய மாநிலத்தின் தேர்தல் முடிவுகளில்
தன் பக்கங்களைச் சூடாக்கிக் கொண்டிருந்தது.
மராட்டிய மாநில அகதெமியின் செயலாளர் பிரகாஷ் பதம்பிரெக்கர் நன்றியுரையுடன்
நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
….>>> புதியமாதவி,
மும்பை.
- உரத்த சிந்தனைகள்- 6
- வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?
- நுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி
- தமிழின் மறுமலர்ச்சி – 4
- தமிழின் மறுமலர்ச்சி – 5
- அஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 7
- அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்
- மெய்மையின் மயக்கம்-24
- கவிபாரதிகள்
- பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 8
- ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்
- வெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்
- ப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை
- ஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை
- கடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு
- தமிழம் டாட் நெட்
- பி பி ஸி செய்திக் குறிப்பு- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் பற்றிய ஆய்வு
- அவசர உதவி வேண்டுகோள்!
- கடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்
- கடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை
- கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!
- கடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்
- மனுஸ்மிருதியை நிலைநாட்ட பட்டப்பெயர்கள்….
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்
- அவளோட ராவுகள் -1
- நீண்ட இரவு தொடர்கிறது…
- ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்
- கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…
- நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்
- கங்கவரம்
- மனித அறிவியலின் பரிணாமம்
- பாசத்தைத்தேடி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44
- சும்மா இருடா
- ஆத்திரக் கும்மி
- நெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- உறவென்றால்…
- மழைப் பயிர்
- குடை பிடிக்கும் நிழல்
- நித்யா
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்
- அம்மாவின் சமையல்
- அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்
- பெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- என் அழகும் மாறும்
- காத்திருப்பு
- பேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )
- 21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)
- நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்
- ஆவிகள் புசிக்குமா ?!
- பொதுச்சிவில் சட்டத்துக்கு ஆதரவாக…
- வாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த